ஒரு மாசத்துல உடல் எடையில் மாற்றம் தெரியணுமா? அப்ப இதுல ஒரு பானத்தை தினமும் காலையில் குடிங்க...

வெறும் வயிற்றில் ஆரோக்கியமான பானங்களைக் குடிக்கும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, செரிமான செயல்பாடு மேம்பட்டு உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.

தற்போது பெரும்பாலான மக்கள் தங்களின் உடல் எடையைக் குறைக்க பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவரது உடல் எடையைக் குறைப்பதில் டயட் மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் நிறைய பேருக்கு கடுமையான டயட்டை பின்பற்ற பிடிக்காது. அத்தகையவர்கள் எளிய வழியில் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பார்கள். உடல் எடையைக் குறைக்க ஒருசில பானங்களும் உதவும். ஆனால் அதற்கு அந்த பானங்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

Morning Empty Stomach Drinks For Weight Loss In Tamil

இப்படி வெறும் வயிற்றில் ஆரோக்கியமான பானங்களைக் குடிக்கும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, செரிமான செயல்பாடு மேம்பட்டு உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. நீங்கள் எளிய வழியில் உடல் எடையைக் குறைக்க விரும்புபவராயின், கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஆப்பிள் சீடர் வினிகர்

1. ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடையை வேகமாக குறைவதாக பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயம் எடையைக் குறைக்க ஆப்பிள் சீடர் வினிகரை எடுப்பதாக இருந்தால், அதன் அளவு மிகவும் முக்கியமானது. நீங்கள் எடையைக் குறைக்க நினைத்தால், 200 மிலி நீரில் 5 மிலி-10 மிலி ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஏனெனில் வினிகரின் அளவு அதிகமானால், அது பிற ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும். ஒருவேளை இரைப்பை பிரச்சனையைக் கொண்டிருந்தால், ஆப்பிள் சீடர் வினிகரை குடிக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

2. வெந்தய நீர்

2. வெந்தய நீர்

வெந்தயம் ஊற வைத்த நீர் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? வெந்தய விதைகளில் சாபோனின்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளன. இவை தான் வெந்தயத்தின் பெரும்பாலான ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமானவை. அதுவும் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், இரவு தூங்கும் முன் வெந்தய விதைகளை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். வேண்டுமானால், சுவைக்கு அந்நீரில் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

3. சீரகம் மற்றும் சோம்பு நீர்

3. சீரகம் மற்றும் சோம்பு நீர்

சீரகம் மிகவும் பயனுள்ள மசாலா பொருள். இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதில் சிறந்தது. கூடுதலாக, இது செரிமானம் மற்றும் எடை இழப்பிறகு உதவும் நொதிகளை சுரக்கிறது. மறுபுறம், சோம்பு உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்ச உதவிபுரிந்து, பசியுணர்வைக் குறைத்து, எடை இழப்புக்கு உதவுகிறது. எனவே இத்தகைய சீரகம் மற்றும் சோம்பை இரவு தூங்கும் முன் நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் அந்நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க, உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

4. திரிபலா நீர்

4. திரிபலா நீர்

திரிபலா ஆயுர்வேத மருத்துவத்தில் மிகவும் பிரபலமான ஒரு மருத்துவ குணம் வாய்ந்த பொருள். இது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து உடலைப் பாதுகாப்பதோடு, மலச்சிக்கல், வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. திரிபலாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. ஆய்வுகளின் படி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது கொழுப்புக்கள் எரிவதை மேம்படுத்துவதோடு, கொழுப்பு செல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் நச்சுக்களை வெளியேற்ற உதவுவதன் மூலம் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. எனவே நீங்கள் உடல் எடையை எளிய வழியில் குறைக்க நினைத்தால், இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் திரிபலா பொடியைப் போட்டு கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

5. பட்டை நீர்

5. பட்டை நீர்

பட்டை தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு ஆரோக்கியமான மசாலா பொருட்களுள் ஒன்றாகும். இந்த பட்டை உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதில் ஆன்டிபாராசிடிக் பண்புகள் உள்ளது. நீங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், காலையில் எழுந்ததும் மற்றும் இரவு தூங்கும் முன் பட்டை நீரைத் தயாரித்து, தேன் கலந்து குடித்து வாருங்கள். இதனால் உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

6. க்ரீன் டீ

6. க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. மேலும் பல்வேறு ஆய்வுகளில் க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுவது தெரிய வந்துள்ளது. எனவே நீங்கள் தொப்பையைக் குறைக்க நினைத்தால், காலையில் எழுந்ததும் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, ஒரு டம்ளர் க்ரீன் டீயை வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால், தொப்பை குறைவதை காணலாம்.

குறிப்பு:

குறிப்பு:

என்ன தான் ஆரோக்கிய பானங்கள் உடல் எடையைக் குறைக்க உதவி புரிந்தாலும், உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், முதலில் ஜங்க் உணவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். மேலும் தினமும் தவறாமல் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். இவற்றை மனதில் கொண்டு நடத்து வந்தால் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, November 5, 2022, 10:01 [IST]
Desktop Bottom Promotion