Just In
- 4 hrs ago
இன்றைய ராசிப்பலன் (23.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- 16 hrs ago
சுவையான... பன்னீர் போண்டா
- 16 hrs ago
உங்களின் அதீத உடலுறவு வேட்கை உங்கள் திருமண வாழ்வை எப்படி அழிக்கும் தெரியுமா?
- 16 hrs ago
இதுல ஒன்ன தேர்வு செய்யுங்க... உங்களோட ஸ்ட்ராங் சைடு என்னன்னு நாங்க சொல்றோம்...
Don't Miss
- Movies
ஸ்டைலா கெத்தா மாஸா கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட டிராவலிங் டைரிஸ் புகைப்படங்கள்!
- Sports
ஆட்டோ டிரைவரின் மகன்.. செல்லப்பிள்ளை சிராஜ் வாங்கிய பல கோடி ரூபாய் சொகுசு கார்.. எல்லாம் உழைப்பு!
- News
கோவை கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்த முதல்வர்
- Automobiles
விற்பனையில் ஓராண்டு நிறைவு!! டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஆரோக்கியமான பழங்களை சாப்பிடாமல் இருப்பதுதான் நல்லதாம்...!
எடையை குறைக்க உலகம் முழுவதும் பரிந்துரைக்கப்படும் பொதுவான உணவு குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளாகும். எடையை குறைத்து கட்டான உடலுடன் இருக்க விரும்பும் அனைவரும் இந்த உணவுகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். எடையை குறைக்க கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருக்கவோ அல்லது குறைவாகவோ சாப்பிட வேண்டும்.
நாம் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது என்று நினைத்து சாப்பிடும் சில ஆரோக்கிய உணவுகளில் உண்மையில் அதிகளவு காபோஹைட்ரேட்டுகள் உள்ளது. இதனால் எடையை குறைக்க நாம் இந்த பொருட்களை சாப்பிடும்போது நாம் எந்தவிதமான நன்மையையும் பெறுவதில்லை. மாறாக எதிர்மறை விளைவுகளையே பெறுகிறோம். இந்த பதிவில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருக்கும் ஆரோக்கிய உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

மாம்பழம்
இனிப்பு மற்றும் சதைப்பற்று மிக்க மாம்பழம் அனைவருக்கும் பிடித்த பழமாகும். இதில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் மற்றும் ஃபைபர் உள்ளடக்கம் நிறைந்துள்ளது. இந்த மஞ்சள் பழம் உங்கள் சருமத்திற்கும், இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும், செல் வளர்ச்சிக்கும் நல்லது. ஆனால் இதில் அதிக அளவு கார்போஹைட்ரேட்டும் உள்ளது. 165 கிராம் நறுக்கிய மாம்பழத்தில் குறைந்தது 28 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இதனால் எந்த விதத்திலும் நம் எடை குறையாது.

உலர் திராட்சை
திராட்சையும் இயற்கையாகவே இனிப்பு மற்றும் ஆற்றல் நிறைந்த அடர்த்தியான உலர்ந்த பழமாகும். அவை நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன, அவை செரிமானத்திற்கு உதவுகின்றன, இரும்பு அளவை அதிகரிக்கின்றன, மேலும் உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்கின்றன. உலர் திராட்சை பற்றி தெரியாத விஷயம் என்னவெனில் அதில் கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் அதிகம். 28 கிராம் திராட்சையில் 22 கிராம் கார்ப்ஸ் உள்ளது.

வாழைப்பழம்
ஆரோக்கியமான மற்றும் சுவையான வாழைப்பழங்கள் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. அவை நார்ச்சத்து, வைட்டமின் பி 6, பொட்டாசியம் நிறைந்தவை மற்றும் செரிமானம், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் ஒரு வாழைப்பழத்தில் 27 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
இந்த மாதம் சூரியன் கடக ராசிக்கு வருவதால் உங்கள் ராசிக்கு ஏற்பட போகும் ஆபத்து என்ன தெரியுமா?

குயினோவா
குயினோவா என்பது பசையம் இல்லாத, உயர் புரத அடிப்படையிலான உணவாகும் இது ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களின் போதுமான அளவைக் கொண்டுள்ளது. இது நிச்சயமாக ரொட்டிக்கு ஒரு சிறந்த மாற்றாகும், ஆனால் இதில் ஏராளமான கார்போஹைட்ரேட் உள்ளது. 100 கிராம் சமைத்த குயினோவாவில் 21.3 கிராம் கார்ப்ஸ் உள்ளது.

தயிர்
எடையை குறைக்க முயற்சிக்கும்போது தயிர் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இது ஒரு சுவையான மற்றும் பல்துறை உணவாகும். வெறும் தயிரில் அதிக கார்போஹைட்ரேட் இல்லை என்றாலும், இனிப்பான தயிரில் இனிப்பு போன்ற பல கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. 245 கிராம் சுவை கொண்ட தயிரில் 47 கிராம் கார்போஹைட்ரேட் வரை இருக்கலாம்.

பீன்ஸ்
சத்தானவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவற்றில் அதிகளவு கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. ஒரு கப் சமைத்த கருப்பு பீன்ஸில் 41 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது, பிண்டோ பீன்ஸில் 45 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது, கிட்னி பீன்ஸில் 40 கிராம் கரோபோஹைட்ரேட் உள்ளது.
தொடையில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைத்து அழகான தொடையை பெறுவதற்கான எளிய வழிகள்...!

பால்
கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்த பால், பிரபலமான மற்றும் சத்தான பொருளாகும். இது வளர்ச்சி மற்றும் ஆற்றலுக்கு இன்றியமையாதது, ஆனால் பாலில் அதிக கார்போஹைட்ரேட்டும் அதிகமாக உள்ளது. 240 மில்லி பாலில் 12-13 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.