ஆண்களின் செக்ஸ் உணர்வை அதிகரிக்க உதவும் உணவுகள்!!!

By: Viswa
Subscribe to Boldsky

ஆங்கிலேயர்கள் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு முன்பு முட்டை சாப்பிடுவார்களாம். இத்தாலியர்கள் காரமான உணவு மற்றும் சாக்லேட்களை உட்கொள்வார்களாம். ஏன், நம்ம ஊர் காமசூத்ரா என்ன சொல்கிறது தெரியுமா.. செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு முன் சாப்பாடு சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்கிறது. ஆம், செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்க உணவு பழக்கம் மிகவும் தேவையான ஒன்று. உங்களுக்கு தெரியுமா? சில உணவுகளுக்கு ஆண்களின் செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் தன்மை உள்ளது.

ஆண்கள் பொதுவாகவே செக்ஸில் அதிக நாட்டம் கொண்டவர்கள். செக்ஸில் உச்சம் அடையும் வரை விடமாட்டார்கள். இதை கொச்சையாக என்ன வேண்டாம். உங்களது மன அழுத்தத்தை குறைக்க செக்ஸ் உதவுகிறது. மற்றும் உங்களது ஆரோக்கியமான உடலிற்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கிய பங்கு செக்ஸிற்கும் உண்டு. படுக்கையில் வீழ்ந்துவிட்டால் வாழ்க்கையே வீழ்ந்தது போல எண்ணுவார்கள் ஆண்கள். பொதுவாகவே செக்ஸ் உணர்வுகளை தூண்டும் உணவுகளை பாலுணர்வு உணவுகள் என ஒரு வகை பிரித்து வைத்துள்ளனர் நிபுணர்கள். இங்கு இந்த கட்டுரையின் மூலம் ஆண்களின் செக்ஸ் உணர்வை அதிகரிக்க உதவும் உணவுகளைப் பற்றி தான் தெரிந்துக் கொள்ளப் போகிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதாம்

பாதாம்

பருப்புகளின் அரசன் என்று அழைக்கப்படும் பாதாம் பருப்பில் வைட்டமின் பி2, புரதம், வைட்டமின் ஈ, கால்சியம், போன்ற நிறைய சத்துகள் இருக்கின்றன. அரபு நாடுகளில் செக்ஸ் உணர்வை அதிகப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்படும் உணவு பாதாம் ஆகும். விந்தணுக்கள் அதிகரிக்க பாதாம் பெருமளவில் பயன் தருகிறது.

தேன்

தேன்

செக்ஸ் உணர்வை அதிகரிப்பதில் சிறந்ததாக கருதப்படுவது தேன், இது செக்ஸிற்கு தேவையான எனர்ஜியை அதிகரிக்க உதவுகிறது, தேனோடு பருப்பு வகைகள் மற்றும் பழ வகைகளை சேர்த்து சாப்பிடுவது மேலும் நல்ல வலுவினை தரும்.

வெண்ணெய் பழம் (அவகேடோ)

வெண்ணெய் பழம் (அவகேடோ)

வெண்ணெய் பழம் எனப்படும் அவகேடோவில் நிறைய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் உயர் ரக புரதம், வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் தீங்கு விளைவிக்காத கொழுப்பு அமிலச்சத்துகள் என முக்கியமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை டெஸ்டோஸ்டிரோனை நமது உடலில் தயாரிக்க உதவுகிறது. டெஸ்டோஸ்டிரோன் நமது செக்ஸ் உணர்வை நன்கு தூண்டும் தன்மை கொண்டதாகும். இந்த அனைத்து ஊட்டச்சத்துகளின் கலவையும் உங்களது செக்ஸ் உணர்வை உச்சத்திற்கு எடுத்து செல்ல நன்கு உதவுகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழம்

ஆண்களின் செக்ஸ் பாகத்தை நன்கு தூண்டும் தன்மை வாழைப்பழத்தில் இருக்கிறது. இந்திய உணவுப்பழக்கத்தில் உண்ட பிறகு கடைசியாக ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். காரணம் நீங்கள் வாழைப்பழம் உட்கொண்டால் அன்றைய நாள் முழுதும் உங்களது செக்ஸ் உணர்விற்கு பஞ்சமே இருக்காது.

தேங்காய்

தேங்காய்

நம் உடலில் சக்தியை அதிகரிப்பதில் தேங்காய்க்கு நல்ல பங்கு உண்டு. அதிலும் விந்தணு உற்பத்தியை அதிகரிப்பதில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் தேங்காய் பாலை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு தினம் தினம் தேனிலவு தான்.

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழம்

உலகத்திலேயே சுவை மிகுந்த பழம் என கூறப்படும் பேரிச்சம் பழம் ஆண்களின் செக்ஸ் உணர்வை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆயுர்வேதத்தில், பேரிச்சம் பழத்தை உட்கொள்வதினால் ஆண்களுக்கு விந்துணு அதிகரிக்கிறது என கூறப்பட்டுள்ளது. மற்றும் நீண்ட நேர செக்ஸ் உறவிற்கு பேரிச்சம் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் உதவுவதாய் கூறப்பட்டுள்ளது.

 முட்டை

முட்டை

செக்ஸ் உறவில் பெண்களையும் உங்களுக்கு நிகராய் உச்சம் கொண்டு வர முட்டையை பாலில் கலந்து முந்திரி மற்றும் பாதாம் பருப்பையும் சேர்ந்து இருவரும் பருகி வந்தால், உங்கள் செக்ஸ் உறவு விடியும் வரை தொடரும், அந்த அளவு முட்டையில் இருக்கும் புரதம் சக்தி அளிக்கிறது என கூறப்படுகிறது.

பூண்டு

பூண்டு

இயற்கையாகவே பூண்டிற்கு நமது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வைக்கும் தன்மை இருக்கிறது. அதிலும் முக்கியமாக இடுப்பு பகுதிகளில்.

உங்களது இரவினை இனிமையதாக மாற்றிட பூண்டை கொஞ்சம் சாப்பிடுங்கள், மறவாமல் உங்களது துணைவியருக்கும் தாருங்கள். இது உங்களது செக்ஸ் உறவை மேம்படுத்த உதவும்.

மாம்பழம்

மாம்பழம்

ஆண்களின் செக்ஸ் உணர்வை தூண்டுவதில் மாம்பழத்திற்கு முக்கிய பங்குண்டு. ஆண்களுக்கு விறைப்பு தன்மையை அதிகரிக்க மாம்பழம் உதவுகிறது.

 காளான்

காளான்

காளானில் இருக்கும் துத்தநாகச்சத்து (Zinc) ஆண்களின் செக்ஸ் உணர்வு மற்றும் எனர்ஜியை அதிகரிக்க உதவுவதாய் கருதப்படுகிறது.

வெண்டைக்காய்

வெண்டைக்காய்

வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் அறிவாற்றல் வளரும் என படித்திருப்பீர்கள். ஆனால், ஆண்களுக்கு பாலுணர்வும் அதிகரிக்கும் என்பதே உண்மை. வெண்டைக்காயை தினமும் சாப்பிட்டால் இளமை திரும்பும் என சொல்கிறது இந்தியர்களின் ஐதீகம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

செக்ஸ் பாகங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதில் ஆலிவ் ஆயில் முன்னிலையில் உள்ளது. மற்ற காய்கறி எண்ணெய்களை விட ஆலிவ் ஆயிலில் சீக்கிரமாக செரிமானம் ஆகக்கூடிய தன்மை உள்ளது ஆகும்.

வெங்காயம்

வெங்காயம்

இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் தன்மை வாய்ந்தது வெங்காயம். மற்றும் செக்ஸ் உணர்வுகளை தூண்டுவதிலும் நல்ல பயன் தரும் உணவாக வெங்காயம் கருதப்படுகிறது.

எள்ளு

எள்ளு

எள்ளு விதைகள் மிகவும் ஊட்டச்சத்துகள் நிறைந்தவை ஆகும். இதில் இருக்கும் உயர் ரக வைட்டமின் ஈ, இதை ஆண்களின் உணவு என கூற வைக்கிறது. ஏனெனில் ஆண்களின் ஆயுளை மட்டுமல்லாது செக்ஸ் உணர்வுகளையும் நீட்டிக்க பயன் தருகிறது என நம்பப்படுகிறது.

அருகம்புல்

அருகம்புல்

அருகம்புல்லில் செக்ஸ் வைட்டமின் என சொல்லப்படும் வைட்டமின் ஈ-யின் சத்து அதிகமாக உள்ளது. எனவே, ஆண்கள் காலை அருகம்புல்லை உட்கொண்டால் இரவுக்கு நல்ல பயன் தரும் என்பது மாற்று கருத்து இல்லாத உண்மை ஆகும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

ஆண்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகரிக்க ஏற்ற உணவாக அடுத்து கூறப்படுவது கொத்தமல்லி. பெரும்பாலும் நமது அனைத்து இந்திய உணவுகளிலும் இடம்பெறும் உணவு பொருள் கொத்தமல்லி ஆகும். தினமும் மூன்று முறை கொத்தமல்லி ஜூஸ் குடித்தால் ஆண்களுக்கு தேவையான பலம் அதிகரிக்கும் .

கற்றாழை

கற்றாழை

கற்றாழையின் ஜூஸை தேன் கலந்து தினமும் மூன்று வேலை பருகி வந்தால் உங்களது இடுப்பு பகுகளுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை அழிக்கும் மற்றும் செக்ஸ் உறவுக்கும் நல்ல பயன் தரும். கற்றாழை ஜூஸ் உங்களுக்கு மருந்தகங்களில் பொதுவாக கிடைக்கிறது அதை தேனுடன் கலந்து பருகி வந்தால் ஆண்களின் செக்ஸ் உறவிற்கு நன்மை விளைவிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

17 Natural Foods For Men Who Want a Boost Up Their Love Life

Every men want to enjoy his love life at the max. Here is the list of food habits that helps to boost up men love life.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter