எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்!

Healthy Foods In Tamil: நமது உடல் நோயின்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அப்படி உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள இயற்கை தந்த ஒரு வரப்பிரசாதம் தான் பழங்கள். இந்த பழங்களில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவமான சத்துக்களை உள்ளடக்கியுள்ளன. இதனால் தான் குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகளுக்கு குறிப்பிட்ட பழங்கள் நல்ல தீர்வை வழங்குகின்றன.

Doctor Explains Which Fruit Is Best For Which Health Problem

டாக்டர்.பி.சிவகுமார் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்த பழம் சிறந்தது என்பது குறித்து விளக்கியுள்ளார். இதுவரை உங்களுக்கு எந்த பழம் எதற்கு நல்லது என்பது தெரியாமல் இருந்திருந்தால், இனி தெரிந்து கொள்ளுங்கள்.

1. பப்பாளி

"பப்பாளியில் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் அதிகம் இருப்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்கும்." என்று டாக்டர் கூறினார். எனவே மலச்சிக்கலால் சிரமப்படுபவர்கள் தினமும் ஒரு கப் பப்பாளி சாப்பிட மலச்சிக்கலைத் தவிர்க்கலாம்.

2. வாழைப்பழம்

"வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது." என்று டாக்டர் கூறினார். ஆகவே இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

Doctor Explains Which Fruit Is Best For Which Health Problem

3. மாம்பழம்

"மாம்பழத்தில் உள்ள லுடின், ஜியாஜாந்தின் மற்றும் வைட்டமின் சி கண்புரை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது." என்று டாக்டர் கூறினார். எனவே கண் புரை போன்ற கண் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில் மாம்பழத்தை சாப்பிடுங்கள்.

4. மாதுளை

"மாதுளையில் உள்ள புனிகலாஜின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது." என்று டாக்டர் கூறினார். எனவே இதயத்தையும், இரத்த நாளங்களையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால் மாதுளையை தினமும் சிறிது சாப்பிடுங்கள்.

5. சப்போட்டா

"சப்போட்டாவில் அதிகளவு க்ளுக்கோஸ், புருக்டோஸ் போன்ற இயற்கை சர்க்கரை உள்ளது. இதை உட்கொள்ளும் போது உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும்." என்று டாக்டர் கூறினார். எனவே நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் இருக்க நினைத்தால், சப்போட்டாவை சாப்பிடுங்கள்.

Doctor Explains Which Fruit Is Best For Which Health Problem

6. ஆப்பிள்

"ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு ஒரு சிறந்த ப்ரீபயோடிக் உணவாக இருந்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது." என்று டாக்டர் கூறினார். எனவே உங்களின் செரிமான மண்டலம் சீராக செயல்பட வேண்டுமானால் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள்.

7. ஆரஞ்சு

"ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு தேவைப்படுவதால், இந்த பழத்தை தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம், சருமம் வயதாவது தடுக்கப்படுகிறது." என்று டாக்டர் கூறினார். ஆகவே நீண்ட காலம் இளமையாக காட்சியளிக்க விரும்பினால், அதற்கு ஒரு எளிய வழி ஆரஞ்சு பழத்தை உட்கொள்வது தான்.

8. தர்பூசணி

"தர்பூசணி பழத்தில் 92% நீர்ச்சத்து உள்ளது. இது உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது." என்று டாக்டர் கூறினார். எனவே நீரிழப்பு மற்றும் உடல் சூடு பிரச்சனையால் சிரமப்படுபவர்கள் தர்பூசணி பழத்தை சாப்பிட்டு வருவது நல்லது.

Doctor Explains Which Fruit Is Best For Which Health Problem

9. கொய்யாப்பழம்

"கொய்யாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் புரோட்டீன், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது." என்று டாக்டர் கூறினார். ஆகவே தினம் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

10. சீத்தாப்பழம்

"100 கிராம் சீத்தாப்பழத்தில் 100 கலோரி கிடைக்கும். எனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த பழம். " என்று டாக்டர் கூறினார். எனவே மெலிந்த உடலுடன் இருப்பவர்கள் அல்லது உடல் எடையை கூட்ட நினைப்பவர்கள் இந்த பழத்தை உணவில் சேர்த்து வந்தால், எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

11. கருப்பு திராட்சை

"கருப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் வராமல் தடுக்கிறது." என்று டாக்டர் கூறினார். எனவே எளிய வழியில் புற்றுநோயை தடுக்க நினைத்தால் கருப்பு திராட்சை பழத்தை தினமும் உட்கொண்டு வாருங்கள்.

Doctor Explains Which Fruit Is Best For Which Health Problem

12. அன்னாசி

"அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் என்னும் நொதிப்பொருள் உள்ளது. இது வயிற்று உப்புசம் ஏற்படாமல் தடுக்கிறது." என்று டாக்டர் கூறினார். ஆகவே அடிக்கடி வாய்வு தொல்லை மற்றும் வயிற்று உப்புசத்தை சந்திப்பவர்கள் அன்னாசிப்பழத்தை உட்கொண்டு வர அதிலிருந்து விடுபடலாம்.

13. நாவல்பழம்

"நாவல்பழத்தில் உள்ள ஜாம்போலின் என்னும் கிளைகோசைடு, இரத்தத்தில் சர்க்கரையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது." என்று டாக்டர் கூறினார். ஆகவே சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை தங்களின் உணவில் சேர்த்து வர, இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, June 5, 2026, 12:02 [IST]
Desktop Bottom Promotion