Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...!
ஆரோக்கியமான உணவா இருந்தாலும், இந்த பிரச்சனை இருந்தா சாப்பிடாதீங்க..
Health Tips In Tamil: தற்போது சமூக வலைத்தளங்களில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளாக கூறி ஏராளமான உணவுகள் பகிரப்பட்டு வருவதால், அனைவரும் தங்களின் உணவில் அந்த உணவுகளை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்பதில்லை. அதுவும் உடலில் ஏற்கனவே பிரச்சனைகளை கொண்டவர்கள் தாங்கள் உண்ணும் உணவுகளில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
ஏனெனில் சில பிரச்சனைகளைக் கொண்டவர்கள் சில வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும். அது எவ்வளவு ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சனைக்கு அந்த உணவை எடுக்கக்கூடாதெனில், அதை தொடக்கூடாது.

எனவே ஆரோக்கியமானது என்பதற்காக உங்கள் உடலுக்கு சேராத உணவுகளை உட்கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் நிலைமை தான் மோசமாகும். கீழே எந்த பிரச்சனையை கொண்டவர்கள் எந்த ஆரோக்கியமான உணவை உட்கொள்ளக்கூடாது என்பதைக் காண்போம்.
1. நெல்லிக்காய் ஜூஸ்
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது தவிர வேறு சில அத்தியாவசிய சத்துக்களும் உள்ளன. இப்படிப்பட்ட நெல்லிக்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் தான். ஆனால் அசிடிட்டி அல்லது GERD போன்ற பிரச்சனையைக் கொண்டிருந்தால், நெல்லிக்காய் ஜூஸைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது வயிற்று எரிச்சலை அதிகரித்து, அமில சுரப்பை அதிகரித்துவிடும்.
2. வெந்தய நீர்
வெந்தயம் உடல் சூட்டைக் குறைப்பதில் சிறந்தது மற்றும் இதில் நார்ச்சத்தும் ஏராளமான அளவில் உள்ளன. இந்த வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, நீருடன் உட்கொண்டால் ஏராளமாக நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். ஆனால் பைல்ஸ் அல்லது ஹெமோராய்டுகள் இருந்தால், வெந்தய நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது குடல் தூண்டுதலையும் எரிச்சலையும் அதிகரிக்கும்.
3. மல்லி நீர்
மல்லி விதைகளை நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். ஆனால் ஏற்கனவே மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு மிகவும் குறைவாக இருந்தால், இந்த மல்லி நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள குளிர்ச்சி பண்புகள் இரத்தப்போக்கை இன்னும் குறைக்கும்.
4. பேரிச்சம் பழம்
பேரிச்சம் பழம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும். ஆனால் சர்க்கரை நோய், கொழுப்பு கல்லீரல் அல்லது உயர் ட்ரை கிளிசரைடுகள் இருந்தால், பேரிச்சம் பழத்தை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் சர்க்கரை அதிகமாக உள்ளது.
5. சியா விதைகள்
வயிற்று உப்புசத்தால் சிரமப்படுபவர்கள் சியா விதைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது அதிகப்படியான வாய்வு உருவாக காரணமாக உள்ளது.
6. பச்சை பூண்டு
பூண்டு பற்கள் ஏராளமான சத்துக்களை கொண்டது. அதுவும் அசிடிட்டி, அமில சுரப்பு போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள் பூண்டு பற்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அதுஉடலில் வயிற்று அமிலத்தையும், குடல் எரிச்சலையும் அதிகரிக்கும்.
7. கம்பு
சிறு தானியங்களுள் ஒன்றான கம்பு உடலுக்கு மிகவும் நல்லது என்பதை அறிவோம். ஆனால் அந்த கம்பை ஹைப்போதைராய்டு உள்ளவர்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது தைராய்டு செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, நிலைமையை மோசமாக்கிவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












