Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
தினமும் 2 முறை இந்த டீயை குடிச்சா, தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா?
நெல்லிக்காய் நோய்களைக் குணப்படுத்தும் பண்புகள் இருப்பதால், ஆயுர்வேதத்தில் முக்கிய பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக நெல்லிக்காய் உடல் எடை மற்றும் கொழுப்புக்களை வேகமாக கரைக்கக்கூடியது.
இன்று பலரும் தொப்பையால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஒருவருக்கு தொப்பை வந்துவிட்டால், அந்த தொப்பையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. தொப்பை கொழுப்புக்களின் தேக்கத்தினால் உருவாவது. உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க வேண்டுமானால், அதற்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

மேலும் தொப்பை ஒருவரது உடல் எடையையும் அதிகரித்துவிடும். ஒருவர் தங்களுக்கு உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாவிட்டால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே உடல் எடை அதிகரித்துவிட்டாலோ அல்லது தொப்பை பெரிதாகிவிட்டாலோ, அதை உடனே குறைக்கும் முயற்சியில் இறக்க வேண்டும்.
உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைப்பதற்கு பல உணவுப் பொருட்கள், பானங்கள், உடற்பயிற்சிகள் உள்ளன. இவை அனைத்தின் உதவியுடனும் தொப்பையை நிச்சயம் குறைக்க முடியும். இந்த கட்டுரையில் தொப்பையை வேகமாக குறைக்க உதவும் நெல்லிக்காய் டீ குறித்து விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, உங்கள் தொப்பையைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்.

நெல்லிக்காய்
நெல்லிக்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்பது அனைவருக்குமே தெரியும். இந்த பச்சை நிற சிறிய பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு, நோய்களைக் குணப்படுத்தும் பண்புகள் இருப்பதால், ஆயுர்வேதத்தில் முக்கிய பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லிக்காயை எந்த வடிவில் எடுத்தாலும், அதன் முழு நன்மைகளையும் பெறலாம். முக்கியமாக நெல்லிக்காய் உடல் எடை மற்றும் கொழுப்புக்களை வேகமாக கரைக்கக்கூடியது.

நெல்லிக்காயின் சத்துக்கள்
புளிப்புச் சுவையைக் கொண்ட நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சருமம், தலைமுடி மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் நெல்லிக்காய் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய பொருள். நெல்லிக்காயை தினமும் அப்படியே சாப்பிடலாம். தொப்பையைக் குறைக்க நினைப்போர் நெல்லிக்காய் டீ தயாரித்துக் குடிப்பது நல்லது.
இப்போது நெல்லிக்காயினால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் குறித்தும், எடையைக் குறைக்க எப்படி உதவுகிறது என்றும் காண்போம்.

அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்
நெல்லிக்காய் டீ தயாரிப்பதற்கு பயன்படுத்தும் நெல்லிக்காய் பொடியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இந்த பொருள் உடலினுள் ஏற்பட்டுள்ள அழற்சியை எதிர்க்கக்கூடியது. ஆய்வுகளில் உடலினுள் இருக்கும் அழற்சிக்கும், உடல் பருமனுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே தான் நெல்லிக்காய் டீ குடித்தால், உடல் எடை குறைகிறது.

செரிமானம் மேம்படும்
நெல்லிக்காயில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்துவதில் சிறந்தது. குடலியக்கம் மற்றும் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருந்தாலே, உடல் எடை குறைவதில் தடை ஏதும் இருக்காது.

இரத்த சர்க்கரை அளவு சீராகும்
நெல்லிக்காயில் உள்ள குரோமியம், இரத்த சர்க்கரை அளவை சீராக்கும். நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், திடீரென்று இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கம் தடுக்கப்படும். இதன் விளைவாக சர்க்கரை நோய் தடுக்கப்படுவதோடு, உடல் பருமன் அடையாமலும் இருக்கும்.

மெட்டபாலிசம் மேம்படும்
பொதுவாக உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இருந்தால், அதிகப்படியான கலோரிகளை கரைக்க முடியும். நெல்லிக்காய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கக்கூடியது. மேலும் இது உடலினுள் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றும் செயலையும் செய்யக்கூடியது.

ஆற்றல் அதிகரிக்கும்
நெல்லிக்காய் புரத தொகுப்பு செயல்பாட்டை வேகப்படுத்தக்கூடியது. இதனால் உடலின் ஆற்றல் சற்று அதிகரிக்கும். இதன் விளைவாக உடல் எடையைக் குறைக்க நீண்ட நேரம் உடற்பயிற்சியில் சிறப்பாக கவனம் செலுத்த முடிந்து, அதிகளவு கலோரிகளையும் கரைக்க முடியும்.

எடையைக் குறைக்கும் நெல்லிக்காய் டீயை தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1 1/4 கப்
* நெல்லிக்காய் பொடி - 1 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிது
* தேன் - சுவைக்கேற்ப

செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் 1 1/4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் நெல்லிக்காய் பொடி மற்றும் இஞ்சி சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும்.
* நீரானது ஒரு கப் அளவிற்கு நன்கு சுண்டியதும், அடுப்பை அணைத்து வடிகட்டி, சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.
* பின் அந்த பானத்தில் தேவையான அளவு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

குறிப்பு
உங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியானால் நெல்லிக்காய் டீயுடன் தேன் சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்திடுங்கள். முக்கியமாக நெல்லிக்காய் டீயை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், தொப்பை (கொழுப்பு) வேகமாக குறையும் மற்றும் உடல் எடையும் குறையும்.



Click it and Unblock the Notifications











