Latest Updates
-
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
உங்களுக்கு எலும்பு முறிவு இருக்கா? அப்ப இந்த வீட்டு வைத்தியங்கள ட்ரை பண்ணுங்க...சரியாகிடுமாம்!
மக்கள் சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்சினைகளில் எலும்பு முறிவும் ஒன்றாகும். இப்படி உடைந்த எலும்புகள் அவ்வளவு சீக்கிரம் குணமாகுவது இல்லை. எலும்பு முறிவு சரியாகுவதற்கு மாதக்கணக்கில் ஆகலாம்.
அமெரிக்க புள்ளி விவரங்கள் படி சுமார் ஒவ்வொரு ஆண்டும் 6.3 மில்லியன் மக்கள் எலும்பு முறிவை சந்திக்கின்றனர். உலகில் உள்ள ஒவ்வொரு மூன்று பெண்களில் ஒருவருக்கும், ஒவ்வொரு ஐந்து ஆண்களில் ஒருவருக்கும் எலும்பு முறிவு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இந்த எலும்பு முறிவை விரைவாக குணப்படுத்த வேண்டும் என்றால் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றலாம்.

எலும்பு முறிவு என்றால் என்ன
எலும்பு முறிவு என்பது எலும்பில் ஏற்படும் விரிசலை குறிக்கிறது. எலும்பில் ஏற்படுத்தும் அதிக அழுத்தம், அதிக விசை போன்றவை எலும்பு முறிவை உண்டாக்குகிறது. சில நபர்களில் எலும்பு முறிவு, ஆஸ்டியோபோரோசிஸ், புற்றுநோய் மற்றும் ஆஸ்டியோஜெனெசிஸ் இம்பெர்ஃபெக்டா போன்ற எலும்பை பலவீனப்படுத்தும் மருத்துவ நிலைகளை உண்டாக்குகிறது.
எலும்பு முறிவானது பல்வேறு வழிகளில் ஏற்படலாம். எலும்பில் ஏற்படும் முறிவு சுற்றியுள்ள திசுக்களை சேதப்படுத்தாமல் இருந்தால் அது மூடிய எலும்பு முறிவு என்றும், சுற்றியுள்ள தோலை சேதப்படுத்தி இருந்தால் அது திறந்த எலும்பு முறிவு அல்லது கூட்டு எலும்பு முறிவு என்றும் அழைக்கப்படுகிறது.
எலும்பு முறிவை விரைவாக குணப்படுத்த உதவும் வீட்டு வைத்திய முறைகள்
மஞ்சள்
தேவையான பொருட்கள் :
1 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி
1 டம்ளர் சூடான பால்
பயன்படுத்தும் முறை
ஒரு டம்ளர் சூடான பாலில் 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு அதை நன்றாக கலந்து குடிக்க வேண்டும். இந்த பானத்தை இரவில் தூங்கச் செல்லும் முன் குடித்து வர வேண்டும். மஞ்சளில் உள்ள குர்குமின் எலும்பு முறிவை குணப்படுத்த உதவுகிறது.
குர்குமின் ஒரு இம்யூனோமோடூலேட்டரியாக செயல்படுகிறது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அழற்சி எதிர்ப்பு கொண்டுள்ளது. எலும்புகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
அத்தியாவசிய எண்ணெய்கள்
தேவையான பொருட்கள்:
3-4 சொட்டுகள் எலிமி எண்ணெய்
2 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை
பயன்படுத்தும் முறை
3-4 சொட்டுகள் எலிமி எண்ணெயுடன் 2 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதை நன்றாக கலந்து எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் அப்ளை செய்ய வேண்டும். இதை ஒரு நாளைக்கு 5-6 முறை செய்து வாருங்கள். எலிமி எண்ணெய் அடிபட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது சீக்கிரமாகவே எலும்பு முறிவை குணப்படுத்த உதவுகிறது.
லாவண்டர் எண்ணெய்
தேவையான பொருட்கள் :
3-4 சொட்டுகள் லாவண்டர் எண்ணெய்
2 டீ ஸ்பூன் தேங்காயெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை
3-4 சொட்டுகள் லாவண்டர் எண்ணெயுடன் 2 டீ ஸ்பூன் தேங்காயெண்ணெய்யை சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்ளை செய்யுங்கள். பிறகு இயற்கையாக காய விடுங்கள். லாவண்டர் எண்ணெய் எலும்பு முறிவை குணப்படுத்த உதவுகிறது. இது அழற்சியை குறைக்க உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
விளக்கெண்ணெய்
தேவையான பொருட்கள்
குளிர் அழுத்தம் செய்யப்பட்ட விளக்கெண்ணெய்
சுத்தமான துணி
பயன்படுத்தும் முறை
சுத்தமான துணியை குளிர் அழுத்தம் செய்யப்பட்ட விளக்கெண்ணெயில் நனைத்துக் கொள்ளுங்கள். அதிகமான விளக்கெண்ணெயை பிழிந்து விட்டு அந்த துணியை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்ளை செய்யுங்கள்.
இரவு நேரத்தில் அப்படியே விட்டு விடுங்கள். அல்லது இரண்டு மணி நேரம் அப்படியே வைத்து இருங்கள். இதை தினசரி செய்து வாருங்கள். விளக்கெண்ணெயில் ரிசினோலிக் அமிலம் உள்ளது. இது அழற்சியை போக்க உதவுகிறது. எலும்பு முறிவில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
கலோஞ்சி எண்ணெய்
தேவையான பொருட்கள் :
1 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் விதை எண்ணெய்
பயன்படுத்தும் முறை
1 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் விதை எண்ணெயை எடுத்து அதை லேசாக சூடுபடுத்திக் கொள்ளுங்கள். இந்த வெதுவெதுப்பான எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்ளை செய்யுங்கள். பிறகு உலர விடுங்கள். இதை ஒரு நாளைக்கு 3-4 முறை செய்து வாருங்கள்.
வேலை செய்யும் விதம்
கருஞ்சீரக விதை எண்ணெய் பல்வேறு மருத்துவ நிலைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. எலும்பை வலுப்படுத்த உதவுகிறது. BMC Complementary and Alternative Medicine (5) இல் வெளியிடப்பட்ட ஆய்வின்படி கருஞ்சீரக விதை எண்ணெய் ஆஸ்டியோபோரோசிஸை போக்க உதவுகிறது.
எள்ளு விதைகள்
தேவையான பொருட்கள்:
1-2 டேபிள் ஸ்பூன் வறுத்த எள்ளு விதைகள்
பயன்படுத்தும் முறை:
1-2 டேபிள் ஸ்பூன் வறுத்த எள்ளு விதைகளை தினசரி சாப்பிட்டு வாருங்கள். எள்ளு எண்ணெயையும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்ளை செய்யுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை என செய்து வரும் போது நல்ல நன்மையை நீங்கள் பெற முடியும். எள்ளு விதைகளில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற எலும்புகளை குணப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.
இது உங்களை எலும்பு முறிவில் இருந்து விரைவாக குணப்படுத்த உதவுகிறது. இதில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. இந்த எண்ணெய் எலும்பு முறிவால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இந்த எண்ணெயை பயன்படுத்தி இயற்கையான முறையில் எலும்பு முறிவை குணப்படுத்த முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

