Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
Symptoms Of Fatty Liver Disease In Tamil: நமது உடலில் இதயம், நுரையீரலைப் போன்றே கல்லீரலும் மிகவும் முக்கியமான உறுப்பாகும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் முக்கியமான வேலையை கல்லீரல் செய்கிறது. அதாவது, கல்லீரல் உடலில் இருந்து நச்சுக்களை நீக்குகிறது, அத்தியாவசிய புரோட்டீன்களை உற்பத்தி செய்கிறது, செரிமானத்திற்கு உதவுகிறது.
முக்கியமாக ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகரிக்கும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் குவிவதைத் தடுக்கிறது. சுத்திரிக்கும் வேலையை கல்லீரல் செய்வதால், இந்த கல்லீரலில் நிறைய பிரச்சனைகள் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. குறிப்பாக கல்லீரல் சேதம், கொழுப்பு கல்லீரல் நோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

சரி, நமது கல்லீரல் மோசமான நிலையில் இருந்தால் அது உடலின் மற்ற பகுதிகளை எப்படி பாதிக்கும் மற்றும் எந்த மாதிரியான அறிகுறிகளை நமக்கு உணர்த்தும் என்று நீங்கள் கேட்கலாம். இப்போது கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அது உடலின் எந்த பகுதிகளில் எல்லாம் வீக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் காண்போம். உங்களுக்கும் இந்த பகுதிகளில் தேவையில்லாமல் வீக்கம் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
கொழுப்பு கல்லீரல் நோய் என்றால் என்ன?
கொழுப்பு கல்லீரல் நோயால் உலகளவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழுப்பு கல்லீரல் நோய் என்பது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்புக்கள் தேங்கி, கல்லீரலில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் ஒரு மோசமான நோயாகும். இதன் அறிகுறிகளை கண்டறிந்து, ஆரம்பத்திலேயே சிகிச்சைகளை மேற்கொண்டால், நிலைமை தீவிரமாவதைத் தடுக்கலாம்.
கொழுப்பு கல்லீரல் நோய் எந்த காரணங்களால் ஒருவருக்கு வரலாம்?
கல்லீரலில் அதிகளவிலான கொழுப்புக்கள் சேரும் போது கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது. இந்த நோய் பல்வேறு காரணிகளால் ஒருவருக்கு ஏற்படலாம். அதில் உடல் பருமன், உயர் கொலஸ்ட்ரால், அதிகப்படியான மது அருந்துவது, எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை. கல்லீரலில் கொழுப்பு அதிகமாக தேங்கியிருந்தால், அது கல்லீரலில் தீவிரமான அழற்சியை ஏற்படுத்தும் மற்றும் கடுமையான கல்லீரல் சேதத்திற்கு வழிவகுக்கும். இப்போது கொழுப்பு கல்லீரல் நோய் இருந்தால், உடலின் எந்த பகுதிகளில் எல்லாம் அசாதாரண வீக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் காண்போம்.
கண்களில் வீக்கம்
கண்களானது லேசாக வீங்கி, கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக தென்பட்டால், மஞ்சள் காமாலை உள்ளது என்ற அர்த்தம். இந்த மஞ்சள் காமாலையானது கல்லீரல் செயலிழப்புக்கான ஆரம்ப கால அறிகுறியாக இருக்கலாம். பொதுவாக உடலில் பிலிரூபின் அதிகமாக இருக்கும் போது, கல்லீரலால் அதை திறம்பட செயல்படுத்த முடியாமல் போய், கண்கள் மற்றும் சருமமானது மஞ்சள் நிறத்தில் வெளிப்படத் தொடங்குகிறது.
அடிவயிற்றில் வீக்கம்
திடீரென்று அடிவயிற்று பகுதியானது வீக்கமடைந்திருப்பதை உணர்கிறீர்களா? அப்படியானால் அது கல்லீரல் நோய் முற்றிய நிலையில் உள்ளது என்று அர்த்தம் மற்றும் இந்நிலையில் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஒருவரது அடிவயிற்றில் ஏற்படும் திடீர் வீக்கத்திற்கும், அசௌகரியத்திற்கும் காரணம் அடிவயிற்று குழியில் திரவங்கள் தேங்கியிருப்பது தான். இப்படி அடிவயிற்றில் திரவங்கள் தேங்கினால், அது கல்லீரலில் ஏற்பட்டுள்ள சேதத்தை உணர்த்துகிறது. எனவே உஷாராகிக் கொள்ளுங்கள்.
கால் வீக்கம்
அடுத்ததாக, கால்களில் ஏற்படும் வீக்கம். இப்படி ஏற்படும் வீக்கத்தை எடிமா என்று அழைப்பர். இது கொதுவாக கால்கள், கணுக்கால் மற்றும் பாதங்களில் திரவங்கள் தேங்குவதால் ஏற்படும். மேலும இம்மாதிரியான வீக்கம் பொதுவாக கடுமையான கல்லீரல் நோய் நிகழ்வுகளிலும் காணப்படும். இப்படி ஏற்படும் கால் வீக்கமானது அசௌகரியம், வலி மற்றும் கால்களை அசைக்க முடியாமல் போன்றவற்றையும் ஏற்படுத்தும். எனவே உங்களிடம் இந்த அறிகுறி தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
கைகளில் வீக்கம்
உங்கள் கைகள் மற்றும் விரல்களில் வீக்கத்தை உணர்கிறீர்களா? அப்படியானால் இது கடுமையான கல்லீரல் சேதத்தின் அறிகுறியாகும். கல்லீரல் நோயின் தீவிரமான நிலைகளில் உள்ளவர்கள், இப்படி கைகளில் வீக்கத்துடன், கைகளை அசைக்க முடியாமல் அவதிப்படலாம். எனவே இப்படி கைகளில் நீங்கள் வீக்கத்தை உணர்ந்தால், உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.
நெஞ்சு பகுதியில் இறுக்கம்
வழக்கத்திற்கு மாறாக நெஞ்சு பகுதியில் இறுக்கம் அல்லது வீக்கத்தை உணர்ந்தால், அது கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்நிலையில் சுவாசிப்பதும் சற்று சிரமமாக இருக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுகி, அவரிடம் இதைத் தெரிவித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
முக வீக்கம்
முக வீக்கம் என்பது கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் வீங்கி காணப்படுவதாகும். இம்மாதிரியான வீக்கம் தீவிரமான கல்லீரல் சேதத்தின் அறிகுறியாக இருக்கலாம். இப்படி முகத்தில் ஏற்படும் வீக்கத்தை ஃபேஷியல் எடிமா என்று அழைப்பர். இது ஒருவரது முக தோற்றத்தையே மாற்றிவிடும். எனவே இப்படியான முக வீக்கத்தை சந்தித்தால், மருத்துவரிடம் சென்று அதன் மூல காரணத்தை அறிந்து உடனே சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
பாதங்களில் வீக்கம்
உங்கள் கால் பாதங்களில் வீக்கம் அல்லது இறுக்கத்தை உணர்கிறீர்களா? அதாவது உங்களால் நிற்கவோ அல்லது நடக்கவோ முடியவில்லையா? அப்படியானால் இது கல்லீரல் மோசமாக சேதமடைந்துள்ளது என்பதன் அறிகுறியாக இருக்கலாம். இந்த சூழ்நிலையில் மருத்துவரை அணுகி, கல்லீரல் தொடர்பான பிரச்சனை உள்ளதா என்பதை பரிசோதனை செய்து அறிந்து, முறையான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications