Latest Updates
-
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
A முதல் Z வரை உள்ள ஆரோக்கியத்தைக் காக்கும் சூப்பர் உணவுகள்!!!
எவ்வளவு தான் சம்பாதித்தாலும், ஆரோக்கியம் இல்லையென்றால் எல்லாம் வேஸ்ட். ஆனால் தற்பொழுது யாரும் ஆரோக்கியத்தை பற்றி சிந்திப்பதே இல்லை. ஓடும் உலகத்தோடு ஓடுவதில் காட்டும் நோக்கத்தை ஆரோக்கியத்தில் காட்டுவதே இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு நல்ல உணவு, மன அழுத்தமின்மை, நல்ல காற்று போன்றவை அவசியம். இதை விடுத்து கெடுதல் தரும் செயலையும், நச்சுத்தன்மை உள்ள உணவையும் ருசி பார்ப்பதை வாடிக்கையாக்கி கொண்டோம்.
இதுப்போன்று வேறு: இந்த பழங்களை டெய்லி சாப்பிட்டு வந்தா ஆரோக்கியமா இருக்கலாம்...!
நல்ல உணவு என்றால் என்ன? என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். நாம் அன்றாடம் உண்ணும் உணவில் என்ன சத்து இருக்கின்றது என்று நமக்கு தெரியுமா? இப்படி கேள்வி கேட்டால் அனைவரும் தெரியுமே என்பார்கள். ஆனால் செய்வது அனைத்தும் தெரியாதது போன்று தான் இருக்கும். நன்றாக தெரிந்தால் ஏன் துரித உணவின் பெருக்கம் நாட்டில் இருக்க போகின்றது.
அவசியம் படிக்க வேண்டியவை: இந்தியாவில் சுலபமாக கிடைக்கக்கூடிய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!!!
சத்தான பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் உள்ள புரதம், வைட்டமின்கள், கனிமச்சத்து, இரும்புச்சத்து போன்றவை ஆரோக்கியமான வாழ்க்கையை நமக்கு தருகின்றன. இவற்றால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு பல வகைகளில் கிடைக்கின்றன. அப்படி இருக்கும் சத்துக்களை A முதல் Z வரை காண்போம் வாருங்கள்.

A என்றால் அவகேடோ
இதில் வாழைப்பழங்களை விட கூடுதலான பொட்டாசியம் (இரத்த அழுத்தத்தை குறைக்கிறது உதவுகிறது) உள்ளது. இது உடலை நச்சுகளின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கின்றது. இதன் மூலம் கெட்ட கொழுப்பு நீங்கி விரைவில் முதிர்ச்சி அடைவதை தடுத்து உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.

B என்றால் ப்ராக்கோலி
இது நோய் எதிர்ப்பு தன்மையை கொடுக்கின்றது. மற்றும் மற்ற காய்கறிகளை விட இதில் கால்சியம் அதிகம் உள்ளது. இதற்கு எலும்பு வலு இழப்பு மற்றும் புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புகள் உண்டு.

C என்றால் கேரட்
கேரட் கொழுப்பை குறைப்பதுடன், அவற்றின் ஆரஞ்சு நிறமி நோய் எதிர்ப்பு தன்மையை கூட்டுகிறது. இது கண் பார்வை நன்றாக இருக்க உதவுகின்றது. இதன் பீட்டா கரோட்டின் வயதான பின் கண் பாதிப்பு அடைவதை போக்குகின்றது.

D என்றால் டார்க் சாக்லெட்
இது செல் சேதம் அடைவதை தடுக்கின்றது. இதில் ஆக்ஸிஜனேற்றம் முழுமையாக உள்ளது. இதில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் டிரிப்தோபன் மன அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது.

E என்றால் முட்டை
இது ஒரு முழுமையான உணவு (தாய்ப்பாலுக்கு பிறகு இதுவே முழுமையான உணவு). முட்டை உடலுக்கு தேவை. இதில் அமினோ அமிலம் அதிகம் உள்ளது. இதன் லுட்டின் கருவிழி சீரழிவிற்கு எதிராக போராடுகின்றது.

F என்றால் மீன்
இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உடலுக்கு மிக மிக அவசியம். சால்மன், சூரை, மத்தி மற்றும் ஹெர்ரிங்ஸ் போன்ற மீன்களில் இந்த சத்து உள்ளது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து நம்மை காக்க மீன் உண்ண வேண்டும்.

G என்றால் பூண்டு
இது இரத்த ஓட்டத்தை பராமரிக்கிறது மற்றும் இதன்மூலம் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு தோல், முடி மற்றும் நகங்கள் வலுவடைய உதவுகின்றது.

H என்றால் தேன்
ஒரு நாளைக்கு ½ தேக்கரண்டி மேல் தேன் அருந்தக்கூடாது. ஆனால் இதில் பல குணநலன்கள் உள்ளன. பலவித நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. இதை சூடாக்கக் கூடாது. அதோடு சூடான எதனுடனும் கலக்கி உட்கொள்ள கூடாது.

I என்றால் ஐஸ்பெர்க் லெட்யூஸ் கீரை
ஐஸ்பெர்க் லெட்யூஸ் (கீரை வகை) நோய் எதிர்ப்பு தன்மை நிறைந்தது. இதில் மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் உள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு தன்மைக்கு மிக மிக முக்கியம்.

J என்றால் ஜப்பனீஸ் க்ரீன் டீ
ஜப்பனீஸ் க்ரீன் டீ விரைவில் முதிர்ச்சி அடைவதை தடுக்க உதவுகின்றது. இதன் மூலம் உடலின் கொழுப்பு தன்மையை குறைக்க முடியும். ஆகையால் இதை அருந்துவதால் என்றும் இளமையுடன் திகழ முடியும்.

K என்றால் கேல்
கேல் என்பது ஒரு கீரை. இந்த கீரையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதனை அதிகம் உட்கொண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவானது குறைந்து, இதய நோய் வருவதைத் தடுக்கலாம்.

L என்றால் பயறு வகைகள் (Legumes)
முளை கட்டிய தானியங்கள், தினை, பார்லி மற்றும் பயறு போன்றவை உடலில் உள்ள கட்டியை போக்கும். இதில் புரதம் அதிக அளவில் உள்ளதால், உடலுக்கு மிகவும் நல்லது.

M என்றால் கானாங்கெளுத்தி (Mackerel)
கானாங்கெளுத்தி ஒரு வகை மீன். இதில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 அதிக அளவில் உள்ளது. இதில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்து அதிகம் உள்ளது. இதை உணவாக உண்பதால் அதிக நலன் அடைய முடியும்.

N என்றால் நட்ஸ்
நட்ஸ் அதிக அளவு எடுத்து கொள்வதால் விரைவில் முதிர்ச்சி அடைவதை தடுக்க முடியும். இதில் புரதம், நார்சத்து, தேவையான கொழுப்பு, வைட்டமின் மற்றும் கனிமச்சத்து அதிகம் உள்ள காரணத்தால், இது உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்.

O என்றால் வெங்காயம்
அழற்சி, பாக்டீரியா, பூஞ்சை காளான் மற்றும் வைரஸ் போன்ற நோய்களை எதிர்க்கும் சக்தி வெங்காயத்திற்கு உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலின் நச்சு தன்மையை போக்கி, செரிமான சக்தியை அதிகரிக்கும். அதிலும் சிவப்பு வெங்காயம் மிகவும் சிறந்த உணவு.

P என்றால் பார்சிலி (Parsley)
உடலின் உள்ளே இருக்கும் நச்சுக்களை சுத்தம் செய்வதில் பார்சிலி அதிக பங்கு வகிக்கின்றது. இதில் வைட்டமின் சி மற்றும் பி சத்தும், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் முழுமையாக உள்ளது.

Q என்றால் சீமை திணை (Quinoa)
இதில் உடலுக்கு சக்தி கொடுக்கும் எட்டு அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் கால்சியம் மற்றும் இரும்பு அதிக அளவில் உள்ளது.

R என்றால் சிவப்பு பழங்கள்
சிவப்பு பழங்கள் மற்றும் காய்களான ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு குடைமிளகாய், சிவப்பு முட்டைக்கோஸ் மற்றும் சிவப்பு வெங்காயம் போன்றவை உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். இவைகளை உட்கொள்வதால் புற்றுநோய் மற்றும் பக்கவாதத்தை போக்க முடியும்.

S என்றால் பசலைக்கீரை
எதிர்ப்பு சக்தி கொடுக்கும் பசலைக்கீரை பக்கவாதம், இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை போக்கும். பத்து சிறந்த உணவுகளில் ஒன்றான கீரையில் லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் உள்ளதால், உடலுக்கு தேவையான சக்தியை கொடுப்பதுடன் முதிர்ச்சி அடைவதையும் தடுகின்றது.

T என்றால் தக்காளி
இதில் க்யூயர்சிடின் மற்றும் லைகோபைன் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது. இது மனம் மற்றும் உடல் ரீதியான செயல்பாடுகளை காக்கின்றது.

U என்றால் வேக வைக்காத காய்கறிகள்
காய்கறிகளை சமைப்பதால் பலவித சத்துக்களை அழிக்கின்றோம். ஆகவே அதனை பச்சையாகவோ அல்லது அதிகம் சமைக்காமல் அளவாக வேக வைத்தோ சாப்பிடுவது மிகவும் சிறந்தது. இதனால் அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற முடியும்.

V என்றால் காய்கறிகள்
அதிகபட்ச ஆக்ஸிஜனேற்றம் அதாவது எதிர்ப்பு சக்தி மற்றும் வைட்டமின்களை பெற அடர்ந்த பச்சை, சிவப்பு அல்லது பிரகாசமான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற காய்களை உண்ணுதல் அவசியம். அவற்றில் நீர்ச்சத்து இருக்கிறது. உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அதிக அளவில் கொடுப்பதில் இவை சிறந்தது.

W என்றால் வால்நட்
இதில் செம்பு அதிகம் இருப்பதால், கூந்தலுக்கும் உடலுக்கும் மிகவும் நல்லது. இதனால் முடி கொட்டுதலையும், இளநரையையும் குணப்படுத்த முடியும்.

X என்றால் மரச்சர்க்கரை (Xylitol)
இயற்கையான கலோரி இதில் உள்ளது. செயற்கை இனிப்புகளில் உள்ள கெட்ட தன்மைகள் இதில் இல்லை. ஆகவே இது உடலுக்கு எந்த உபாதையையும் ஏற்படுத்தாது.

y என்றால் மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கள்
மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்களான எலுமிச்சை, அன்னாசி போன்றவற்றின் மூலம் உடலுக்கு தேவையான எதிர்பு சக்தியை கொடுக்க முடியும்.

z என்றால் சீமை சுரைக்காய் (Zucchini)
பாஸ்தா போன்ற உணவுகளில் இதை அடிப்படையாக வைத்து செய்வர். இதன் மூலம் மற்ற பாஸ்தாக்களில் வழவழப்பு தன்மைக்காக பூசப்படும் பாஸ்தா கார்ப்ஸால் விளையும் உடல் பருமன், அதிக சர்க்கரை அளவு போன்றவற்றை ஒழிக்க முடியும்.



Click it and Unblock the Notifications











