Latest Updates
-
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உங்க தொப்பையை சும்மா அசால்ட்டா குறைக்கணுமா? அப்போ இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க...
நிறைய பேருக்கு இதற்கு நேரமே இருப்பதில்லை. ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது எல்லாம் கடினமான விஷயமாக நினைக்கின்றனர். ஆனால் படிக்கட்டுக்களைக் கொண்டே எளிதில் தொப்பையைக் குறைக்கலாம்.
எல்லாருக்கும் இருக்கும் பெரிய கவலை தொப்பையை குறைப்பது தான். அவங்களும் என்னென்னவோ செய்து பார்ப்பாங்க ஆனா தொப்பை குறைந்தபாடே இருக்காது. இடுப்புப் பகுதியில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைப்பது மிகவும் கடினமான ஒன்று. இதற்கு நீங்கள் இரண்டு மடங்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

நிறைய பேருக்கு இதற்கு நேரமே இருப்பதில்லை. ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது எல்லாம் கடினமான விஷயமாக நினைக்கின்றனர். அதற்காகத் தான் நாங்கள் சில எளிய பயிற்சிகளை உங்களுக்கு வழங்குகிறோம். இதன் மூலம் உங்கள் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பை 5 வாரத்திலேயே 5 அங்குலம் வரை குறைக்க இயலும்.

படிக்கட்டுகளில் ஏறுங்கள்
* இந்த உடற்பயிற்சியின் போது நீங்கள் மாடிப் படிக்கட்டுக்களில் ஏற வேண்டும். படிக்கட்டுகள் மிகப் பெரிய அளவில் இருக்கக் கூடாது. இல்லையென்றால் நீங்கள் விழ நேரிடலாம். மேலும் படிக்கட்டுக்களில் ஏறும் போதும், இறங்கும் போது நன்கு சுவாசிக்க வேண்டும்.
* இந்த உடற்பயிற்சி உங்கள் வயிற்று தொப்பையை விரைவில் குறைக்க உதவியாக இருக்கும். இதை தினசரி செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

குதித்தல்
* இந்த உடற்பயிற்சியின் போது மாடி படிக்கட்டுகளில் நின்று கொள்ளுங்கள். உங்கள் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது குதியுங்கள்.
* இந்த உடற்பயிற்சி செய்யும் போது ஆழ்ந்த சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு எளிமையான பயிற்சியாகும். எனவே நீங்கள் ஒரு நேரத்தில் 40-50 முறை எளிதாக செய்யலாம்.
* இது வயிற்று கொழுப்பைக் குறைப்பதோடு, அடி வயிற்றுப்பகுதிக்கு நல்லதும் கூட.

ட்ரைசெப்ஸ் டிப்ஸ்
* இந்த பயிற்சிக்கு படிகட்டிகளில் பின்னோக்கி நின்று கொள்ளுங்கள். இப்பொழுது படிக்கட்டுகளில் பின்னோக்கி செல்லும் வகையில் கைகளை முதல் படியில் வைக்க வேண்டும்.
* இப்பொழுது கால்களை முன்னோக்கி நீட்டிக் கொண்டு உடலை ஒட்டுமொத்தமாக தூக்கி தூக்கி இறக்குங்கள்.
* கைகளை பலமாக படிகட்டிகளில் பிடித்துக் கொண்டு உடலை தூக்குங்கள்.
* இந்த உடற்பயிற்சி அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கைகள், முதுகு மற்றும் இடுப்பை வலிமையாக்குகிறது.

புஷ் அப்
* தரையில் இருந்து முதல் அல்லது இரண்டாவது (உயரம் வாரியான) படிக்கட்டில் உங்கள் கைகளை வைத்து, கால்விரல்களை தரையில் வைக்கவும். பிளாங்கின் நிலைக்கு வரவும்.
* இப்போது உங்கள் கைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இப்பொழுது கைகளை அழுத்தி ஒட்டுமொத்த உடல் எடையையும் மேல்நோக்கி உயர்த்துங்கள்.
* பிறகு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து புஷ் அப் எடுங்கள்.
* இப்படி செய்யும் போது ஒவ்வொரு நேரத்திலும் மார்பு படிகட்டை தொடட்டும்.
* நீங்கள் ஒரு நேரத்தில் 5 முதல் 20 புஷ் அப்களை செய்யலாம்.
* இதற்குப் பிறகு, 30 விநாடிகள் இடைவெளி எடுத்து மீண்டும் தொடங்கலாம்.

பேலன்ஸ் பிளான்க்
* இந்த உடற்பயிற்சி செய்ய முதலில் பிளாங் நிலைக்கு வாருங்கள்.
* உங்கள் உள்ளங்கைகளை தரையில் இருந்து படிகட்டிகளில் வைக்கவும். கால்களை நேராக வைத்து பாத விரல்கள் தரையை தொடும்படி வைக்கவும்.
* இதற்குப் பிறகு, உங்கள் இடது கை மற்றும் வலது காலை மேலே உயர்த்தவும்.
* இந்த நிலையில் 15 விநாடிகள் நின்ற பின் கைகளையும் கால்களையும் மீண்டும் தங்கள் இடத்திற்கு கொண்டு வந்து, பின்னர் வலது கை மற்றும் இடது காலை உயர்த்தவும்.
* இதை 10 தடவை செய்து வாருங்கள். இடுப்புப் பகுதியை சுற்றி தொங்குகின்ற சதைகள் நன்றாக குறையும்.



Click it and Unblock the Notifications