Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
சுகர் குறையணுமா? அப்ப முளைக்கட்டிய வெந்தயத்தை டாக்டர் சொல்ற மாதிரி சாப்பிடுங்க..
Diabetes And Sprouted Fenugreek Seeds: தற்போது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். இப்படி சர்க்கரை நோய் ஒருவருக்கு வருவதற்கு உடலுழைப்பில்லாத மோசமான வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான் முக்கிய காரணங்களாக உள்ளன. இவற்றை ஒருவர் சரிசெய்து கொண்டாலே சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கலாம்.
மேலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை இயற்கை வழியில் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் சிலர் தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்வதோடு, இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் ஒருசில உணவுப் பொருட்களை தினமும் உட்கொண்டு வருகின்றனர். அந்த உணவுப் பொருட்களுள் ஒன்று தான் வெந்தயம்.

ஏனெனில் வெந்தயத்தில் நார்ச்சத்து, புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. அதுவும் இதில் உள்ள கேலக்டோமன்னன் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது வயிறு மற்றும் குடலில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரையின் செரிமானத்தையும் உறிஞ்சுதலையும் மெதுவாக்குகிறது. இதன் மூலம் உணவுக்கு பின் இரத்தத்தில் சர்க்கரை வேகமாக அதிகரிப்பதைத் தடுக்கிறது. அதற்கு வெந்தயத்தை வெறுமனே சாப்பிடுவதை விட முளைக்கட்ட வைத்து சாப்பிடுவது நல்லது.
நீரிழிவு நிபுணரும், தொற்று நோய்கள் ஆலோசகருமான டாக்டர் பிரகாஷ் மூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஒரு இயற்கை வழி ஒன்றை பகிர்ந்துள்ளார். அது தான் முளைக்கட்டிய வெந்தயம். அதுவும் இந்த வெந்தயத்தை எப்படி சாப்பிட்டால் இரத்த சர்க்கரை திறம்பட கட்டுப்படும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
முளைக்கட்டிய வெந்தயத்தை எப்படி சாப்பிட வேண்டும்?
அதில் அவர் கூறியதாவது, "இரத்த சர்க்கரையைக் குறைக்க பலரும் வெந்தயத்தை பொடி செய்து, அதை காலையில் நீரில் கலந்து குடித்து விட்டு, பின் சர்க்கரையே குறையவில்லை என்று கூறுவார்கள். ஆனால் இப்படி சாப்பிட்டால் பெரிதளவில் சர்க்கரை குறையாது. இதை முளைக்கட்ட வைத்து, காலையில் சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன் 1 ஸ்பூனும், மதியம் சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன் 1 ஸ்பூனும் உட்கொள்ள வேண்டும்.
இப்படி உட்கொள்ளும் போது வெந்தயத்தில் உள்ள கேலக்டோமன்னன் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து, உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதையும் தடுக்கிறது" என்று டாக்டர் கூறினார்.
"மேலும் நிறைய பேர் இப்படி முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு, சுகர் மாத்திரையையும் சாப்பிட்டால், சுகர் மிகவும் குறைந்துவிடாதா என்று கேட்கலாம். நிச்சயம் இல்லை. ஏனெனில் இது செக்ரடோகோக்கஸ் இல்லை. அதாவது இன்சுலின் சுரப்பை அதிகரிக்காது. மாறாக இன்சுலின் சகிப்புத்தன்மையைத் தான் மேம்படுத்தும்" என்று கூறினார்.
யாரெல்லாம் இதை சாப்பிடலாம்?
- முளைக்கட்டிய வெந்தயத்தை பிசிஓடி பிரச்சனை உள்ள பெண்கள் அனைவரும் தினமும் சாப்பிடலாம். பிசிஓடியால் தலைமுடி உதிர்வு பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள மருந்தாக இருக்கும்.
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடலாம். இதனால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் என்றும் டாக்டர் கூறினார்.
முளைக்கட்டிய வெந்தயம் கசப்பாக இருக்குமா?
வெந்தயத்தை வெறுமனே சாப்பிட்டால் கசப்பாக இருக்கும். ஆனால் இதை முளைக்கட்ட வைக்கும் போது, அதில் உள்ள கசப்புத்தன்மை போய்விடும். சொல்லப்போனால் வெறும் வெந்தயத்தை சாப்பிடுவதற்கு இது 1000 மடங்கு மேல் என்றும் டாக்டர் கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
