Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
குறையவே குறையாத உங்க தொப்பை கொழுப்பை 'இந்த' ஒரு பொருள் கொண்டு ஈஸியா குறைக்கலாமாம் தெரியுமா?
தொப்பை கொழுப்பு உங்கள் தோற்றத்தை பாதிப்பதோடு, உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். ஆனால் சியா விதைகள் அதிலிருந்து விடுபட உங்களுக்கு உதவும்.
நம் வயிற்றை சுற்றி இருக்கும் தொப்பை கொழுப்பால், நாம் மிகுந்த அவதிக்குள்ளாகிறோம். வயிற்று பகுதியில் தனக்குச் சொந்தமான இடம் போல் குவிந்து கிடக்கும் மிக மோசமான கொழுப்பு இது. இவற்றை குறைப்பது மிகவும் கடினம். இந்த தொப்பை கொழுப்பு சில நேரங்களில் உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் உடல்நல பிரச்சனைகளை உருவாக்கலாம். நிறைய 'உட்கார்ந்து' இருக்கும் நமது உட்கார்ந்த வாழ்க்கை முறை, பிடிவாதமான அடிவயிற்று கொழுப்பின் முக்கிய காரணம் மற்றும் உணவு பழக்கவழக்கமும் ஒரு காரணம். எனவே, உங்கள் பிஸியான வாழ்க்கையில், உங்கள் உடலை அசைக்க உங்களுக்கு நேரமில்லையா? தொப்பை கொழுப்பை அகற்ற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா?

கவலையை விடுங்க. ஒரு உணவுப் பொருள் உங்கள் தொப்பை கொழுப்பை எளிதாக குறைக்க உதவுமாம். ஆம், உங்கள் தொப்பை கொழுப்பிற்கு சியா விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

சியா விதைகள்
சுறுசுறுப்பின்மை மற்றும் சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். தவறான உணவுப் பழக்கத்தால், உங்கள் தொப்பையை குறைக்க முடியாது, அது இன்னும் அதிகரிக்கும். தொப்பை கொழுப்பு உங்கள் தோற்றத்தை பாதிப்பதோடு, உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். ஆனால் சியா விதைகள் அதிலிருந்து விடுபட உங்களுக்கு உதவும். சியா விதைகள் அதிக சத்தானவை மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிகுதியாக உள்ளன.

உள்ளுறுப்பு கொழுப்பை இழக்க உதவுகிறது
சியா விதைகளில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. சில ஆய்வுகள் சியா விதைகளில் குடல் இயக்கத்தை சீராக்க உதவும் நார்ச்சத்து இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது அடிப்படையில் குடலில் குவிந்துள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. இதன் மூலம் உள்ளுறுப்பு கொழுப்பை இழக்க உங்களுக்கு உதவுகிறது.

சியா விதைகள் தண்ணீர்
ஒரு தேக்கரண்டி சியா விதைகளை ஒரே இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். உணவுக்கு இடைப்பட்ட நேரத்திலும் இதை குடிக்கலாம்.

சியா விதை சாலட்
நீங்கள் சாலட்களை சாப்பிட விரும்பினால், வெள்ளரிக்காய், முள்ளங்கி, தக்காளி, வெங்காயம், கேரட் போன்றவற்றை நிரப்பிய ஒரு கிண்ணத்தில் சியா விதைகளை கலக்கலாம். இந்த சுவையான சாலட் உங்கள் எடையை குறைப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

சியா விதை புட்டு
சியா விதை புட்டு செய்ய மிகவும் எளிமையானது. நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சித்தால், இந்த புட்டு உங்கள் உணவில் ஒரு சிறந்த கூடுதலாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது ஒரு கிளாஸ் பாதாம் பாலில் (அல்லது உங்கள் விருப்பப்படி ஒரு பால்) சில சியா விதைகளைச் சேர்க்கவும். நீங்கள் அதை சுவையாக மாற்ற சில புதிய ஸ்ட்ராபெர்ரிகள் அல்லது சிறிய அளவு இலவங்கப்பட்டை தூளை சேர்க்கலாம்.

சியா விதை பானம்
சில சியா விதைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். கலவையை சிறிது நேரம் குறைந்த தீயில் வைக்கவும். சுவைக்கு எலுமிச்சை சாறு அல்லது தேன் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். இந்த சியா தேநீர் உங்கள் தொப்பை கொழுப்பை எரிக்க உதவும்.
குறிப்பு: சியா விதைகள் பாதுகாப்பானவை மற்றும் உங்கள் எடை இழப்பு உணவில் சேர்க்கப்படலாம் என்று கூறப்பட்டாலும், சிக்கல்களைத் தவிர்க்க உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.



Click it and Unblock the Notifications