Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
ஆப்பிள் சீடர் வினிகர் உண்மையில் எடையைக் குறைக்க உதவுமா? டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க..
Apple Cider Vinegar For Weight Loss In Tamil: உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தங்கள் உடல் எடையைக் குறைக்க ஏராளமான வழிகளைப் பின்பற்றி வருகின்றனர். அதில் உலகளவில் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று தான் ஆப்பிள் சீடர் வினிகர்.
தற்போது உடல் பருமனைக் குறைப்பதற்கு நிறைய பேர் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் குடித்து வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே இந்த ஆப்பிள் சீடர் வினிகர் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியுமா என்பது குறித்து உணவு ஆலோசகரான டாக்டர் அருண்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விரிவாக பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "ஆப்பிள் சீடர் வினிகர் என்பது ஆப்பிள் ஜூஸில் நல்ல பாக்டீரியாக்களைப் போட்டு நொதிக்க வைப்பதாகும். இதில் ஆல்கஹால் நீக்கப்பட்டு, வினிகர் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கும். வினிகர் என்றால் அசிட்டிக் ஆசிட். அதாவது அசிடிக் ஆசிக் 5 சதவீதமும், மற்ற சில ஆசிட்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவையும் கலந்த கலவை தான் ஆப்பிள் சீடர் வினிகர். இதில் வித் மதர் என்றால் அதில் நல்ல பாக்டீரியாக்களும் சேர்ந்து இருப்பதாகும்." என்று டாக்டர் கூறினார்.
உண்மையில் ஆப்பிள் சீடர் வினிகர் எடை இழப்புக்கு உதவுமா?
இதுக்குறித்து அவர் கூறியதாவது "ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் ஆசிட், இரண்டு விதமான விளைவுகளை உண்டாக்குகிறது. அதில் முதலாவதாக, உண்ணும் உணவை மெதுவாக ஜீரணிக்க செய்து, நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்க உதவுகிறது. பொதுவாகவே இந்த விளைவு அனைத்து ஆசிட்டுகளுக்கும் இருக்கும்.
இரண்டாவது, நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சர்க்கரைகளை டைசாக்கரைடுகள் என்று அழைப்பர். இப்படி உணவுகளில் உள்ள சர்க்கரைகளை உடைக்க உதவும் ஒரு நொதி தான் டைசாக்கரைடேஸ். இந்த டைசாக்கரைடேஸ்களின் செயல்பாட்டை ஆப்பிள் சீடர் வினிகர் குறைக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு அல்லது இன்சுலின் எதிர்ப்பு தன்மை இருப்பவர்களுக்கு, சாப்பிட்டதும் சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிக்கும் வேகத்தை அது குறைக்கலாம் என்றும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதில் வித் மதர் என்று வரும் ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதளவில் உதவுகிறதா என்றால், அந்த அளவிற்கு இல்லை" என்றும் டாக்டர் கூறினார்.
மேலும் "ரியல் வேல்டு ஆராய்ச்சிகளில் இதுக்குறித்து தெரிய வந்துள்ளது என்னவெனில், ஒரு 3 மாதம், 6 மாதம் தொடர்ந்து 2-3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை குடித்தால், மிதமான அளவில் உடல் எடை குறைப்பு ஏற்படலாம் என்றும், அதுவும் ஆப்பிள் சீடர் வினிகருக்கு பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை இருப்பதால், சராசரியாக 5-6 கிலோ உடல் எடையானது இந்த ஆப்பிள் சீடர் வினிகரை குடித்தவர்களுக்கு, இதை குடிக்காதவர்களை விட அதிகமாக எடை குறைந்திருப்பது சில நல்ல ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளதாகவும், அதேப் போல் சர்க்கரை அளவுகள் குறையக்கூடிய தன்மை மிதமானதாக 20-30 புள்ளிகள் ஏறக்கூடிய வேகம் கொஞ்சம் குறையலாம் என்பதும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதுவும் பெரிய அளவில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தாமல், உடல் எடை குறைவதனால் அதிகப்படியாக Hba1c -0.5 அளவு குறையலாம் என்றும் தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் எடை இழப்புக்கு ஆப்பிள் சீடர் வினிகர் கொஞ்சம் உதவலாம்" என்று டாக்டர் அருண்குமார் கூறினார்.
இது தவிர, "பொதுவாகவே அனைத்து அமிலங்களும் இப்படியான நன்மைகளை வழங்கும். இது ஆப்பிள் சீடர் வினிகரில் மட்டும் இல்லை, நாம் சாதாரணமாக குடிக்கும் எலுமிச்சை ஜூஸ், புளி ரசம் போன்ற அனைத்துமே ஒரே விதமான அமிலத்தன்மையை கொண்டவை. எனவே எப்போது பசி எடுக்கும் போதும், காபி, டீயில் சர்க்கரை போட்டு குடிப்பதற்கு பதிலாக, ஒரு எலுமிச்சை ஜூஸில் சிறிது உப்பு போட்டு குடிப்பதாலோ அல்லது ஒரு டம்ளர் ரசத்தை குடிப்பதாலோ, அதில் உள்ள அமிலங்கள் பசியைக் கட்டுப்படுத்தி, மிதமான அளவில் எடையைக் குறைக்க உதவும்.
எனவே எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் ஆப்பிள் சீடர் வினிகரை குடிக்கலாம். ஆனால் அது பெரிய அளவில் மாற்றத்தைத் தரும் என்று நினைக்க வேண்டாம். குறைவான கலோரிகள், குறைவான கார்போஹைட்ரேட்டுகள், அதிக புரோட்டீன்கள், நல்ல நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தாலே, உடல் எடை மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். அத்துடன் ஆப்பிள் சீடர் வினிகரைத் தான் குடிக்க வேண்டும் என்பதில்லை, வெறும் எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தாலும், ஆப்பிள் சீடர் வினிகரால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும்" என்று டாக்டர் அருண்குமார் கூறினார்.
எனவே நண்பர்களே! இதுவரை எடையைக் குறைக்க கஷ்டப்பட்டு ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஆப்பிள் சீடர் வினிகரை வாங்கி குடித்து வந்தால், இனிமேல் அந்த அளவு பணத்தை செலவழிக்காமல், ஒரு டம்ளர் உப்பு கலந்த எலுமிச்சை ஜூஸ் அல்லது ஒரு டம்ளர் ரசத்தை குடித்து வாருங்கள். ஆப்பிள் சீடர் வினிகருக்கு இணையான, ஏன் அதை விட சற்று அதிகமாகவே நன்மைகளைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications