Latest Updates
-
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க
ராணா டகுபதி இப்படியொரு கட்டுமஸ்தான உடலைப் பெற காரணம் இதாங்க...
ராணா டகுபதி தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது எடையை அதிகரிப்பதாகட்டும் அல்லது குறைப்பதாகட்டும், அதை ஒரு சவாலாக எடுத்து சிறப்பாக செய்யக்கூடியவர்.
தென்னிந்திய நடிகர்களுள் சிறந்த வில்லன் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமான உடலமைப்பைக் கொண்ட நடிகர் என்றால் பிரமாண்டமான பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக நடித்த ராணா டகுபதியாகத் தான் இருக்க முடியும். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமின்றி ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு பெரும் புகழை அளித்த படம் பாகுபலி. இந்த திரைப்படத்தில் இவரது கட்டுமஸ்தான உடலைக் கண்டு பலரும் அசந்து போயிருப்போம்.

ராணா டகுபதி தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது எடையை அதிகரிப்பதாகட்டும் அல்லது குறைப்பதாகட்டும், அதை ஒரு சவாலாக எடுத்து சிறப்பாக செய்யக்கூடியவர். இதனால் ராணா தற்போது உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட பல இளைஞர்களுக்கு முன் மாதிரியாக மாறிவிட்டார். உங்களுக்கும் நடிகர் ராணா டகுபதியை பிடிக்குமா? அவரது பிட்னஸ் ரகசியத்தை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

ராணா டகுபதியின் ஃபிட்னஸ் மற்றும் ஒர்க்அவுட்
பொதுவாக ராணா டகுபதி தினமும் இரண்டு முறை ஜிம் செல்லும் பழக்கத்தைக் கொண்டவர். வழக்கமாக காலையில் குறைந்தது 1/2 மணிநேரம் மற்றும் மாலையில் 1 மணிநேரமும் உடற்பயிற்சியையும் செய்யக்கூடியவர்.

காலை நேர உடற்பயிற்சி
ராணா காலை வேளையில் உடற்பயிற்சியின் போது 15 நிமிடம் கார்டியோ பயிற்சியைத் தொடர்ந்து, வலிமை பராமரிக்கும் பயிற்சிகளை செய்வார். அதன் பின் புஷ்-அப்கள் மற்றும் பளு தூக்கும் பயிற்சியுடன் தனது உடற்பயிற்சியை முடிப்பாராம்.

மாலை நேர உடற்பயிற்சி
மாலை நேரத்தில் ராணா மீண்டும் கார்டியோவில் ஆரம்பிப்பாராம். அதன் பின் அவர் செய்யும் உடற்பயிற்சிகள் மார்பு மற்றும் ட்ரைசெப்ஸை உருவாக்குவதில் கவனத்தை செலுத்துவாராம்.

ராணா டகுபதி டயட்
ராணா டகுபதி வெவ்வேறு கதாப்பாத்திரங்களில் நடிப்பதற்கு தனது உடலைப் பராமரிக்க வேண்டியிருப்பதால், அவர் கடுமையான டணட்டை பின்பற்றுகிறார். அதில் ஒரு நாளைக்கு 5 வேளை உணவுகள் அடங்கும். மேலும் அவர் அசைவ உணவை விரும்பி சாப்பிடுவார் மற்றும் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கத்தைத் தவிர்ப்பாராம். வழக்கமாக இவர் சாப்பிடும் உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காலை உணவு
ராணா வழக்கமாக காலை உணவாக ஒரு பெரிய பௌல் ஓட்மீல் மற்றும் நட்ஸ் சாப்பிடுவதைத் தொடர்ந்து, 5 துண்டு ப்ரௌன் பிரட்டுடன் 8 முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் நிறைய காய்கறிகளை உண்பாராம். இறுதியில் தர்பூசணி அல்லது பப்பாளி பழங்களை சாப்பிட்டு காலை உணவை முடிப்பாராம்.

ஸ்நாக்ஸ் 1
ராணா காலை 11 மணியளவில், புரோட்டீன் ஷேக்குடன் சிறிது நற்பதமான பழங்களை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்.

மதிய உணவு
ராணா டகுபதி மதிய வேளையில் உண்ணும் உணவில் நிறைய புரோட்டீன்களை எடுப்பாராம். அதற்கு மீனுடன் புரோட்டீன் அதிகம் நிறைந்த காய்கறிகளை உண்பாராம்.

ஸ்நாக்ஸ் 2
ராணா டகுபதி மாலை வேளையில் உடற்பயிற்சியை செய்வதற்கு முன், 4 துண்டுகள் ப்ரௌன் பிரட்டுடன் 4 வாழைப்பழத்தை சாப்பிடுவாராம்.

இரவு உணவு
ராணா இரவு உணவை 9 மணியளவில் உண்பாராம். இரவு தூங்கும் போது உடல் தன்னைத் தானே சரிசெய்யும் என்பதால், புரோட்டீன் உணவுகளை அதிகம் உண்பாராம். குறிப்பாக இரவு நேரத்தில் புரோட்டீன் அதிகம் நிறைந்த சாலட்டுகளைத் தான் உண்பாராம்.



Click it and Unblock the Notifications