Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
'ரா'வா.. இதை சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும்!
பொதுவாக காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவது தான் மிகவும் நல்லது என்று சொல்வார்கள். ஆனால் காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதால், அதில் உள்ள சத்துக்கள் அப்படியே கிடைப்பதோடு, உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களும் கரையும். குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால், ஆரோக்கியமான முறையில் உடல் எடையானது குறையும்.
எப்படியெனில், இத்தகைய உணவுகளில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அந்த உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றலை வழங்குவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.
இப்போது டயட்டில் இருக்கும் போது பச்சையாக சாப்பிடக்கூடிய சில உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக இந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதற்கு முன், அதனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பசலைக்கீரை
பசலைக்கீரையை வேக வைத்து தான் சாப்பிடுவோம். ஆனால் அந்த பசலைக்கீரையைப் பச்சையாகவும் சாப்பிடலாம். இதனால் இது உடல் எடை குறைவதற்கு உதவியாக இருக்கும். மேலும் உடலுக்கு வேண்டிய வைட்டமின் கே மற்றும் இரும்புச்சத்தும் கிடைக்கும்.

பீட்ரூட்
உடல் எடையை குறைக்க முயலும் போது, டயட்டில் இருப்பதால், ஒருசில சத்துக்கள் கிடைக்காமல், சில நேரங்களில் இரத்தத்தின் அளவு குறைந்த இரத்த சோகை ஏற்படும். ஆகவே தினமும் பீட்ரூட்டை பச்சையாக சாப்பிட்டால், இரத்தத்தின் அளவு அதிகரித்து, உடலும் பிட்டாக இருக்கும்.

கேரட்
கேரட்டை பச்சையாக சாப்பிட பலருக்கு பிடிக்கும். இத்தகைய கேரட் கண்களுக்கு மட்டுமின்றி, உடலுக்கு வேண்டிய ஆற்றலை வழங்கும். ஆகவே சோர்வாக இருக்கும் போது, கேரட்டை பச்சையாக சாப்பிடுங்கள்.

வெள்ளரிக்காய்
பெரும்பாலான சாலட்டுகளில் இந்த உணவுப்பொருளானது நிச்சயம் இருக்கும். அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை அவ்வப்போது உட்கொண்டால், அதில் உள்ள அதிகப்படியான தண்ணீர் வயிற்றினை நிரப்பும்.

முள்ளங்கி
முள்ளங்கியைக் கூட பச்சையாக சாப்பிடலாம். ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டும். ஏனெனில் இது வாயுத் தொல்லையை ஏற்படுத்திவிடும்.

தக்காளி
தக்காளியை பச்சையாக சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறையும்.

முளைக்கட்டிய பயிர்
முளைக்கட்டிய பயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் அழகாகும்.

கேல்
கேல் கீரையில் வைட்டமின் கே அதிக அளவில் இருப்பதால், இதனை வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பச்சையாக சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

தேங்காய்
தேங்காயை சாப்பிட்டால், உடலில் உள்ள ஆபத்தான கிருமிகள் அழியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும் வயிற்றில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டிருந்தால், அப்போது தேங்காயை சாப்பட்டால், அதிலிருந்து விடுபடலாம்.

சோளம்
உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால், சோளத்தை பச்சையாக சாப்பிடுங்கள். மேலும் இதில் புரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், இது உடலுக்கு மிகவும் நல்லது.

வெங்காயம்
வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரையும். மேலும் வெங்காயம் உடலுக்கும் மிகவும் நல்லது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
தினமும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை பச்சையாக சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். மேலும் நீரிழிவு நோயாளிகள் கூட இதனை சாப்பிடலாம்.

செலரி
பச்சையாக சாப்பிடக்கூடிய கீரைகளில் செலரி கீரையும் ஒன்று. இதனை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், வயிறுகளில் ஏற்படும் தொற்று நீங்கும். மேலம் உடலில் தங்கியிருக்கும் ஆபத்தான பாக்டீரியாக்களும் அழிக்கப்படும்.

டர்னிப்
பெரும்பாலானோருக்கு டர்னிப்பை பச்சையாக சாப்பிட பிடிக்காது. இருப்பினும், இந்த காய்கறியை வாரத்திற்கு ஒருமுறை பச்சையாக சாப்பிட்டால், விரைவில் உடல் எடையானது குறையும்.

எலுமிச்சை
எலுமிச்சையின் ஒரு துண்டை தினமும் சப்பி சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கொழுப்புக்கள் குறைவதோடு, மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடலாம்.



Click it and Unblock the Notifications