Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
இரத்த சோகை குணமாக எந்த மாதிரியான உணவை சாப்பிட வேண்டும் - டாக்டர் ஃபரூக் கூறும் அட்வைஸ்!
Anemia In Tamil: இந்தியாவில் இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு இரத்த சோகை குறித்த போதுமான விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாதது தான் முக்கிய காரணம். இரத்த சோகையை சரிசெய்ய முயற்சி எடுக்காவிட்டால், அதுவே பல பிரச்சனைகளை வரவழைத்து உயிரைப் பறித்துவிடும்.
இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனை பொது நல மருத்துவர் டாக்டர். ஃபரூக் அப்துல்லா தனது சமூக வலைத்தள பக்கத்தில், இரத்த சோகை என்றால் என்ன, எதனால் வருகிறது, அதன் அறிகுறிகள் என்ன, எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும், யாருக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பன குறித்து விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, நமது உடலில் உள்ள 5½ லிட்டர் ரத்தம் ரத்த நாளங்களில் நிறைந்து உள்ளதை அனைவரும் அறிவோம். இந்த ரத்தத்தை உந்தித் தள்ளும் இயந்திரமாக தசையால் ஆன இதயம் நாம் கருவறைக்குள் இருந்த காலந்தொட்டு துடித்து வருகிறது. இதயத்தில் இருந்து உந்தப்பட்ட ரத்தம் நமது உடலின் சலவைக்காரனான நுரையீரலுக்குச் சென்று உயிர்வளியான ஆக்சிஜனை தன்னகத்தே ஏற்றிக் கொள்கிறது.
இந்த ஆக்சிஜன் உடலின் அனைத்து செல்களுக்கும் அதன் முறையான இயக்கத்துக்கும் கட்டாயத் தேவை. இந்த ஆக்சிஜன் குருதி(ரத்தம்) ஆற்றில் எதன் மீது ஏறி தான் செல்ல வேண்டிய இடத்தை அடைவது? ஆக்சிஜனை ஏற்றிக் கொள்ளும் தோனியாக (படகு) செயல்படுவது ரத்த சிவப்பு அணுக்களுக்குள் இருக்கும் ஹீமோகுளோபின் ஆகும்.
ஹீமோகுளோபின் = ஹீம் ( இரும்பு ) + குளோபின் ( புரதம்). இந்த இரண்டையும் இணைத்து உண்டாக்கப்பட்ட படகு என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். இந்த ஹீமோகுளோபின் மூலம் தான் நுரையீரலில் உள்ளிளுக்கப்படும் ஆக்சிஜன் உடல் முழுமைக்கும் குறிப்பாக நமது தலைமைச் செயலகமான மூளைக்கு சென்று சேருகிறது.
எனவே ஒருவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுகள் சரியாக இருக்க வேண்டும். மேலும் அதை உள்ளே தன்னகத்தே வைத்திருக்கும் ரத்த சிவப்பு அணுக்களும் முறையாக உற்பத்தி ஆக வேண்டும். இந்த ஹீமோகுளோபின் ஆண்களுக்கு நூறு மில்லி ரத்தத்தில் 14-16 மில்லிகிராமும், பெண்களுக்கு 12-14 மில்லிகிராமும் இருந்தால் அது சரியான அளவாகும்.
ரத்த சோகை எதனால் ஏற்படுகிறது?
ஹீமோகுளோபின் உருவாக கட்டாயம் இரும்புச்சத்து தேவை. சிவப்பு அணுக்கள் முதற்கொண்டு ரத்தத்தின் இதர அணுக்கள் உருவாக வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் கட்டாயத் தேவை. நமது உடலுக்கு மேற்சொன்ன இரும்புச்சத்து, பி12 வைட்டமின், ஃபோலிக் அமிலம் ஆகிய மூன்றையும் உணவு மூலம் தொடர்ந்து நமது பிறப்பில் இருந்து இறப்பு வரை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
சிவப்பு அணுவின் சராசரி ஆயுள் காலம் - 120 நாட்கள் ஆகும். எனவே தொடர்ந்து சங்கிலித் தொடர் போல அவை அழிக்கப்பட்டும் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். மேற்சொன்னவற்றில் இரும்புச்சத்தை நமது உடலில் ஃபெரிடினாக (Ferritin) சேமித்து வைத்துக் கொள்ள இயலும்.
வைட்டமின் பி9 எனும் ஃபோலிக் அமிலத்தையும், வைட்டமின் பி12 எனும் கோபாலமைனையும் நம் உடலால் உற்பத்தி செய்ய இயலாது. இரும்புச் சத்தை ஃபெரிடினாக மாற்றி உடல் சேமித்து வைத்து கொள்ளும். ஆனால் மிச்ச இரண்டையும் சேமிக்கும் சக்தி நம்மிடம் இல்லை. எனவே தொடர்ந்து இரும்புச்சத்து பி12, பி9 நிரம்பிய உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
யாருக்கு இரத்த சோகை ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது?
* பெண்களுக்கு மாதவிடாய் மூலம் பிரதிமாதம் இரும்புச் சத்து இழப்பு இருக்கும்.
* கர்ப்பமாகவும் பாலூட்டும் அன்னையாக இருக்கும் காலங்களில் அதிகமாக இரும்புச்சத்து, பி12 மற்றும் பி9 தேவை இருக்கும்.
* மூல நோய் , வயிற்றுப் புண் குடல் புண் சார்ந்த நோய்கள் போன்றவற்றில் அதிகமாக ரத்தம் அமைதியாக வெளியேறும். அப்போதும் ரத்த சோகை ஏற்படும்.
* சிறுநீரக அழற்சி நோய் இருப்பவர்களுக்கு ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் ஹார்மோன் உற்பத்தி குறைபாடால் ரத்த சோகை ஏற்படும்.
இரத்த சோகையின் அறிகுறிகள்
- உடல் சோர்வு
- உடல் வலி
- தலைசுற்றல்
- புத்தி மங்குதல்
- படிப்பில் நாட்டம் குறைதல்
- அடிக்கடி தலைவலி ஏற்படுதல்
- நாக்கு வெளிரிப்போய் காணப்படுவது
போன்றவை ரத்த சோகையின் அறிகுறிகள் ஆகும்.
எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும்?
இரும்புச்சத்து, பி12 மற்றும் பி9 வைட்டமின் சத்துகள் இருக்கும் உணவுகளை தேவையான அளவு உண்ணாமல் இருப்பதால் ரத்த சோகை விளையும்.
* கால்நடைகளின் கல்லீரல், சுவரொட்டி உள்ளிட்ட உள்ளுறுப்புகளிலும் மாமிசங்களிலும் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது.
* மாமிசம் உண்ணாதவர்களுக்கு சுண்டக்காய் , கீரைகள், நொதித்தலுக்குள்ளான பழைய கஞ்சியில் இரும்பு உள்ளது.
* பி12 பொருத்தவரை மாமிசம், மீன், முழு முட்டை , உள்ளுறுப்புகள் , கோழி போன்றவற்றில் மட்டுமே தேவையான அளவு நிரம்பி உள்ளது. மரக்கறி உணவுகள் வழி பி12 பெரிதாகக் கிடைப்பதில்லை மாறாகக் கிடைத்தாலும் அது நம் உடலால் மிகக்குறைவாகவே கிரகிக்கப்படுகிறது.
* கீரைகள், பச்சை காய்கறிகள் , பீன்ஸ் ,கடலை, பழங்கள், மாமிசம், முட்டை , கல்லீரல், மீன் போன்றவற்றில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.
* மரக்கறி மட்டும் உண்ணும் உணவாளர்களுக்கும், மேற்சொன்ன உணவுகளை மிகக் குறைவாக உண்பவர்களுக்கும் இரும்புச் சத்து மற்றும் பி12, பி9 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும் போது உணவோடு சேர்த்து ஊட்டச்சத்து நிரம்பிய மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.
இரத்த சோகை குணமாகாமல் இருக்க என்ன காரணம்?
சிலருக்கு என்னதான் உணவில் மேற்சோன்ன சத்துகளை சேர்த்துக் கொண்டாலும் ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் ரத்த சோகை குணமாகாமல் இருக்கும்
இதற்கான காரணஙகள் பின்வருமாறு:
- சிலருக்கு வாய்வழி உட்கொள்ளும் இரும்புச்சத்து மாத்திரைகள் போட்டாலும் அவர்களின் வயிற்றுப் பகுதியில் அதிகமான புண், குடல் பகுதி அழற்சி போன்ற காரணங்களால் இரும்புச்சத்து சரியாக கிரகிக்கப்படாமல், ரத்த நாளம் வழி இரும்புச்சத்தை ஏற்றும் நிலையில் இருப்பார்கள்.
- பி12 நிரம்பிய உணவுகளை உண்ணும் போது இரைப்பையில் இருந்து சுரக்கப்படும் அமிலத்தின் விளைவாக பி12 உணவில் இருந்து பிரிந்து நமது இரைப்பையில் இருந்து சுரக்கப்படும் இண்ட்ரின்சிக் ஃபேக்டர் எனும் நொதியுடன் இணைந்து குடலை அடையும் போது மட்டுமே குடலால் பி12 ஐ கிரிகிக்க இயலும்
- ஆனால் சிலருக்கு வயிற்றுப் பகுதி புண், அமிலம் சரியாக சுரக்காமை, இண்ட்ரின்சிக் ஃபேக்டர் உற்பத்தி இல்லாமை போன்ற பிரச்சனைகளால் வாய்வழி உட்கொள்ளும் பி12 பயனளிக்காது. இவர்களுக்கும் ஊசி வழியாக பி12 மருத்துவர் அறிவுரையின் பேரில் பெற வேண்டும்.
ரத்த சோகையுடன் தொடர்ந்து இருப்பது இதயத்துக்கும் இன்னபிற முக்கியமான உள்ளுறுப்புகளுக்கும் பாதகம் விளைவிக்கும். நமது அன்றாட வாழ்வின் தரத்தையும் நமது நுட்பத் திறனையும் பாதிக்கும்.
எனவே ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு பெற்று எதனால் ரத்த சோகை ஏற்பட்டது என்பதை உணர்ந்து அதற்கேற்றாற் போல உணவையும் மருந்தையும் உட்கொண்டு சரிசெய்ய வேண்டும், என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











