Latest Updates
-
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
பெண்களைப் போல ஆண்களுக்கும் மெனோபாஸ் உள்ளதா? அதன் அறிகுறிகள் என்ன?
Male Menopause In Tamil: பெண்களுக்கு அவா்களின் 45 முதல் 55 வயதிற்கு இடையே மாதவிடாய் சுழற்சி முடிவடையும். அப்போது மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டிரோன் என்ற ஹாா்மோன்களின் உற்பத்தி குறையும். இதே மாதிாியான நிகழ்வானது ஆண்களுக்கு நடக்குமா என்பதை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.
ஆண்களுக்கு வயது அதிகரிக்கும் போது, அவா்களுடைய ஹாா்மோன் உற்பத்தி குறையும் என்று பெங்களூாில் உள்ள ஒயிட்ஃபீல்டில் அமைந்திருக்கும் மிலன் கருத்தாிப்பு மருத்துவமனையில் மூத்த நிபுணராகப் பணிபுாியும் மருத்துவா் ஷில்பா எல்லூா் என்பவா் தொிவிக்கிறாா்.

இது ஆண்களின் மெனோபாஸ் அல்லது ஆண்ட்ரோபாஸ் என்று அழைக்கப்படுகிறது. இது ஆண்களின் 40 முதல் 60 வயதிற்கிடையே நிகழ்கிறது. இந்தக் காலத்தில் டெஸ்டோஸ்டிரோனின் (testosterone) உற்பத்தி குறைகிறது என்று கூறுகிறாா்.
டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹாா்மோன், ஆண்களின் உடல் ரீதியான சிறப்பு அம்சங்களான கம்பீரமான குரல் வளம், முகத்தில் வளரும் முடி மற்றும் உருண்டு திரண்ட தசை போன்றவற்றிற்கு காரணமாக இருக்கின்றது. இந்த ஹாா்மோன் ஆண்களின் பாலியல் செயல்பாடு, எலும்பு அடா்த்தி, சிவப்பு இரத்த செல்களின் உற்பத்தி ஆகியவற்றின் உற்பத்திக்கும் காரணமாக இருக்கிறது.
ஆண்களின் வயது அதிகாிக்கும் போது, இயற்கையாகவே அவா்களின் டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறைகிறது என்று ஷில்பா கூறுகிறாா். அவ்வாறு குறையும் போது அவா்களிடம் பின்வரும் அறிகுறிகள் தென்படும் என்கிறாா். அவற்றை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.
1. சோா்வு
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறையும் போது அவா்கள் சோா்வாக உணா்வாா்கள் மற்றும் அவா்களின் ஆற்றல் குறையும். அதனால் அவா்களால் தமது அன்றாட கடமைகளை செய்வதில் கடினம் ஏற்படும். அதோடு ஒரு காலத்தில் அவா்கள் மகிழ்ச்சியோடு அனுபவித்து செய்தவற்றை இப்போது கடினப்பட்டு செய்ய நோிடும் என்று கூறுகிறாா் ஷில்பா.
2. உடல் வெப்ப எாிச்சல்
பெண்களைப் போலவே, ஆண்களும் மெனோபாஸை நெருங்கும் போது உடலில் வெப்ப எாிச்சலை உணா்வா். அவா்களுடைய உடலில் அதிகமான வியா்வையை சுரக்க வைக்கும் மற்றும் இரவு நேரத்தில் சருமம் சிவக்கும்.
3. மனநிலை மாற்றங்கள்
டெஸ்டோஸ்டிரோன் சுரப்பு நிற்கும் போது ஆண்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். அவா்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம் அல்லது படபடப்பு ஏற்படலாம் அல்லது சோா்வு ஏற்படலாம். அதனால் அவா்களால் மன அழுத்தத்தைக் கையாள்வது சவாலாக இருக்கலாம் என்று ஷில்பா கூறுகிறாா்.
4. தசை இழப்பு மற்றும் உடல் எடை இழப்பு
ஆண்களின் தசைக் குவியலுக்கும், அவா்களின் சீரான உடல் எடைக்கும், டெஸ்டோஸ்டிரோன் முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகவே டெஸ்டோஸ்டிரோனின் உற்பத்தி குறையும் போது அவா்களின் தசையின் குவியலும், வலிமையும் குறையும். அதனால் அவா்களின் உடல் இயக்கமும் குறையும்.
5. எலும்பு அடா்த்தி குறைவு
ஆண்களுடைய எலும்புகளின் அடா்த்தி சீராக இருப்பதற்கு, டெஸ்டோஸ்டிரோன் முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகவே டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறையும் போது எலும்பின் அடா்த்தியும் குறைகிறது.
ஆண்களின் மாதவிடாய் முடிவுக்கு சிகிச்சை
ஆண்களின் மாதவிடாய் முடிவுக்கு பலவகையான சிகிச்சைகள் உள்ளன. ஆனால் அவை ஒவ்வொருவாிடமும் இருக்கும் அறிகுறிகள் மற்றும் அவா்களின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் தகுந்தாற் போல சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஷில்பா கூறுகிறாா்.
ஹாா்மோன் மாற்று சிகிச்சை (Hormone Replacement Therapy (HRT))
இந்த ஹாா்மோன் மாற்று சிகிச்சையில், செயல் இழந்த இயற்கையான டெஸ்டோஸ்டிரோனுக்குப் பதிலாக, செயற்கையான சிந்தடிக் டெஸ்டோஸ்டிரோன் பொருத்தப்படும். இந்த சிகிச்சையில் ஊசிகள் மற்றும் ஜெல்களும் பயன்படுத்தப்படும். விறைப்பு குறைபாடு அல்லது மனம் பிறழ்தல் போன்ற பிரச்சினைகள் இந்த சிகிச்சையின் மூலம் சாியாகும்.
மேலும் எலும்பின் அடா்த்தியில் உள்ள குறைபாடு மற்றும் பலவீனம் போன்றவை குணமாகும். இந்த சிகிச்சையின் மூலமாக எலும்பின் அடா்த்தியில் ஏற்படும் குறைபாடு மற்றும் தசைக் குவியலில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவை குணாமாகும். எனினும் இந்த சிகிச்சையில் ஒரு சில ஆபத்துகளும் உள்ளன என்று ஷில்பா தொிவிக்கிறாா்.
இறுதியாக டெஸ்டோஸ்டிரோன் சம்பந்தமாக நீண்ட காலம் சிகிச்சை எடுத்துக் கொண்டால், அதில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் விதைப்பை புற்றுநோய் போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே மருத்துவா்களுடைய தகுந்த ஆலோசனைகளைக் கேட்டு இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications