Latest Updates
-
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம்
உடல் வலியை குறைக்கும் சிறந்த உணவுகள்!!!
இன்றைய சூழலில் ஐந்தில் இருவர் தீவிரமான உடல் வலியால் அவதிப்படுகின்றனர். முதுகு வலி, மூட்டு வலி அல்லது தசைப்பிடிப்பு போன்ற வலிகளால் தான் பெரும்பாலும் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி உடல் வலி அல்லது மூட்டு வலி அல்லது தசை பிடிப்பு ஏற்படும் போது நீங்கள் பலவீனமடைந்து, அன்றாட வேலையை கூட சரிவர செய்ய முடியாமல் போகும். போதிய உடற்பயிற்சி செய்யாததாலும், தவறான வாழ்க்கை முறையை பின்பற்றுவதாலும் தான் இவ்வகை வலிகள் ஏற்படுகிறது. அதற்கு ஒருவர் சீரான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். மேலும் தவறான உடல் தோரணைகளை தவிர்த்து ஆரோக்கியமாக உண்ண வேண்டும்.
இவ்வகை வலிகளை குறைக்க சந்தையில் பல மருந்துகள் விற்கத் தான் செய்கிறது. ஆனால் அதனை உட்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம் அல்லவா? அதற்கு பதில் ஏன் இயற்கை உணவுகளை நாம் தேர்ந்தெடுக்க கூடாது? ஆரோக்கியமாக உண்ணுவதால் தீவிரமான உடல் வலி மட்டும் குறையாமல் ஏற்கனவே நீங்கள் அனுபவிக்கும் மற்ற வலிகளும் குறையும். உடல் வலியை குறைக்க பல உணவுகள் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தினமும் அந்த உணவுகளில் கொஞ்சம் எடுத்து கொண்டால் போதும், உடல் வலியும் மன பாரமும் குறையும்.
அப்படிப்பட்ட உணவுகளில் ஒருசில உணவுகளைப் பற்றி பார்க்கலாமா...

செர்ரி
இந்த சிறிய சிவப்பு நிற பழத்தில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், அழற்சி நீக்கி என்சைம்களும் உள்ளது. அது உங்கள் மூட்டு வலியையும், கீல்வாதத்தினால் ஏற்படும் வலியையும் குறைக்க உதவும். தினமும் 45 செர்ரி பழங்களை உட்கொண்டால், இவ்வகை வலிகள் குறையும்.

இஞ்சி
ஆஸ்பிரின் மாத்திரைக்கு மாற்றாக அமைகிறது இஞ்சி. அந்த மாத்திரை செய்வதை போலவே இஞ்சியும் உங்கள் தலை வலி மற்றும் மைக்ரைன் வலியை குறைக்கும். அதனை சுலபமாக உங்கள் உணவில் சேர்த்தும் கொள்ளலாம். உங்கள் உணவில் தினமும் கொஞ்சம் இஞ்சி சேர்த்து கொள்வது மிகவும் பயனை அளிக்கும்.

கடல் உணவுகள்
கடல் உணவுகள், முக்கியமாக மீன்களில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது. அதனால் அது உடல் வலி மற்றும் அழற்சியையும் நீக்கும். ஒமேகா-3 உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். அதனால் வலிகள் குறையும். மேலும் மீனில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் இருதய குழாய் நோய்களுக்கு மிகவும் நல்லது. உங்கள் உணவில் மீனை சேர்த்து கொண்டால் அல்லது மீன் எண்ணெய் மாத்திரை எடுத்து கொண்டால் தீவிரமான உடல்வலி கண்டிப்பாக குறையும்.

மஞ்சள்
திசு அழிவு மற்றும் அழற்சி ஏற்படாமல், உடலை காக்க மஞ்சள் பெரிதும் உதவுகிறது. மேலும் நரம்பியல் அமைப்பு சீராக வேலை செய்யவும் அது உதவி புரிகிறது. உங்களுக்கு தசை பிடிப்பு அல்லது காயம் ஏதும் ஏற்பட்டால் மஞ்சளை அதன் மீது தடவினால் வலியும் அழற்சியும் குறையும்.

காபி
ஒரு கப் செர்ரிகளை விட காபியில் அதிகமாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. அதனால் அது சிறந்த வலி நிவாரணியாக விளங்குகிறது. தீவிரமான தலைவலி மற்றும் மைக்ரைன் பிரச்சனை உள்ளவர்கள் காபியை பயன்படுத்துகின்றனர். ஹேங்-ஓவர் மற்றும் மைக்ரைன் பிரச்னைக்கு ஒரு கப் காபி சிறந்த மருந்தாக விளங்கும்.

தயிர்
செரிமான பிரச்சனை அல்லது அசிடிட்டி பிரச்சனையால் வயிற்று வலி ஏற்பட்டால் அதற்கு தயிர் சிந்த மருந்தாக விளங்கும். அதனை உங்கள் உணவோடு சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். அல்லது அப்படியேயும் சாப்பிடலாம்.

புதினா
புதினா சூயிங் கம்மை மென்றால் நற்பதமான மூச்சு காற்றை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் தசை பிடிப்பு மற்றும் குடல் பிரச்சனைகளால் ஏற்படுத்தும் எரிச்சலையும் குறைக்கும். புதினா எண்ணெயை பயன்படுத்தினால், தலைவலி குறையும். புதினாவை மூலிகை ஆஸ்பிரின் என்றும் அழைக்கலாம்.

காரமான மிளகு
இவை கண்களில் நீரை வரவைப்பதோடு நிற்காமல், உடல் வலியையும் குறைக்கும். கீல்வாத வலியை குறைக்க காரமான மிளகு பெரிதும் உதவும். தினமும் சிறிதளவு அதை உட்கொண்டால் நல்ல பயனை அளிக்கும்.

கிரீன் டீ
பொதுவாக உடல் எடையை குறைக்க கிரீன் டீ பெரிதும் உதவும். ஆனால் அதில் ஆண்டி-ஆக்சிடன்ட் குணங்கள் இருப்பதால் வீக்கங்களை குறைக்கவும் அது உதவும். தினமும் ஒரு கப் கிரீன் டீ பருகினால் அது பல நன்மைகளை அளிக்கும்.

ஆலிவ் எண்ணெய்
மெடிட்டரேனியன் பகுதிகளில் இருந்து கிடைக்கும் இந்த எண்ணெய், வலி மற்றும் வீக்கங்களை குறைக்க உதவும். அதிலும் சமையலுக்கு ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
இந்த உணவுகள் எல்லாம் மூட்டு வலி மற்றும் தசை வலிகளை குறைப்பதால், தனியாக அதற்கென மருந்துகள் உண்ண வேண்டியதில்லை. மேலும் இவையெல்லாம் உங்களுக்கு நல்லபடியாக உதவும் என்று நம்புகிறோம்.



Click it and Unblock the Notifications
