Latest Updates
-
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
குனிந்து பாதத்தை பார்க்க முடியாத அளவு தொப்பை மறைக்குதா? அதை வேகமா குறைக்க தினமும் இத சாப்பிடுங்க..
நம் வீட்டு சமையலறையிலேயே கொழுப்பைக் கரைக்கும் ஏராளமான பொருட்கள் உள்ளன. அவற்றை தினமும் உட்கொண்டு, உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வந்தால், தொப்பையை ஆரோக்கியமான வழியில் குறைக்கலாம்.
இன்று பலரும் வீடுகளில் இருந்து கொண்டே தங்களின் அலுவலக வேலைகளை பார்த்து வருகிறார்கள். இதனால் பலரின் உடல் செயல்பாடுகள் குறைந்து, உடல் எடை அதிகரித்து அவதிப்படுகிறார்கள். குறிப்பாக பலரது வயிற்றைச் சுற்றி கொழுப்புக்கள் தேங்கி, தனது பாதத்தைக் கூட பார்க்க முடியாத அளவில் வயிறு பானை போன்று மாறியுள்ளது. உடலிலேலே வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைப்பது தான் கடினம். உடலில் தேங்கமடையும் கொழுப்புக்களானது மெட்டபாலிசத்தை மெதுவாக்குகிறது மற்றும் பல்வேறு இதய நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது.

சொல்லப்போனால் தொப்பை உள்ளவர்களுக்கு தான் இதய நோயின் அபாயம் அதிகம் உள்ளது. இந்த தொப்பையைக் குறைப்பதற்காக பலர் கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அனைவராலும் இம்மாதிரி செய்ய முடியாது. சிலர் எளிய வழியில் தொப்பையைக் குறைக்க விரும்புவார்கள். அத்தகையவர்கள் கொழுப்பைக் குறைக்கும் திறன் கொண்ட உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உண்ணலாம்.
நம் வீட்டு சமையலறையிலேயே கொழுப்பைக் கரைக்கும் ஏராளமான பொருட்கள் உள்ளன. அவற்றை தினமும் உட்கொண்டு, உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வந்தால், தொப்பையை ஆரோக்கியமான வழியில் குறைக்கலாம். இப்போது அடிவயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும் அந்த பொருட்கள் என்னவென்பதைக் காண்போம்.

இஞ்சி டீ
இஞ்சி டீ அதன் மருத்துவ பண்புகளுக்கு மக்களிடையே பிரபலமானது. இஞ்சி டீயைக் குடிப்பதன் மூலம் தொண்டை புண் முதல் மாதவிடாய் கால அசௌகரியம் வரை பலவற்றில் இருந்து விடுபடலாம். ஆனால் இஞ்சி டீ தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா? இஞ்சி ஒரு தெர்மோஜெனிக் பொருள் ஆகும். அதாவது இது உடல் வெப்பத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைக்க உதவுகிறது. எனவே நீங்கள் உங்கள் தொப்பையை எளிய வழியில் குறைக்க விரும்பினால், சாதாரண டீக்கு பதிலாக இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு தேன் சேர்த்து, இஞ்சி டீ தயாரித்து குடித்து வாருங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் உணவிற்கு நல்ல ப்ளேவரைக் கொடுப்பதோடு மட்டுமின்றி, வயிற்றுப் பகுதியில் சுற்றியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. முக்கியமாக இது பசியைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருப்பதனால், தொப்பையைக் குறைக்க உதவுகிறது. அதற்கு உணவு உண்பதற்கு முன் 1-2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

பாதாம்
பாதாம் ஒரு நல்ல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ். இது அடிவயிற்றுக் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. அதோடு என்ன தான் பாதாமில் கலோரிகள் இருந்தாலும், இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். ஏனெனில் பாதாமில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

பூண்டு
பூண்டு உடல் பருமனைத் தடுக்கும் ஒரு சக்தி வாய்ந்த உணவுப் பொருள். முக்கியமாக பூண்டு உடலில் கொழுப்பு தேங்குவதைக் குறைக்கிறது என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பூண்டு சாப்பிடுவதன் மூலம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும் மற்றும் வேகமான எடை இழப்பிற்கு உதவும். அதற்கு அன்றாட உணவில் பூண்டு சேர்க்கலாம் அல்லது தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம்.

கற்றாழை
கற்றாழை ஜூஸ் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் ஒரு அற்புதமான பானம். கற்றாழையில் உள்ள ஸ்டெரால்கள் அடிவயிற்றில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கற்றாழை ஜூஸை மிதமான அளவில் குடிக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு மலமிளக்கி. அளவுக்கு அதிகமாக கற்றாழை ஜூஸை குடித்தால், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, உடல் பலவீனமாகிவிடும். எனவே கற்றாழை ஜூஸை அளவாக குடித்து பயன் பெறுங்கள்.

கறிவேப்பிலை
நாம் சமையலில் சேர்க்கும் கறிவேப்பிலையை தூக்கி எறிவோம். ஆனால் கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட்டால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் எளிதில் கரைந்துவிடும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் உடலில் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.



Click it and Unblock the Notifications











