Latest Updates
-
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
நீங்க பிட்டா, இல்லையா-ன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த சிம்பிள் கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியுதா பாருங்க...
தற்போது மக்கள் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்காக நிறைய பேர் காலையில் எழுந்ததும் ஒருசில உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் ஃபிட்னஸிற்காக ஜிம் சென்று ஒரு புரோகிராமை தயார் செய்து அதை பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் நிறைய பேருக்கு ஃபிட்னஸ் என்றால் என்ன என்பதே சரியாக புரியவில்லை. எனவே ஃபிட்னஸ் என்றால் என்ன, ஒருவர் ஃபிட்டாக இருக்கிறாரா இல்லையா என்பதை எப்படி அறிவது என்பது குறித்து மனித இயக்க அறிவியல், வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளரான ஏ. பாஸ்கர் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் விரிவாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறியிருப்பதாவது, உண்மையில் ஃபிட்னஸ் என்பது நாம் இருக்கும் சூழல் மற்றும் செய்யும் வேலைக்கேற்ப, நமது தினசரி வேலைகளை செய்வதில் எவ்வித இடையூறும் இல்லாமல், உடலை வருத்தாமல், தகுதியாக வைத்துக் கொள்வதாகும்.
முந்தைய காலத்தில், ஏன் ஒரு 50 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த மக்கள் மிகவும் ஃபிட்டாக இருந்தார்கள். இதற்கு காரணம் அவர்களின் வாழ்க்கை முறையும், வேலையும், உடலின் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு இருந்தன. சொல்லப்போனால் அவர்களிடம் மனிதன் ஆரோக்கியமாக இருக்க தேவையான 7 விதமான அத்தியாவசிய இயக்கங்கள் (Primal Movements) இருந்தன. அந்த ஏழு இயக்கங்களாவன:
1. இழுப்பது
2. தள்ளுவது
3. அமர்வது
4. குனிவது
5. வளைவது
6. ஏறுவது
7. நடப்பது
மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த 7 அத்தியாவசிய இயக்கங்களை அடிப்படையாக கொண்டு தான் முந்தைய காலத்தில் நம் முன்னோர்களின் ஒவ்வொரு வேலைகளும், செயல்பாடுகளும் இருந்தன. உதாரணமாக, துணி துவைப்பது, இந்தியன் கழிவறையை பயன்படுத்துவது, மாடிப்படி ஏறுவது, எங்கும் குறிப்பிட்ட தூரமாவது நடப்பது போன்றவை. ஆனால் தற்போது இப்படியான இயக்கங்கள் மக்களிடையே குறைந்துவிட்டன. துணி துவைக்க வாஷிங் மெஷின், வெஸ்டர்ன் கழிவறை, லிப்ட், கார் அல்லது பைக்கில் செல்வது என்று அனைத்துமே உடலியக்கங்களை குறைத்துவிடுகின்றன. இதன் விளைவாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை மக்கள் சந்திக்கின்றனர்.
அத்தியாவசிய இயக்கங்கள் எந்த மாதிரியான நன்மைகளை ஒருவருக்கு வழங்கும்?
ஒருவர் இந்த 7 அத்தியாவசிய இயக்கங்களை தினமும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், அந்நபரின் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தேங்காது. இதன் விளைவாக இதயம் ஆரோக்கியமாக செயல்படும், இதயத்தில் அழுத்தம் அதிகரிக்காது, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கும், இரத்த அழுத்தமும் சீராக இருக்கும். செரிமான பிரச்சனை இருக்காது, மலச்சிக்கல் பிரச்சனை வராது.
ஃபிட்னஸ் சோதனை
நீங்கள் ஃபிட்டாக இருக்கிறீர்களா, இல்லையா என்பதை ஒரு சிறிய சோதனையின் மூலமே அறியலாம். எப்படியென்றால், இந்த 7 இயக்கங்களும் தினமும் உங்கள் உடலுக்கு கிடைக்கிறதா என்ற கேள்விக்கு, ஆம் என்ற பதிலை சற்றும் யோசிக்காமல் உடனே கூறினால், நீங்கள் ஃபிட். இல்லாவிட்டால், நீங்கள் அவுட்.
ஒரு மனிதன் ஃபிட்டாக இருக்க 7 அத்தியாவசிய இயக்கங்கள் மிகவும் இன்றியமையாதது. இந்த 7 இயக்கங்களையும் ஒருவர் ஒவ்வொரு நாளும் தவறாமல் கொண்டிருந்தால், அந்நபர் நன்கு ஃபிட்டாக இருக்கிறார் என்று அர்த்தம். ஒருவேளை இந்த 7 இயக்கங்களில் ஒன்றை செய்ய தவறினாலும், அந்நபர் ஃபிட்டாக இல்லை என்று கூறலாம்.
இந்த 7 இயக்கங்களை எப்படி தினமும் பெறுவது?
இந்த 7 இயக்கங்களைப் பெற ஜிம் சென்றால் மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை. ஜிம்மிற்கு செல்லாமல், இருக்கும் சூழலுக்கு ஏற்ப வீட்டில் இருந்து கொண்டே செய்யலாம். உதாரணமாக,
* ஸ்குவாட், அதாவது உட்கார்ந்து எழலாம். அதுவும் முதல்முறையாக உடற்பயிற்சியில் ஈடுபவராக இருந்தால், 10-10-10 என மூன்றாக பிரித்து, குறைந்தது 30 முறை உட்கார்ந்து எழலாம்.
* 10-20 முறை குனிந்து தரையை தொட்டு நிமிர்ந்து நிற்கலாம்.
* மாடிப்படியை ஏறி இறங்கலாம்.
* புஷ் அப் எடுக்கலாம். அதுவும் உங்களால் எத்தனை முறை எடுக்க முடியுமோ, அத்தனை முறை செய்யலாம்.
* கம்பியில் தொங்கி உடலை மேலே உயர்த்தி புல்-அப் செய்யலாம். இதுவும் எத்தனை முறை செய்ய முடியுமோ, அத்தனை முறை செய்யலாம்.
* கீழ் உடலை திருப்பாமல், மேல் உடலை மட்டும் 10 முறை வலது மற்றும் இடது பக்கம் திருப்பலாம்.
* நடக்கலாம் அல்லது ஜாக்கிங் செய்யலாம்.
இந்த 7 இயக்கங்களை ஒருவர் தினமும் தவறாமல் உடலுக்கு கொடுத்து வந்தால், அதுவும் ஒரு நாளைக்கு 1/2 மணிநேரம் என வாரத்திற்கு 6 நாட்கள் என மொத்தம் 3 மணிநேரம் செலவழித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து, இரத்த ஓட்டமும் சீராகி, உடலும் ஃபிட்டாக ஸ்லிம்மாக இருக்கும் என்றும் பாஸ்கர் கூறுகிறார்.
முதல் முறையாக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் எந்த மாதிரி ஆரம்பிக்கலாம்?
முதல் முறையாக உடற்பயிற்சியில் ஈடுபவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் வலிமைக்கான பயிற்சிகளை செய்யலாம். அதுவும் திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்கள் வலிமைக்கான பயிற்சிகளை மேற்கொண்டு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்களும் நடைபயிற்சியை மேற்கொள்ளலாம். இன்னும் அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட நினைப்பவர்கள், ஜிம்மிற்கு சென்று ரெசிஸ்டண்ட் பேண்ட், கெட்டில் பெல், டம்பெல்ஸ் போன்றவற்றை செய்யலாம் என்றும் பாஸ்கர் கூறுகிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











