Diabetes: சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப இந்த 5 உணவுகளை காலையில் சாப்பிடுங்க போதும்..

Diabetes Diet In Tamil: உலகளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் வேகத்தைப் பார்க்கும் போது இன்னும் சில ஆண்டுகளில் சர்க்கரை நோய் இல்லாதவர்களை காண்பது என்பது முடியாத ஒன்றாகிவிடும் போல் உள்ளது.

சர்க்கரை நோயானது ஒருவரது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால் வரக்கூடாது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டால், இரத்த சர்க்கரையை சமநிலையில் பராமரிக்க வேண்டியது முக்கியம். மருத்துவர்களின் கூற்றுப்படி, சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் பராமரிப்பது எப்படி என்பதை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.

Diabetes Diet In Tamil Early Morning Superfoods To Prevent Diabetes

முதலில் இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து காலை உணவின் போது உட்கொள்ள வேண்டும். இப்படி உண்பதன் மூலம் இரத்த சர்க்கரை அதிகரிப்பது தடுக்கப்படுவதோடு மட்டுமின்றி, நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும், கண்ட உணவுகளின் மீதான நாட்டம் குறையும் மற்றும் ஆரோக்கியமான எடை இழப்பையும் ஊக்குவிக்கிறது.

ஆனால் நிறைய பேர் காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் உண்ணும் உணவில் கவனத்தை செலுத்துவதில்லை. இருப்பதை சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர். இப்படி கண்டதை சாப்பிடுவதாலேயே இரத்த சர்க்கரை அதிகரித்து சர்க்கரை நோயின் அபாயம் அதிகரிக்கிறது. அதுவும் சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒவ்வொரு வேளை உண்ணும் உணவிலும் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, சர்க்கரை நோயாளிகள் காலையில் எழுந்த 1 மணிநேரத்திற்குள் ஏதாவது சாப்பிட்டுவிட வேண்டும். அதுவும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை உண்பது நல்லது. ஆனால் சுத்திரிக்கப்பட்ட, குறைவான நார்ச்சத்துள்ள மற்றும் எளிய கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இப்போது சர்க்கரை நோயைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் காலையில் எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.

பாகற்காய் ஜூஸ்

பாகற்காய் கசப்புச் சுவையைக் கொண்ட காய்கறி. இந்த பாகற்காய் பாரம்பரியமாக இன்சுலினாக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-டயாபெடிக் பண்புகள் அதிகமாக உள்ளன. எனவே இதை உட்கொள்ளும் போது, அது இன்சுலினை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் க்ளுக்கோஸை வளர்சிதை மாற்றம் செய்யவும் உதவுகிறது. உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1/2 டம்ளர் பாகற்காய் ஜூஸைக் குடியுங்கள். இதனால் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

வெந்தயம்

வெந்தய விதைகள் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த உணவுப் பொருள். இந்த விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்கி, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உறிஞ்சுதவை மெதுவாக்குகிறது. அதற்கு வெந்தய விதைகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும்.

ஆய்வுகளின் படி, ஊற வைந்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் அது ஒட்டுமொத்த கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவி புரிந்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. மேலும் நெல்லிக்காயில் குரோமியம் உள்ளது. இது கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது மற்றும் உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரை கட்டுப்படுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த நெல்லிக்காயை ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.

மஞ்சள் நீர்

மருத்துவர்களின் கூற்றுப்படி, மஞ்சள் நீரை காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் குடித்து வருவது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மஞ்சளில் குர்குமின் என்னும் செயலில் உள்ள கூறு உள்ளது. இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆய்வுகளிலும் மஞ்சள் நீர் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, உடல் பருமனமாவதைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளன.

பட்டை டீ

மசாலா பொருட்களுள் ஒன்றான பட்டை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. முக்கியமாக இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் ஆற்றலை கொண்டவை. இந்த பட்டையைக் கொண்டு டீ தயாரித்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்த சர்க்ரை கட்டுப்படுவதோடு, ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதமும் தடுக்கப்படும். எனவே இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கவும், நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடவும் பட்டைக் கொண்டு டீ தயாரித்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, March 5, 2024, 14:36 [IST]
Desktop Bottom Promotion