Latest Updates
-
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம்
டைப்-1 மற்றும் டைப்-2 சர்க்கரை நோய்க்கான வித்தியாசம் என்ன தெரியுமா?
ஒவ்வொரு வருடமும் சர்க்கரை நோய் தொடர்பான பிரச்சனையால் சுமார் 1.6 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். சர்க்கரை நோய் என்றதுமே பலருக்கும் முதலில் தோன்றுவது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது தான்.
சர்க்கரை நோயின் உலகளாவிய சுமை கடந்த சில தசாப்தங்களாக வேகமாக விரிவடைந்துள்ளது. இதற்கு வாழ்க்கை முறை ஒரு பொதுவான சுகாதார கவலையாக மாறியுள்ளது. ஒருவரது மோசமான வாழ்க்கை முறையால் உலகளவில் சுமார் 425 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் சர்க்கரை நோய் தொடர்பான பிரச்சனையால் சுமார் 1.6 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். சர்க்கரை நோய் என்றதுமே பலருக்கும் முதலில் தோன்றுவது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது என்பது தான். அது உண்மை தான். சர்க்கரை நோய் உள்ளவர்கள் உண்ணும் உணவில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் வகைகள்
சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை டைப்-1 சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோய். இவை இரண்டுமே பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளன. ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அதைக் கொண்டே உஷாராகிக் கொள்ளலாம். அந்த அறிகுறிகளாவன:
* அடிக்கடி சிறுநீர் கழிப்பது
* அதிக பசி மற்றும் தாகம்
* சோர்வு
* மங்கலான பார்வை
* காயங்கள் மற்றும் புண்கள் விரைவில் குணமாகாமல் இருப்பது
இது தவிர, டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனநிலை மாற்றங்கள் மற்றும் விவரிக்கப்படாத எடை இழப்பு போன்றவற்றை சந்திப்பார்கள். அதே சமயம் டைப்-2 சர்க்கரை நோயாளிகள் கை அல்லது கால்களில் உணர்வின்மை மற்றும் எரிச்சலை சந்திக்கக்கூடும்.

டைப்-1 Vs டைப்-2
நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் சர்க்கரை நோயானது, உடலின் ஆற்றலுக்குத் தேவையான குளுக்கோஸை சரியாக சேமித்து பயன்படுத்த முடியாத போது ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் டைப்-1 மற்றும் டைப்-2 இரண்டுமே ஒரே மாதிரியானவை என்று நினைத்து குழப்பமடைகிறார்கள். இருப்பினும், இந்த இரண்டிற்கும் இடையே பல வித்தியாசம் உள்ளது. இரண்டுமே நாள்பட்ட நோய்கள் மற்றும் நாள்பட்ட உயர் இரத்த சர்க்கரை அளவிற்கு வழிவகுக்கும். ஆனால் இதற்கான காரணங்கள் மற்றும் அவை உடலை பாதிக்கும் விதம் என ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபடுகின்றன.

டைப்-1 சர்க்கரை நோய்
டைப்-1 சர்க்கரை நோய் சில சமயங்களில் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கு தோன்றுவதால், இது சிறார் நீரிழிவு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வகை சர்க்கரை நோய், உடலில் உள்ள ஆரோக்கியமாக செல்களை கிருமிகள் என்று நினைத்து நோயெதிர்ப்பு அமைப்பு தவறுதலாக தாக்க ஆரம்பிக்கிறது. இவை கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்களை அழிக்கின்றன. இதன் காரணமாக உடலால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் போகிறது.
நோயெதிர்ப்பு அமைப்பு உடலின் ஆரோக்கியமான செல்களை தாக்குவதற்கான காரணம் தெரியவில்லை மற்றும் இது மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளுடன் இணைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் டைப்-1 சர்க்கரை நோய் பரம்பரை நோயாக மற்றும் தடுக்க முடியாததாக உள்ளது.

டைப்-1 சர்க்கரை நோயின் ஆபத்து காரணிகள்
* குடும்ப வரலாறு : உங்கள் குடும்பத்தில் உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி போன்ற ஒருவருக்கு இந்த பிரச்சனை இருந்தால், இந்த பிரச்சனையை நீங்களும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
* வயது : டைப்-1 சர்க்கரை நோயின் அறிகுறிகள் எந்த வயதிலும் தோன்றலாம். ஆனால் இது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அதிகம் காணப்படுகிறது.
* மரபணுக்கள் : உடலில் சில குறிப்பிட்ட மரபணுக்கள் இருப்பதால், இந்த பிரச்சனை உருவாவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.

டைப்-2 சர்க்கரை நோய்
டைப்-2 சர்க்கரை நோய் பெரும்பாலும் வயதானவர்களிடையே காணப்படுகிறது. சமீபத்தில், மோசமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களால் குழந்தைகளிடமும் சில அறிகுறிகள் காணப்படுகின்றன. டைப்-2 சர்க்கரை நோயில், கணையம் இன்சுலினை உற்பத்தி செய்யும் போது, உடலால் அதை திறம்பட பயன்படுத்த முடியாது. இதனால் இன்சுலின் இரத்தத்தில் தேங்க ஆரம்பித்து, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. டைப்-1 சர்க்கரை நோயை விட டைப்-2 சர்க்கரை நோய் மிகவும் பொதுவானது. ஆனால் சிலர் இன்சுலின் எதிர்ப்பு சக்தியாக மாறுவதற்கான உண்மையாக காரணம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால் ஆய்வாளர்கள் இது மோசமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் அதிக உடல் எடையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக நம்புகின்றனர்.

டைப்-2 சர்க்கரை நோயின் ஆபத்து காரணிகள்
* இரத்த சர்க்கரை அளவு சற்று உயர்ந்து இருப்பது
* உடல் பருமனுடன் இருத்தல்
* டைப்-2 சர்க்கரை நோயின் குடும்ப வரலாற்றைக் கொண்டிருப்பது
* உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை
* பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனை இருப்பது
டைப்-1 சர்க்கரை நோயைப் போலன்றி, டைப்-2 சர்க்கரை நோயின் அறிகுறிகளை சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் எளிதில் நிர்வகிக்கலாம். அவையாவன:
* ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல்
* சுறுசுறுப்பாக இருப்பது
* ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவை உண்பது



Click it and Unblock the Notifications