Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
கண்ணைக் குருடாக்கும் குளுக்கோமா நோய் குறித்த சில கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்...
ஒருவரது கண்ணைக் குருடாக்கும் குளுக்கோமா நோய் குறித்து மக்களிடையே பலவிதமான தவறான கருத்துக்கள் பரவியுள்ளன. இப்போது அவை என்னவென்பதையும், உண்மை என்னவென்பதையும் காண்போம்.
Eye Care Tips: தற்போது கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை செய்வதால், பலரும் கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். சமீப காலமாக குளுக்கோமா என்னும் கண் அழுத்த நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குளுக்கோமா என்பது ஒரு நாள்பட்ட கண் நோயாகும்.
இது கண்களின் பின்புறத்தில் உள்ள நரம்பான பார்வை நரம்பை சேதப்படுத்துவதன் மூலம் பார்வை இழப்பு மற்றும் குருட்டுத்தன்மையை உண்டாக்கும். முக்கியமாக இந்த வகை நோயின் அறிகுறியானது மெதுவாக இருக்கும் மற்றும் கவனிக்க முடியாததாக இருக்கும். இந்த கண் அழுத்த நோய் இருப்பதை ஒருவர் விரிவான கண் பரிசோதனைகளின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.

கண்களின் ஆரோக்கியம் மற்றும் கண்களுக்கு தீங்கு விளைவிப்பது குறித்து பல விஷயங்கள் கூறப்படுகின்றன. ஆனால் அவை அனைத்துமே உண்மை தானா என்று கேட்டால், நிச்சயம் பலரால் உறுதியாக கூறமுடியாது. அதுவும் ஒருவரது கண்ணைக் குருடாக்கும் குளுக்கோமா நோய் குறித்து மக்களிடையே பலவிதமான தவறான கருத்துக்கள் பரவியுள்ளன. இப்போது அவை என்னவென்பதையும், உண்மை என்னவென்பதையும் காண்போம்.
கட்டுக்கதை #1
கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை செய்தால் குளுக்கோமா ஏற்படும்.
உண்மை: குளுக்கோமாவிற்கும், கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை செய்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை. குறைவான வெளிச்சத்தில் படிப்பதோ அல்லது வேலை செய்வதோ கண்களில் எவ்வித காயங்களையும் ஏற்படுத்தாது. ஆனால் அது கண்களை சோர்வடையச் செய்யும்.
கட்டுக்கதை #2
குளுக்கோமாவிற்கு குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ளன.
உண்மை: குளுக்கோமா நோய்க்கு குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லை. ஆனால் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குளுக்கோமா நோய் இருந்தால், அது கண்களில் நீர்வடிதல் அல்லது மங்கலான பார்வை போன்ற அறிகுறிகளை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர். இந்த அறிகுறிகள் பல கண் பிரச்சனைகளின் பொதுவான அறிகுறிகளாக இருப்பதால், குளுக்கோமா பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாமல் போகிறது.
கட்டுக்கதை #3
குளுக்கோமா வயதானவர்களை மட்டுமே பாதிக்கும்.
உண்மை: குளுக்கோமா ஒருவருக்கு எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் வயதானவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. முக்கியமாக 60 வயதிற்கு மேல் ஒருவருக்கு பார்வை குருடாவதற்கு இந்த குளுக்கோமா தான் காரணம். பல வகையான குளுக்கோமாவிற்கு எவ்வித எச்சரிக்கை அறிகுறிகளும் இல்லை. ஆனால் அதன் தாக்கம் மெதுவாக இருப்பதால், ஆரம்பத்தில் கண்டறிவது கடினம். பார்வையில் மாற்றங்களை காணும் வரை கண்டறிய முடியாது.
கட்டுக்கதை #4
சர்க்கரை நோய் விழித்திரையை மட்டுமே பாதிக்கும்.
உண்மை: பொதுவாக சர்க்கரை நோயானது உடலின் அனைத்து உறுப்புக்களையும் பாதிப்பது போல், கண்களின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும். அதனால் தான் சர்க்கரை நோயாளிகளுக்கு ரெட்னோபதி மற்றும் கண்புரை ஆகியவை பொதுவாக ஏற்படுகின்றன. அதேப் போல் சர்க்கரை நோயாளிகளுக்கும் குளுக்கோமா ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளன.
கட்டுக்கதை #5
குளுக்கோமா ஒரு கண்ணை மட்டும் தான் பாதிக்கும்.
உண்மை: குளுக்கோமாவானது எப்போதும் இரண்டு கண்களையும் பாதிக்கும். ஆனால் ஒரு கண்ணானது மற்றதை விட முன்னதாகவே பாதிக்கப்படும்.
மொத்தத்தில் குளுக்கோமா ஒருவரது பார்வையை அமைதியாக அழிக்கக்கூடிய ஒரு கொடிய நோய். எனவே உங்கள் வீட்டில் யாருக்கேனும் குளுக்கோமா இருந்தால், 30-40 வயதை எட்டியதும் அடிக்கடி கண்களை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். அத்துடன் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்தான உணவுகளை உட்கொண்டு, தினமும் கண்களுக்கு போதுமான ஓய்வுகளை கொடுத்து வந்தால், கண்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

