Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க பழைய காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா?
இந்த விதையை தினமும் இப்படி சாப்பிட்டால், ஒரே மாதத்தில் எடையில் நல்ல மாற்றம் தெரியுமாம்..
சியா விதைகள் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது மற்றும் அந்த சியா விதைகளை எப்படி உட்கொள்ளலாம் என்பன போன்ற உங்களின் பல கேள்விகளுக்கான விடையை இக்கட்டுரையில் காண்போம்.
உடல் பருமன் மற்றும் தொப்பையைக் குறைக்க நிறைய பேர் முயற்சித்து கொண்டிருக்கின்றனர். இந்த உடல் பருமனைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இருப்பினும் முயற்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை. அந்த வகையில் உடல் பருமனைக் குறைக்க பலவிதமான டயட்டுகள், உணவுகள் இன்டர்நெட்டில் உலாவிக் கொண்டிருக்கின்றன. அதில் உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் உணவுப் பொருள் தான் சியா விதைகள். இந்த சியா விதைகள் சிறிய அளவில் இருந்தாலும், ஏராளமான சத்துக்களை தன்னுள் கொண்டவை.

இந்த விதைகள் உடல் எடையைக் குறைப்பது மட்டுமின்றி, இதயம் முதல் மூளை வரை அனைத்து முக்கிய உறுப்புக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. ஏனெனில் இந்த சியா விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை அதிகளவி நிறைந்துள்ளன. முக்கியமாக இந்த விதைகளை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். சரி, சியா விதைகள் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது மற்றும் அந்த சியா விதைகளை எப்படி உட்கொள்ளலாம் என்பன போன்ற உங்களின் பல கேள்விகளுக்கான விடையை இக்கட்டுரையில் காண்போம்.

சியா விதைகள் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன?
சியா விதைகளில் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்க உதவுகிறது. இதன் விளைவாக உடல் எடையைக் குறைக்க உதவுவதாக கூறுப்படுகிறது. மேலும் ஆய்வுகளில் சியா விதைகளை உட்கொண்டு வந்தால், அது வயிற்றுப் பகுதியில் உள்ள உள்ளுறுப்பு கொழுப்புக்ளை குறைக்க உதவுவது தெரிய வந்துள்ளது. சியா விதைகளின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், அதை பல வழிகளில் உட்கொள்ளலாம். இப்போது சியா விதைகளை எப்படியெல்லம் சாப்பிடலாம் என்பதைக் காண்போம்.

சியா புட்டிங்
* ஒரு பௌலில் பால், தயிர், சியா விதைகள், மாப்பிள் சிரப் மற்றும் சிறிது உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அனைத்தையும் ஒன்றாக கலந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு அதை மூடி வைத்து, ஃப்ரிட்ஜில் இரவு முழுவதும் வைத்து, மறுநாள் காலையில் எடுத்தால், க்ரீமியான சியா புட்டிங் தயார்.
* விருப்பமிருந்தால், அதன் மேல் சிறிது விருப்பமான பழங்களைத் தூவி சாப்பிடலாம்.

ஃபுரூட் அண்ட் நட்ஸ் சாலட்
* முதலில் தேங்காய் பாலில், சிறிது சியா விதைகளைப் போட்டு, தேன் சேர்த்து கலந்து, 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் உங்களுக்கு விருப்பமான பழங்களை துண்டுகளாக்கி ஒரு பௌலில் எடுத்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நட்ஸை பொடியாக வெட்டி, பழங்களுடன் சேர்த்து கிளற வேண்டும்.
* பிறகு அதில் சியா விதை கலவை சேர்த்து நன்கு கலந்தால், சாலட் தயார். இது எடையைக் குறைக்க நினைப்போருக்கான சிறந்த சாலட் ஆகும்.

சியா விதை ஓட்ஸ்
* ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், சியா விதைகள், பட்டைத் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் பாதாம் பாலை சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* ஓட்ஸ் நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் சுவைக்கேற்ப தேன் மற்றும் விருப்பமான பழங்கள் மற்றும் நட்ஸ்களை சேர்த்து கலந்தால், சுவையான சியா ஓட்ஸ் தயார்.

சியா விதை லெமன் ஜூஸ்
* ஒரு பாத்திரத்தில் சியா விதைகளை எடுத்து, அதில் நீரை ஊற்ற வேண்டும்.
* பின் அதில் புதினா இலைகள், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 30 நிமிடம் ஆனதும், அதை நன்கு கலந்தால் ஜூஸானது ஜெல் போன்று இருக்கும். இப்போது சுவையான சியா விதை லெமன் ஜூஸ் தயார்.



Click it and Unblock the Notifications