Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
என்ன பண்ணாலும் எடை குறையவே மாட்டேங்குதா? அப்ப இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...டக்குனு குறைஞ்சிடுமாம்!
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் உடல் பருமன் பிரச்சனையால் அவதியடைந்து வருகிறார்கள். ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் உடல் எடை அதிகரிக்கிறது. உங்கள் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை நீங்கள் செய்கிறீர்களா? எதுவும் பலனளிக்க வில்லையா?
உடல் எடையை குறைக்க கலோரி பற்றாக்குறை உணவைப் பின்பற்றுவது அவசியம் என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் சில அடிப்படை விதிகள் உள்ளன. அவற்றை எடை இழப்பு உணவு திட்டத்தில் இருக்கும்போது நாம் அடிக்கடி கருத்தில் கொள்ள மறந்து விடுகிறோம்.

பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி, நல்ல பலனை பெற அவற்றை உங்கள் வாழ்க்கைமுறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த உதவிக்குறிப்புகளுடன் நீங்கள் கலோரி பற்றாக்குறையைப் பின்பற்றி, தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது வொர்க்அவுட் செய்ய வேண்டும். பின்னர், உங்கள் எடை குறைய ஆரம்பிக்கும். இக்கட்டுரையில், உடல் உடல் எடையை குறைக்க உதவும் உணவு குறிப்புகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
நீர் உட்கொள்ளல்
கோடைகாலத்தில் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம். ஏனெனில், இது உங்கள் வளர்சிதை மாற்ற செயல்முறையை ஊக்குவிப்பதோடு, உடல் எடையையும் குறைக்க உதவும். ஒரு நாளைக்கு 8-9 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சம்மரில் நீங்கள் இன்னும் கூட நிறைய தண்ணீர் குடிக்கலாம்.
நீங்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க மறந்துவிட்டால், உங்கள் மொபைலில் வாட்டர் டைமரை அமைக்கலாம். இது அடிக்கடி தண்ணீர் குடிக்க உங்களுக்கு நினைவூட்டும். நறுக்கிய வெள்ளரிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் பெர்ரிகளை ஒரு பெரிய பாட்டில் தண்ணீரில் போட்டு, இரவு முழுவதும் ஊறவையுங்கள். மறுநாள் காலை இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் உடல் நச்சுத்தன்மையாகுவதைத் தவிர்க்கலாம்.
எண்ணெய் பயன்பாடு
எடை குறைப்பு பயணத்தில் இருக்கும்போது, நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம் எண்ணெய் பயன்பாடு. நீங்கள் எந்த வகை எண்ணெயை பயன்படுத்துகிறீர்கள்? எவ்வளவு எண்ணெயைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். காய்கறி எண்ணெய், கனோலா எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டிய சில எண்ணெய்கள்.
தினசரி சமையலில் பயன்படுத்த சிறந்த எண்ணெய்கள் கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவை. ஒரு குறிப்பிட்ட உணவை சமைக்கும் போது 1 டீஸ்பூன் எண்ணெய்க்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், அது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்
தின்பண்டங்கள் தான் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணம். சர்க்கரை பசி மற்றும் இரவு நேர உணவு பசியை போக்க, சர்க்கரை நிரம்பிய தின்பண்டங்கள், எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை நாம் அடிக்கடி சாப்பிடுகிறோம். இது உடல் எடையை அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உங்கள் சிற்றுண்டிப் பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்றியவுடன், உங்கள் வாழ்க்கைமுறையில் ஒரு முன்னேற்றமான வித்தியாசத்தை நீங்கள் காணலாம். ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை ஆரோக்கியமானவற்றுடன் மாற்ற வேண்டும். இது உங்களை குற்ற உணர்ச்சிக்கு செல்ல வைக்காமல் பசி உணர்வைத் தீர்க்கும். வீட்டில் தயாரித்த பாப்கார்ன், ராகி சிப்ஸ், ஜோவர் பஃப்ஸ், வறுத்த மக்கானா, சானா, புரோட்டீன் பார், பழ தயிர் போன்றவை சில ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பங்கள் ஆகும்.
உணவை பல்வகைப்படுத்துங்கள்
மிகவும் பொதுவான உணவையே நீங்கள் தினமும் பின்பற்றி வருகிறீர்களா? ஒவ்வொரு சில நாட்களுக்குப் பிறகும் அதே உணவுகளை மீண்டும் செய்தால், அதில் சில பன்முகத்தன்மையைச் சேர்க்க வேண்டிய நேரம் இது. உதாரணமாக, தினமும் ஒரேமாதிரி கோதுமை ரொட்டியை சாப்பிடுவதற்கு பதிலாக, ராகி, ஜோவர், பஜ்ரா, அமராந்த் போன்ற பல்வேறு வகையான ஆரோக்கியமான மாவுகளில் நீங்கள் முயற்சி செய்யலாம். அதேபோல், புரதம் நிறைந்த தானியமான குயினோவாவுடன் அரிசியை மாற்றலாம்.
பகுதி கட்டுப்பாடு
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தும், உடல் எடை குறையவில்லையா? இதற்கு உங்கள் பகுதி கட்டுப்பாடும் ஓர் காரணமாக இருக்கலாம். நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை அதிகளவில் சாப்பிட்டால், அதுவும் எடை அதிகரிக்க வழிவகுக்கும். காலை உணவு, மதிய உணவு, தின்பண்டங்கள், பழங்கள் மற்றும் இரவு உணவு ஆகியவற்றை உள்ளடக்கிய 4-5 சிறிய உணவுகளாக உங்கள் நாளைப் பிரிக்க வேண்டும்.
எல்லா உணவுகளிலும், உங்களை முழுவதுமாக ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, உங்கள் பசியில் 80% மட்டுமே சாப்பிட முயற்சிக்க வேண்டும். இது செரிமானத்தை எளிதாக்கும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேலும் துரிதப்படுத்தும். இதனால், உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

