Latest Updates
-
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
மதிய வேளையில் இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது தெரியுமா?
ஏராளமானோர் தங்களது உணவில் இருந்து சாதத்தை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். இதற்கு இதில் உள்ள அதிகப்படியான கலோரிகள் தான் முக்கிய காரணம். எடையைக் குறைப்பதற்கு சாதத்தைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறையினால் தற்போது பலர் உடல் பருமனால் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். ஒருவரது உடல் எடை அதிகரிப்பதற்கு ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேலை செய்வது மட்டுமின்றி, உண்ணும் உணவுகளும் முக்கிய பங்கை வகிக்கின்றன. அதில் உடல் எடையை அதிகரிக்கும் உணவுப் பொருளாக கருதப்படுவது அரிசி சாதம். உண்மையிலேயே ஒருவரது உடல் எடை அதிகரிப்பதற்கு முதன்மையான காரணம் சாதம் தானா?

உலகிலேயே இந்தியாவில் தான் ஏராளமானோர் உடல் பருமனால் கஷ்டப்படுவதாக புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. இதற்கு காரணமாக பலர் நினைப்பது சாதத்தை தான். ஏனெனில் இந்தியர்களால் ஒரு வேளையாவது சாதத்தை சாப்பிடாமல் இருக்க முடியாது. ஏனெனில் இந்தியாவின் பிரதான உணவுப் பொருள் சாதம். சிறு வயதில் இருந்தே சாதத்தை சாப்பிட்டு பழகியதால், திடீரென்று சாதத்தை சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்துவது என்பது கடினமான விஷயம்.
தற்போது உடல் பருமனைக் குறைப்பதற்கு டயட் என்ற உணவுக் கட்டுப்பாடு பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது. பலர் டயட் என்ற பெயரில் சாதம் சாப்பிடுவதைத் தவிர்த்து வருகின்றனர். ஆனால் உடல் எடையைக் குறைக்க டயட்டை மேற்கொள்ள வேண்டுமானால், சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமா என்ற கேள்விக்கான விடையைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சத்துக்கள்
தானியங்களுள் ஒன்று தான் அரிசி. இந்த அரிசியை வேக வைக்கும் போது கிடைப்பது சாதம். இந்த சாதத்தில் அதிகளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் நிறைந்துள்ளது. சாதத்தில் கொழுப்பு மிகவும் குறைவு, எளிதில் செரிமானமாகும் மற்றும் ஏராளமான வைட்டமின் பி சத்துக்களும் அடங்கியுள்ளது. அதே சமயம் சாதத்தில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் சற்று அதிகளவில் உள்ளது. மேலும் சாதத்தை பல சுவையான வழிகளில் சமைத்து சாப்பிடலாம் மற்றும் இது விலைக் குறைவான உணவுப் பொருளும் கூட.

மக்கள் ஏன் சாதத்தை தவிர்க்கிறார்கள்?
ஏராளமானோர் தங்களது உணவில் இருந்து சாதத்தை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். இதற்கு இதில் உள்ள அதிகப்படியான கலோரிகள் தான் முக்கிய காரணம். ஒருவரது உடல் எடையைக் குறைப்பதற்கு சாதத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சாதத்தை சாப்பிட விரும்பினால், தங்களது டயட்டில் ஒரு சிறிய கப் அளவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் எவ்வித இடையூறும் ஏற்படாது.

அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ்
சாதத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் சற்று அதிகமாக உள்ளது. பொதுவாக, அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ் நிறைந்த உணவுகள் விரைவில் செரிமானமாகிவிடுவதோடு, இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கத்தை உண்டாக்கி, விரைவில் பசியை உண்டாக்கும். எனவே பலர் சீக்கிரம் பசி ஏற்படாமல் இருக்க, உண்ணும் போது சாதத்தை சற்று அதிகமாக உட்கொள்கிறார்கள்.

அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சு
பசி விரைவில் எடுக்கக்கூடாது என்பதற்காக சாதத்தை அதிகமாக சாப்பிட்டால், அதில் உள்ள கலோரிகள் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். முக்கியமாக சாதம் மட்டுமின்றி, எந்த ஒரு உணவுப் பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது உடல் பருமனைத் தான் உண்டாக்கும். எனவே உடல் பருமனுக்கு காரணமாக சாதத்தைக் குறை கூறுவதை நிறுத்துங்கள்.

சாதத்தை சாப்பிடும் ஆரோக்கியமான வழி
சாதத்தினால் உடல் எடை அதிகரிக்கவும் கூடாது, அதே சமயம் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்க வேண்டுமானால், அதற்கு ஓர் அற்புதமான வழி உள்ளது. அது என்னவெனில் ஒரு சிறிய கப் அளவு சாதத்துடன், புரோட்டீன் நிறைந்த உணவுப் பொருட்களான பருப்பு, ராஜ்மா மற்றும் காய்கறிகளை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். இவைகளில் புரோட்டீன் மட்டுமின்றி, நார்ச்சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.

குறிப்பு
எந்த உணவாலும் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், தினமும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வதோடு, சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். உண்ணும் உணவில் கட்டுப்பாடு இருந்தால், நிச்சயம் உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும் என்பதை எப்போதும் மறவாதீர்கள்.



Click it and Unblock the Notifications
