Latest Updates
-
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது? -
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. -
கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்
எந்த பருப்பை எப்படி சாப்பிட்டால் முழு சத்தும் கிடைக்கும்? விளக்கும் டாக்டர்!
Dals Benefits In Tamil: எப்படி இந்தியர்களின் தினசரி உணவில் சாதம் இருக்குமோ, அதேப் போல் தான் பருப்பும் இடம் பெற்றிருக்கும். அதுவும் பருப்பு வகைகளில் குறிப்பிட்ட வகையான பருப்புக்களை நமது தினசரி உணவில் தவறாமல் எடுத்து வருவோம். ஏனெனில் பருப்புக்களில் தாவர வகை புரோட்டீன் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன.

அதுமட்டுமின்றி, பருப்புக்களில் டயட்டரி நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற அத்தியாவசிய கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன. தினசரி உணவில் பருப்பு வகைகளை சேர்த்து வரும் போது தசைச் சீரமைப்பிற்குத் துணைபுரிகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது, இரத்த சர்க்கரையை சீராக வைத்துக் கொள்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
எத்தனை பருப்புக்கள் இருந்தாலும், சமையலில் குறிப்பிட்ட 4 வகையான பருப்புக்களை அடிக்கடி உணவில் சேர்ப்போம். அவை உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு ஆகியவை. இந்த 4 வகையான பருப்புக்களின் சிறப்பம்சம் என்னென்ன மற்றும் அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற எப்படி உட்கொள்ள வேண்டும் என்பன குறித்து டாக்டர் பி. சிவகுமார் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. உளுத்தம் பருப்பு
இட்லி, தோசைக்கும், தினசரி தாளிப்பதற்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு பருப்பு தான் உளுத்தம் பருப்பு. இந்த உளுத்தம் பருப்பில் கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், 'கனிமங்களின் களஞ்சியம்' என்று அழைப்பர்.
2. கடலைப்பருப்பு
வடை, கூட்டு, சட்னி போன்றவற்றிற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பருப்பு தான் கடலைப் பருப்பு. இந்த கடலைப் பருப்பில் அமிலோஸ் என்னும் மாவுச்சத்தும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இந்த பருப்பை 'இரத்த சர்க்கரை நிலைப்படுத்தி' என்று அழைப்பர்.
3. பாசிப்பருப்பு
சாம்பார் வைக்க பயன்படுத்தப்படும் மற்றொரு பருப்பு என்றால் அது பாசிப்பருப்பு தான். இந்த பாசிப்பருப்பில் வாயுவை உண்டாக்கக்கூடிய ஒலிகோசாக்கரைடுகள் குறைவாக இருப்பதாலும், எளிதில் செரிமானமாகக்கூடியது என்பதாலும், இந்த பருப்பு குடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பருப்பாகும்.
4. துவரம் பருப்பு
பொதுவாக சாம்பார் வைக்க பயன்படுத்தக்கூடிய பருப்பு தான் துவரம் பருப்பு. மற்ற பருப்புக்களை விட இந்த பருப்பில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதுவும் 100 கிராம் துவரம் பருப்பில் 1000-1300 மிகி பொட்டாசியம் உள்ளது. இதனால் இந்த பருப்பு தசைகளுக்கான சிறந்த உணவு ஆகும்.
முழு சத்துக்களைப் பெற எப்படி உட்கொள்ள வேண்டும்?
மேலே கொடுக்கப்பட்டுள்ள "பருப்புக்களில் இருந்து முழு சத்துக்களையும் பெற வேண்டுமானால், அதை சரியான முறையில் சமைத்து சாப்பிட வேண்டும். அதற்கு முன் முக்கியமாக அந்த பருப்புக்களை ஊற வைக்க வேண்டும். அதுவும் ஒவ்வொரு பருப்பையும் குறிப்பிட்ட காலம் ஊற வைப்பதன் மூலம், அதில் உள்ள நுண் சத்துக்கள் உடலுக்கு எளிதில் கிடைக்கும்.
* உளுத்தம் பருப்பு - 4-6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* கடலைப் பருப்பு - 6-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பாசிப்பருப்பு - 15-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* துவரம் பருப்பு - 30 நிமிடம் முதல் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
இப்படி பருப்புக்களை ஊற வைப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு:
* ஆன்டி-நியூட்ரியன்ட்டுகள் குறைகிறது.
* புரோட்டீன் செரிமானம் எளிதில் நடக்கும்.
* உடலில் கனிமச்சத்துக்கள் உறிஞ்சும் திறன் அதிகரிக்கும்.
* வாய்வு தொல்லை குறையும்.
* முக்கியமாக சமைக்கும் நேரம் குறையும்." என்று டாக்டர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

