Latest Updates
-
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம்
5 நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்கும் பசலைக்கீரை டயட்!
உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புதமான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள் தான் பசலைக்கீரை. பசலைக்கீரையை முக்கியமாக கொண்ட டயட்டை ஒருவர் மேற்கொண்டால், ஐந்து நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்கலாம்.
உலகளவில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் தான். ஏராளமான மக்கள் அதிக உடல் பருமனால் அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். நீங்களும் அத்தகையவர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

உடல் எடையைக் குறைக்க அல்லது தொப்பையைக் குறைக்க பல்வேறு டயட்டுகள் உள்ளன. ஒவ்வொரு டயட்டும் ஒவ்வொருவரிடன் உடலைப் பொறுத்து நன்மை அளிக்கும். அனைவருக்குமே அனைத்து டயட்டும் நல்ல பலனைத் தரும் என்று கூற முடியாது.
ஒருவரது உடல் எடை எப்படி உணவுகளால் அதிகரிக்கிறதோ, அதே அதிகரித்த உடல் எடையை உணவுகளின் மூலம் குறைக்க முடியும். அப்படி உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புதமான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருள் தான் பசலைக்கீரை. பசலைக்கீரையை முக்கியமாக கொண்ட டயட்டை ஒருவர் மேற்கொண்டால், ஐந்து நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்கலாம்.

பசலைக்கீரை டயட்
பசலைக்கீரையில் உள்ள உட்பொருட்கள், உடலில் குறிப்பிட்ட செயல்பாடுகளில் சுமைகளை அதிகரிக்கும் என்பதால், பசலைக்கீரையை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. அதிலும் பசலைக்கீரை டயட்டை 5 நாட்களுக்கு மேல் ஒருவர் மேற்கொள்ளக்கூடாது. அதோடு, பசலைக்கீரை டயட்டை வருடத்திற்கு 2 முறை மட்டும் மேற்கொள்ளலாம். அதுவும் ஒரு முறைக்கு 5 நாட்கள் இந்த டயட்டை மேற்கொண்டால், 3 கிலோ கொழுப்புக்களை உடலில் இருந்து இழக்கலாம்.

ஊட்டச்சத்துக்கள்
100 கிராம் பசலைக்கீரையில் 26 கலோரிகள் உள்ளது. மேலும் இதில் உள்ள பி வைட்டமின்கள் மற்றும் மக்னீசியம் மெட்டபாலிச செயல்பாட்டிற்கு உதவி, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை உருகச் செய்யும். அதோடு பசலைக்கீரையில் உள்ள பொட்டாசியம், உடலில் நீரின் அளவைப் பராமரிக்க உதவும். இந்த கனிமச்சத்து எடை குறைந்தாலும், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறையாமல் அழகாக சருமம் இருக்க உதவி புரியும். முக்கியமாக பசலைக்கீரையில் உள்ள நார்ச்சத்து, உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். அதோடு, இதில் அத்தியாவசிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
இப்போது ஐந்து நாள் பசலைக்கீரை டயட்டில், ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பது குறித்துக் காண்போம்.

நாள் 1
காலை உணவு : 1 வேக வைத்த முட்டை, 2 தக்காளி மற்றும் பசலைக்கீரையுடன் எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்க்கப்பட்ட சாலட், 2 துண்டு முழு தானிய பிரட்.
மதிய உணவு : க்ரில் சிக்கன், பசலைக்கீரை சூப்.
இரவு உணவு : பசலைக்கீரையுடன் மற்ற காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட சாலட்.

நாள் 2
காலை உணவு : ஓட்ஸ் உடன் யோகர்ட், இனிப்பில்லாத டீ.
மதிய உணவு : பசலைக்கீரை சூப்.
இரவு உணவு : பசலைக்கீரை மற்றும் ஆரஞ்சு சூப்.

நாள் 3
காலை உணவு : பசலைக்கீரை ஆம்லெட், 1 துண்டு முழு தானிய பிரட்.
மதிய உணவு : மீன், பசலைக்கீரை மற்றும் சாதம்.
இரவு உணவு : வேக வைத்த பசலைக்கீரை மற்றும் 2 ஆரஞ்சு பழங்கள்.

நாள் 4
காலை உணவு : பசலைக்கீரை, ஆப்பிள் மற்றும் கேரட் ஜூஸ்.
மதிய உணவு : சிக்கன் அல்லது மீன், பசலைக்கீரை சாலட்.
இரவு உணவு : பசலைக்கீரை மசாலா சாதம்.

நாள் 5
காலை உணவு : 2 வேக வைத்த முட்டை, ஒரு பௌல் யோகர்ட்.
மதிய உணவு : சிக்கன் அல்லது மீன் மற்றும் பசலைக்கீரை.
இரவு உணவு : விருப்பமான பழச்சாறு.

குறிப்பு
பசலைக்கீரை டயட்டால் இன்னும் சிறப்பான பலனைப் பெற நினைத்தால், தினமும் சிறிது உடற்பயிற்சியையும் தவறாமல் மேற்கொள்ளுங்கள். இதனால் பசலைக்கீரை டயட்டில் முடிவில் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். முக்கியமாக எந்த ஒரு டயட்டை மேற்கொள்ளும் போதும், ஜங்க் உணவுகள், சர்க்கரை உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.



Click it and Unblock the Notifications