Latest Updates
-
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும் -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது? கருட புராணம் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க.. -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா?
பிரியாணியோடு இந்த 5 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! எதுக்கு-ன்னு பாருங்க..
Never Eat These 5 Foods With Biryani: இன்று பக்ரீத் பண்டிகை. இந்த பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய நண்பர்கள் தங்கள் வீடுகளில் மட்டன் பிரியாணியை செய்வார்கள். அதோடு அந்த பிரியாணியை நண்பர்கள், உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்வார்கள். மேலும் பிரியாணியிலேயே நிறைய பேருக்கு மட்டன் பிரியாணி தான் பிடிக்கும். ஏனெனில் அதன் சுவையும், மணமும் தனித்துவமாக இருக்கும். இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் பெரும்பாலானோரின் மிகவும் பிரியமான உணவு என்னவென்று கேட்டால் பலரும் பிரியாணியைத் தான் சொல்வார்கள்.

இந்த பிரியாணியை சாப்பிட எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிப்பார்கள். அப்படிப்பட்ட பிரியாணியில் ஏராளமான மருத்துவ குணமிக்க மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், கொழுப்புக்களும் அதிகம் இருக்கக்கூடும் என்பதால், இந்த பிரியாணியை சாப்பிடும் போதும் சரி, சாப்பிட்டதும் சரி ஒருசில உணவுகளை உட்கொள்ளக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால், அது செரிமானத்தில் இடையூறை ஏற்படுத்துவதோடு, பல்வேறு அசௌகரியங்களையும் உண்டாக்கும்.
இதுக்குறித்து டாக்டர் பிள்ளை அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியாணியோடு சாப்பிடக்கூடாத 5 உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த உணவுகள் எவையென்பதையும், எந்த காரணத்தினால் சாப்பிடக்கூடாது என்பதையும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. தர்பூசணி, முலாம்பழம்
"பிரியாணி சாப்பிட்ட உடனேயே தர்பூசணி, முலாம் பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதை சாப்பிடும் போது பிரியாணியில் உள்ள எண்ணெயுடன் நீர்ச்சத்து அதிகம் சேர்ந்து, வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம் போன்றவற்றை ஏற்படுத்தும். இதன் விளைவாக சிலருக்கு வயிற்று வலி, வயிற்று அசௌகரியம், குமட்டல் உணர்வு போன்றவை வரலாம். எனவே இவற்றைத் தவிர்க்க பிரியாணி சாப்பிட்டதும் இந்த பழங்களை சாப்பிடாதீர்கள்" என்று டாக்டர் கூறினார்.
2. பால் மற்றும் பால் பொருட்கள்
"சிலருக்கு பிரியாணி சாப்பிட்டதும் டீ குடிக்க பிடிக்கும். சிலருக்கு இதனால் ஒன்றும் ஆகாது. ஆனால் சிலருக்கு பால் அல்லது பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் எடுக்கும் போது அஜீரண கோளாறு வருவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இவற்றைத் தவிர்க்க வேண்டும்" என்று டாக்டர் கூறினார்.
3. எண்ணெயில் பொரித்த உணவுகள்
"பிரியாணி சாப்பிடும் போது எண்ணெயில் பொரித்த சிக்கன் 65 சாப்பிட பிடிக்கும். ஆனால் இப்படி எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஏற்கனவே பிரியாணியில் கொழுப்பு அதிகம் இருக்கும். இந்நிலையில் எண்ணெயில் பொரித்ததையும் உட்கொள்ளும் போது, உடலில் கொழுப்புகள் இன்னும் அதிகரிக்கும் மற்றும் செரிமான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். ஆகவே இப்படி எண்ணெயில் பொரித்த உணவுகளை பிரியாணி சாப்பிடும் போதோ அல்லது சாப்பிட்டு முடித்த பின்னரோ சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்" என்று கூறினார்.
4. இனிப்பு பொருட்கள்
"பிரியாணி சாப்பிட்டதும் சிலருக்கு இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருக்கும். இப்படி சாப்பிடுவதால் செரிமானம் நன்கு நடக்கும் என்று பலர் சாப்பிடுவதுண்டு. ஆனால் உண்மையில் இப்படி சாப்பிடும் போது, இரத்த சர்க்கரை சட்டென்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே இதையும் தவிர்க்க வேண்டும்" என்று டாக்டர் கூறினார்.
5. தண்ணீர் அதிகம் குடிக்கக்கூடாது
"பிரியாணி சாப்பிட்ட உடனேயே அதிகளவில் நீரை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தர்பூசணி பழத்தைப் போன்றே, தண்ணீரும் வயிற்றில் இருக்கும் பிரியாணியின் எண்ணெயுடன் சேர்ந்து வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை போன்றவற்றை ஏற்படுத்தும்" என்று டாக்டர் கூறினார்.
இந்த உணவுகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா?
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை பிரியாணி சாப்பிடும் போதோ அல்லது சாப்பிட உடனேயோ சாப்பிட்டால் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. வயிற்று கோளாறுகள் போன்ற அசௌகரியங்களையே சந்திக்க நேரிடும். மேலும் பிரியாணியை சமைக்கும் போது இறைச்சிகள் சரியாக வேகாமல் இருந்தாலும், அதன் விளைவாக பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி பொதுவாக ஒரு உணவை உட்கொண்டால், மற்ற உணவை உட்கொள்ள குறைந்தது 2 மணிநேர இடைவெளி விட்டால் தான், மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும். மேலும் உணவு உட்கொண்ட பின் உட்கார்ந்திருக்காமல், ஒரு 20 நிமிடம் லேசான நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மதிய வேளையில் பிரியாணியை சாப்பிடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
