Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
முக்கியமான 5 ஊட்டச்சத்து குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறிகளும்.. அவற்றை தடுக்கும் உணவுகளும்..
Nutritional Deficiency Symptoms In Tamil: உடல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் போதுமான அளவு கிடைக்க வேண்டும். ஆனால் தற்போதைய நவீன உலகில், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் காரணமாக மக்கள் தங்களின் தினசரி உடலுக்கு வேண்டிய சத்துக்களைப் பெற முடியாமல் உள்ளனர். இதன் விளைவாக அவர்களை அறியாமலேயே பலவிதமான ஊட்டச்சத்து குறைபாடுகளால் அவதிப்படுகின்றனர்.

அதுவும் இந்தியாவில் 5 முக்கியமான ஊட்டச்சத்து குறைபாடுகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். இதுக்குறித்து டாக்டர்.P. சிவகுமார் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியாவில் உள்ள முக்கியமான 5 ஊட்டச்சத்து குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறிகளையும், அவற்றை தடுக்கும் உணவுகள் குறித்தும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
1. வைட்டமின் டி குறைபாடு
அறிகுறிகள்:
* மிகுந்த உடல் சோர்வு
* உடல் ஆங்காங்கு வலிக்கும்
* தசை பலவீனம்
சாப்பிட வேண்டிய உணவுகள்:
* கொழுப்பு நிறைந்த மீன்
* முட்டை
* காளான்
* அதிகாலை சூரிய கதிர்கள்
2. இரும்புச்சத்து குறைபாடு
அறிகுறிகள்:
* நாள்பட்ட உடல் சோர்வு
* வெளிரிய சருமம், குறிப்பாக கண் இமைகளின் உட்புறம்
* அதிகப்படியான முடி உதிர்வு
* எளிதில் உடையக்கூடிய நகங்கள்
சாப்பிட வேண்டிய உணவுகள்:
* கீரை வகைகள்
* பருப்பு மற்றும் பயறு வகைகள்
* சோயா உணவுகள்
* ஆடு மற்றும் கோழி ஈரல்
இரும்புச்சத்து நிறைந்த சைவ உணவுகளை எடுக்கும் போது, வைட்டமின் சி நிறைந்த உணவுகளும் சேர்ந்து எடுக்க வேண்டும்.
3. வைட்டமின் பி12 குறைபாடு
அறிகுறிகள்:
* கைகளிலும், கால்களிலும் உணர்வில்லாமல் இருக்கும்/ஊசி குத்துவது போன்று இருக்கும்.
* அதிகப்படியான உடல் சோர்வு
* குழப்பமான மனநிலை
* ஞாபக மறதி
சாப்பிட வேண்டிய உணவுகள்:
* பால் மற்றும் பால் பொருட்கள்
* முட்டை
* ஆடு மற்றும் கோழி ஈரல்
* மீன் வகைகள்
4. கால்சியம் குறைபாடு
அறிகுறிகள்:
* இரவு நேரங்களில் தசைப்பிடிப்பு, தசை இழுப்பு, தசை விரிப்பு
* எளிதில் உடையக்கூடிய நகங்கள்
சாப்பிட வேண்டிய உணவுகள்:
* விதைகள்
* கீரை வகைகள்
* ராகி
* கொள்ளு
5. ஜிங்க் குறைபாடு
அறிகுறிகள்:
* சளி, இருமல் என அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுவது
* காயங்கள் மெதுவாக குணமாவது
* காரணமின்றி முகப்பரு வருவது
சாப்பிட வேண்டிய உணவுகள்:
* விதைகள்
* முந்திரி
* ஓட்ஸ்
* ஆடு மற்றும் கோழிக்கறி
எனவே நண்பர்களே, உங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து குறைபாடுகள் இருந்தால், அவற்றை சரிசெய்யும் உணவுகளை அறிந்து, தினசரி உணவில் சேர்த்து, விரைவில் நலம் பெறுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications