Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாதம் உருவாகும் விஷகும்ப யோகத்தால் விபரீதமான பலன்களை அடையப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மட்டன் பிரியாணியை மிஞ்சும் கொத்தமல்லி பிரியாணி ரெசிபி - செஞ்சு பாருங்க, டக்கரா இருக்கும் -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்கள் அவர்களின் குடும்பத்தின் தலைவிதியை மாற்றும் அதிர்ஷ்டம் கொண்டவர்களாம் -
கோடையில் முகம் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா இருக்கணுமா? அப்ப இந்த பச்சை பயறு ஃபேஸ் பேக்கை போடுங்க... -
வெயில் காலத்தில் கல்யாணமா? பாரம்பரியத்தை விட ஆரோக்கியம் முக்கியம், இந்த மாற்றங்களைச் செய்யத் தவறாதீர்கள்! -
திருமணப் பிரச்சனையா? ஆதாரமில்லாமல் கணவர் வீட்டாரை வழக்கில் இழுத்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
உலகில் 90% மக்கள் ஏன் வலது கையை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? இதுதான் காரணமாம் -
1 வருடம் கழித்து உருவாகும் பத்ரா ராஜயோகம்: மே 29 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி ஒரு தடவை கார வறுவல் செஞ்சு பாருங்க - தாறுமாறான சைடிஷா இருக்கும்
பக்ரீத் ஸ்பெஷல் திண்டுக்கல் தலபாக்கட்டி மட்டன் பிரியாணி - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?
Bakrid Special Dindigul Thalappakatti Mutton Biryani Recipe In Tamil: பக்ரீத் பண்டிகை வரப்போகிறது. பக்ரீத் என்றாலே பலருக்கும் மட்டன் பிரியாணி தான் முதலில் நினைவிற்கு வரும். இந்த பக்ரீத் பண்டிகை நாளில் உங்கள் வீட்டில் சுவையான மட்டன் பிரியாணியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் திண்டுக்கல் தலபாக்கட்டி மட்டன் பிரியாணியை செய்து சாப்பிடுங்கள்.

இந்த பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, தனித்துவமான சுவையுடன் இருக்கும். இந்த பிரியாணிக்கு தக்காளி, வெங்காயம் அதிகம் தேவையில்லை. மேலும் இந்த பிரியாணியின் தனித்துவமான சுவைக்கு, அதில் சேர்க்கப்படும் ஒரு மசாலாப் பொடி தான். இந்த பிரியாணியை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால் நிச்சயம் வீட்டில் உள்ளோரின் பாராட்டைப் பெறலாம்.
இந்த திண்டுக்கல் தலபாக்கட்டி மட்டன் பிரியாணி ரெசிபி குறித்து திண்டுக்கல் ஃபுட் கோர்ட் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த திண்டுக்கல் தலபாக்கட்டி மட்டன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திண்டுக்கல் தலபாக்கட்டி மட்டன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைத்து பொடி செய்வதற்கு..
* பிரியாணி இலை - 1
* முந்திரி - 6
* கல்பாசி - 2 துண்டு
* ஏலக்காய் - 6
* கிராம்பு - 10
* ஜாவித்திரி - 1
* அன்னாசிப்பூ - 2
* பட்டை - 2 துண்டு
* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 3/4 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* பூண்டு - 15-20 பல்
* இஞ்சி - 2 இன்ச்
* பச்சை மிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 200 கிராம்
பிரியாணி தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* அரைத்த வெங்காய, பூண்டு விழுது
* அரைத்த பவுடர்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது
* தயிர் - 100 மிலி
* மட்டன் - 3/4 கிலோ
* தண்ணீர் - 1 கப் + 4 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை - பாதி
* சீரக சம்பா அரிசி - 3 கப் (நீரில் 20 நிமிடம் ஊற வைத்தது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் சீரக சம்பா அரிசியை எடுத்து,
நீரில் 2 முறை கழுவி, பின் நீரை ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பிரியாணி இலை, முந்திரி, கல்பாசி, ஏலக்காய்,
கிராம்பு, ஜாவித்திரி, பட்டை, மல்லி விதை, சோம்பு, சீரகம், மிளகு
ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த பொடியை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதே ஜாரில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கொரகொரவென்று அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும்
நெய் ஊற்றி சூடானதும், அரைத்த வெங்காய, பூண்டு விழுதை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, புதினா
மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தயிரை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மட்டனை கழுவி சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கலந்து, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 4-5 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் 4 1/2 கப் நீரை ஊற்றி
மீண்டும் அடுப்பில் வைத்து, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு
சேர்த்து, பின் பாதி எலுமிச்சையின் சாற்றினையும் சேர்த்து கிளறி, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்த சீரக சம்பா அரிசியை
சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* பின் மற்றொரு அடுப்பில் தோசைக் கல்லை வைத்து, அதன் மேல் குக்கரை
வைத்து, தட்டு கொண்டு மூடி, மேலே ஒரு கனமான கல் அல்லது பாத்திரத்தை
வைத்து, குறைவான தீயில் வைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கினால்,
சுவையான திண்டுக்கல் தலபாக்கட்டி மட்டன் பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications