Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இந்த 3 உணவுகள் தொப்பையை வேகமாக குறைக்க உதவும் தெரியுமா?
கோதுமை, கம்பு, பார்லி போன்ற தானியங்களில் காணப்படும் ஒருவகை புரதம் க்ளுட்டன் ஆகும். எனவே க்ளுட்டன் உள்ள உணவை தவிர்ப்பது கடினம் என்றாலும், வேகமான எடை இழப்பிற்கு க்ளுட்டன் அல்லாத உணவுகள் நல்ல தீர்வைத் தர
எடை இழப்பை விரும்பும் மக்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு டயட் பின்பற்றுவதும் முக்கியம். சிறந்த முறையில் விரைவாக உடல் எடையை குறைக்க க்ளுட்டன் அல்லாத உணவு வழிமுறையை பின்பற்றுவது மிகவும் நல்லது.

கோதுமை, கம்பு, பார்லி போன்ற தானியங்களில் காணப்படும் ஒருவகை புரதம் க்ளுட்டன் ஆகும். எனவே க்ளுட்டன் உள்ள உணவை தவிர்ப்பது கடினம் என்றாலும், வேகமான எடை இழப்பிற்கு க்ளுட்டன் அல்லாத உணவுகள் நல்ல தீர்வைத் தரும். நீங்கள் தினசரி பின்பற்ற வேண்டிய க்ளுட்டன் அல்லாத 3 உணவுகள் அடங்கிய பட்டியலை நாங்கள் உங்களுக்கு தரவிருக்கிறோம்.
உங்கள் உணவு அட்டவணையில் இந்த 3 சூப்பர் உணவுகளை இணைத்து வேகமாக உடல் எடையை குறைத்துக் கொள்ளுங்கள்.

பழுப்பு அரிசி
பெரும்பாலும் தானியங்கள் க்ளுட்டன் அல்லாதவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பக் வீட் மரக்கோதுமை, பழுப்பு அரிசி போன்ற தானியங்கள் க்ளுட்டன் அல்லாத உணவு அட்டவணைக்கு ஏற்ற தானியங்கள் ஆகும். வெள்ளை அரிசியும் க்ளுட்டன் அல்லாத உணவு தான் என்றாலும் பழுப்பு அரிசியில் எல்லா ஊட்டச்சத்துகளும், நார்ச்சத்தும் உள்ளது என்பதால் கூடுதல் நன்மை அடையலாம்.

மசாலா பொருட்கள்
சிவப்பு மிளகாய், மஞ்சள், லவங்கப் பட்டை போன்ற மசாலா பொருட்கள் க்ளுட்டன் அல்லாத பொருட்கள் மட்டுமில்லாமல் எடை குறைப்பிற்கு உதவும் பொருட்களாகும்.

லவங்கப்பட்டை
லவங்க மரத்தின் உட்புற பட்டையில் இருந்து எடுக்கப்படும் இந்த மூலப்பொருள் அருமையான நறுமணம் கொண்ட ஒரு மசாலாப் பொருளாகும். ஆன்டி-ஆக்சிடண்ட் அதிகம் நிறைந்த லவங்கப்பட்டை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. பசியால் உண்டாகும் வயிற்று வலியைக் குறைக்க இந்த மசாலா பொருள் உதவுகிறது.

மஞ்சள்
உடல் பருமனுடன் தொடர்புடைய அழற்சியை குறைப்பதில் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வழியில் எடை இழப்பிற்கு மஞ்சள் உதவுகிறது.

நட்ஸ்
எல்லா வகையான நட்ஸ் மற்றும் விதைகள் க்ளுட்டன் அல்லாதவை ஆகும். ஆம், பாதாம், வால்நட்ஸ், முந்திரி, பிஸ்தா போன்ற பல்வேறு வகையான நட்ஸ் உங்கள் தினசரி உணவில் சேர்க்கப்பட வேண்டிய வகைகளாகும். மாலை நேர சிற்றுண்டியாக இந்த நட்ஸ் வகைகளை உண்பதால் பசியுணர்வு கட்டுப்பட்டு உடலில் ஆற்றல் அதிகரிக்கிறது. ஒரே விதமான நட்ஸ் ஒரு கைப்பிடி அளவு உட்கொள்ளலாம் அல்லது எல்லா வகையான நட்ஸ் அனைத்தையும் கலந்து ஒரு கைப்பிடி உட்கொள்ளலாம். ஆனால் எந்த உணவாக இருந்தாலும் சரியான அளவு உட்கொள்ள வேண்டும், அதிக அளவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
