Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
சிறந்த எண்ணங்களை உருவாக்கும் சூப்பர் உணவுகள்!!!
மனிதர்களின் குணாதிசயங்களாக இருக்கும் எண்ணங்கள் தான் அவர்களின் உணர்வுகளையும், ஹார்மோன் சமநிலையற்ற தன்மைகளையும் வெளிப்படுத்துகின்றன. அவை நல்லவையாகவோ அல்லது கெட்டவையாகவோ இருக்கலாம். மேலும் எண்ணங்களே ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்தவும், சோகமாக்கவும், மனதை புண்ணாக்கவும் மற்றும் காதல் வயப்படவும் வைக்கின்றன. ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சூழல், மனிதர்கள் மற்றும் உணர்வுகள் ஆகியவை கண்டிப்பாக இருக்கும்.
உணவுகளின் மூலமாக எண்ணங்கள் பெரிதளவு மாற்றம் பெறுகின்றன. சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் காதல் உணர்வு அதிகரிக்கும். சில உணவுகளால் உற்சாகம் அதிகரிக்கும். அதே போல, வேறு சில சிறந்த உணவுகள் எண்ணங்களை உயர்த்தும் எலிவேட்டர்கள் போல செயல்பட்டு உங்களை சிறப்பாக சிந்திக்க வைக்கும். இவை நமக்கு நல்ல எண்ணங்கள் மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தையும் கொண்டு வருகின்றன. மேலும், தொடர்ந்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மகிழ்ச்சியுடனும் மற்றும் களிப்புடனும் வாழ முடியும்.
இங்கே சிறந்த எண்ணங்களைத் தூண்டும் சில சிறந்த உணவுகள் பற்றி கொடுத்துள்ளோம். அவை எளிதில் அடையக் கூடிய தீர்வுகளாகவும், உற்சாகத்தை தூண்டும் உணவுகளாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

டார்க் சாக்லெட்
சிறந்த எண்ணங்களுக்கு டார்க் சாக்லெட்கள் உதவுகின்றன. மன அழுத்தத்தை குறைக்கும் ஹார்மோன்களின் அளவைக் குறைத்து, நல்லெண்ணங்களை உருவாக்கும் ஹார்மோன்களை அதிகரிக்கும் தன்மையை கொண்டவையாக டார்க் சாக்லெட்கள் உள்ளன. இந்த அருமையான சாக்லெட் சுவையாகவும், தடையற்ற நல்லெண்ணங்களின் தூண்டுகோலாகவும் இருக்கிறது. எனவே அடுத்த முறை நீங்கள் டென்ஷனாக இருந்தால், இந்த சுவைமிக்க சாக்லெட்டை சாப்பிட முயற்சி செய்யுங்கள். ஐஸ் கிரீம் மற்றும் பான் கேக்குள் போன்றவற்றுடன் சாக்லெட்டை சாப்பிடுவதாலும் நல்லெண்ணங்கள் தோன்றுகின்றன.

கார்போஹைட்ரேட்ஸ்
ஒவ்வொரு நாளும் சரிவிகித அளவில் கார்போஹைட்ரேட்களை சாப்பிடுவதன் மூலம் பெருமளவு மன அழுத்தங்களை குறைக்கவு மற்றும் நல்லெண்ணங்களைப் பெறவும் முடியும். உங்களை மகிழ்ச்சியாகவும் மற்றும் உற்சாகமாகவும் வைத்திருப்பதுடன், உங்கள் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் அற்புத உணவாக கார்போஹைட்ரேட்கள் உள்ளன.

பழங்கள், காய்கறிகள் மற்றும் மற்ற முழுமையான உணவுகள்
தானிங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற முழு உணவுப் பொருட்கள் உங்கள் எண்ணங்களை தூண்டவும் மற்றும் அழுத்தம் தரும் ஹார்மோன்களை குறைக்கவும் செய்து, உங்களுக்கு இதமான அனுபவத்தைத் தருகின்றன. தங்களுடைய தினசரி உணவில் இந்த முழு உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்பவர்கள் குறைந்த மன அழுத்தம் கொண்டவர்களாகவும், எண்ணங்கள் தொடர்பான பிரச்னைகள் இல்லாதவர்களாகவும் உள்ளனர். உங்களுடைய தினசரி உணவுகளில் தானிங்கள், கோதுமை மற்றும் அரிசி போன்ற முழு உணவுகளை எளிதில் சேர்த்துக் கொள்ள முடியும். அதே போல, பழங்கள் மற்றும் ப்ரூட் சாலட்களை சாப்பிடுவதாலும் நல்ல எண்ணங்கள் உருவாகும்.

காப்ஃபைன்
டீ மற்றும் காபியில் உள்ள காப்ஃபைனில் அழுத்தத்தை குறைக்கும் குணமும், உற்சாகமூட்டும் தன்மையும் கொண்டதாக உள்ளது. எனவே டீ, காபி சாப்பிடுவதாலும் நல்ல எண்ணவோட்டத்தை தூண்ட முடியும். இவை நல்லெண்ணங்களையும் மற்றும் சக்தியை அதிகரிக்கும் பானங்களாக உள்ளன. எனினும், காப்ஃபைனுக்கு அடிமையாக்கும் குணமும் பெருமளவு உள்ளதால் டீ மற்றும் காபியை அளவுடன் குடிப்பது நல்லது. மேலும், அதிகளவில் இந்த பானங்களை பருகுவதும் உடல் நலத்திற்கு நல்லதல்ல.

இனிப்புகள்
ஜாம்கள், கேக்குகள் மற்றும் பிற பேக்கரி பண்டங்களை சுவைத்து பார்ப்பதும் கூட எண்ணங்களை செம்மைப்படுத்த உதவுகின்றன. மன அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் உங்கள் எண்ணங்களை சிறக்கச் செய்யவும் இனிப்புகளை சாப்பிடுவது இன்றியமையாத செயலாகும். இனிப்பான உணவுகள் சிறப்பான எண்ணங்களின் தூதுவர்களாக உள்ளன.

இதர உணவுகள்
மீன்கள், பன்றியின் தொடைக்கறி மற்றும் இறைச்சி ரொட்டி ஆகிய உணவுகளும் எண்ணங்களைத் தூண்டும் சிறந்த உணவுகளாகும். அவை எண்ணங்களை மேம்படுத்தவும் மற்றும் உங்களுக்கு இதமான உணர்வையும் தர முனைகின்றன. செர்ரி மற்றும் பெர்ரி ஆகியவை உங்கள் காதல் உணர்வைத் தூண்டுகின்றன. இந்த காதல் சார்ந்த உணவுகளுக்கு பாலுணர்வைத் தூண்டும் திறன்களும் உள்ளன என்பது மற்றுமொரு இரகசியம். இந்த உணவுகளை உட்கொள்ள முயற்சி செய்து சுவைத்து, இனித்து, இரசித்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறோம்.



Click it and Unblock the Notifications