Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்க தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க... இந்த 5 ஜூஸை குடிச்சா போதுமாம் தெரியுமா?
வெள்ளரி, கீரை இலைகள் மற்றும் இஞ்சியை நன்றாக கழுவவும். பின்னர், பொருட்களை சிறிய துண்டுகளாக நறுக்கவும். அனைத்தையும் ஒரு பிளெண்டரில் சேர்த்து அரைக்கவும்.
இன்றைய நாளில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் முதல் பிரச்சனை உடல் பருமன். தொப்பை கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைக்க நாம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம். ஆனால், அவற்றை எளிதில் குறைப்பது கடினம். விரைவாக உங்கள் உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க விரும்புகிறீர்களா? ஆனால் அதை எப்படி செய்வது என்று குழப்பமா இருக்கிறீர்களா? அப்படியெனில், உங்கள் உணவில் காய்கறி மற்றும் பழச்சாறுகளைச் சேர்க்கவும். பழச்சாறுகள் முற்றிலும் ருசியானவை. பழங்கள் மற்றும் சாலட்களை உண்ணும் பழக்கம் இல்லை என்றால், இந்த ஆரோக்கியமான உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதற்கும், நீர் உட்கொள்ளலை அதிகரிப்பதற்கும் பழச்சாறுகள் சிறந்த வழியாகும்.

இருப்பினும், அதிகபட்ச ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்காக பழங்கள் மற்றும் காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. எப்படியிருந்தாலும், சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட சாறுகளை விட இந்த சாறுகள் ஆரோக்கியமானவை. உங்கள் தொப்பை கொழுப்பை குறைக்கும் காய்கறி மற்றும் பழச்சாறுகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பீட்ரூட் ஆம்லா சாறு
தேவையான பொருட்கள்
பீட்ரூட் -1 கப்
நெல்லிக்காய்- 1 கப்
இஞ்சி - 1/2 அங்குல அளவு
புதினா - 5-6 இலைகள்
வறுத்த ஜீரா தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எலுமிச்சை சாறு -1/2 தேக்கரண்டி
தேன்- 1/2 தேக்கரண்டி
தண்ணீர்- 1 கப்
நறுக்கிய பீட்ரூட், நெல்லிக்காய், இஞ்சி மற்றும் புதினா இலைகளை ஒரு பிளெண்டரில் சேர்த்து அரைக்கவும். மென்மையான கூழாகும் வரை கலக்கவும். தண்ணீர், வறுத்த ஜீரா தூள், உப்பு, எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து மீண்டும் கலக்கவும். பின்னர், வடிகட்டி ஒரு உயரமான கண்ணாடியில் கிளாஸில் பரிமாறவும். இதை உடனடியாக உட்கொள்ளவும். இந்த ஜூஸை தொடர்ந்து அருந்திவந்தால், உங்களுடைய பிடிவாதாமான தொப்பை கொழுப்பு விரைவில் காணமல் போகும்.

கீரை மற்றும் வெள்ளரி சாறு
தேவையான பொருட்கள்
வெள்ளரி- 200 கிராம்
கீரை இலைகள்- 50 கிராம்
இஞ்சி- 1/4 அங்குலம்
எலுமிச்சை சாறு- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
வெள்ளரி, கீரை இலைகள் மற்றும் இஞ்சியை நன்றாக கழுவவும். பின்னர், பொருட்களை சிறிய துண்டுகளாக நறுக்கவும். அனைத்தையும் ஒரு பிளெண்டரில் சேர்த்து அரைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும். நீங்கள் நேரடியாக குடிக்கலாம் அல்லது குடிப்பதற்கு முன் வடிகட்டியும் குடிக்கலாம். சுவையை அதிகரிக்க தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

சுரைக்காய், ஆரஞ்சு மற்றும் அன்னாசி பழச்சாறு
தேவையான பொருட்கள்
அன்னாசி- 1 கப் (சிறுசிறு துண்டுகளாக)
ஆரஞ்சு- 1 கப்
சுரைக்காய்- 1 கப் (நறுக்கிய)
வெள்ளரி- 1 கப்
துளசி இலைகள்- சில
கறிவேப்பிலை - சிறிதளவு
அனைத்து பொருட்களையும் சேகரித்து, தேவையான அளவு நறுக்கவும் அல்லது வெட்டவும். எல்லாவற்றையும் பிளெண்டரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்க்கவும். மென்மையாகும் வரை அனைத்தையும் நன்றாக கலக்கவும். பின்னர், இந்த கூழை வடிகட்டி, குடிக்கவும்.

தக்காளி வெள்ளரி சாறு
தேவையான பொருட்கள்
தக்காளி - 3 பழம்
வெள்ளரி- 1/2 கப்
புதினா- 5 முதல் 6 இலைகள்
உப்பு- 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி
குளிர்ந்த நீர்-1 கப்
முதலில் தக்காளியை வேகவைத்து பின் குளிர்ந்த நீரில் ஊற வைத்து ஆறவிடவும். அவற்றை ஒரு ப்யூரியில் கலக்கவும். வெள்ளரி துண்டுகளை சேர்த்து மீண்டும் கலக்கவும். இந்த கலவையை வடிகட்டவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீர், எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் புதினா இலைகளை ஒன்றாக கலந்து அருந்துங்கள்.

கேரட் ஆப்பிள் சாறு
தேவையான பொருட்கள்
கேரட்- 200 கிராம்
ஆப்பிள்- 200 கிராம்
இஞ்சி- 1 அங்குலம்
உப்பு- சிறிதளவு
ஐஸ் கட்டிகள் (தேவைப்பட்டால்)
அனைத்து பொருட்களையும் தண்ணீரில் நன்றாக கழுவவும். கேரட்டை உரிக்கவும், செங்குத்தாக வெட்டவும். ஆப்பிள்களை தோலுரித்து துண்டுகளாக நறுக்கவும். ஐஸ் க்யூப்ஸ் தவிர அனைத்து பொருட்களையும் ஒரு பிளெண்டரில் சேர்த்து அரைக்கவும். சுவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும். மென்மையான கலவையாகும் வரை கலக்கவும். பின்னர், வடிகட்டவும். தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்க்கலாம். ஐஸ் கட்டிகளை சேர்த்து உடனே பரிமாறவும்.



Click it and Unblock the Notifications