For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 7 ஈஸியான பானங்கள் பக்கவிளைவுகளே இல்லாமல் எடையை வேகமாக குறைக்க உதவுமாம் தெரியுமா?

|

உடல் எடையை குறைப்பது எளிதானது என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் அந்த சரியான வடிவத்தை அடைவது மற்றும் எடையை சீராக பராமரிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சியை விட முக்கியமானது ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவதாகும்.

எடையை குறைக்க விரும்பும் மக்களுக்கு இருக்கும் ஒரே எதிரி அவர்களின் சோம்பேறித்தனம்தான். அதனால்தான் பலரும் உடல் எடையை குறைக்க செயற்கையான முறைகளை நாடுகின்றனர். அதிக வேலை இல்லாமலேயே எளிதில் எடையை குறைக்க சில வழிகள் இருக்கிறதென்றால் யார்தான் அதனை விரும்பமாட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மந்திர பானங்கள்

மந்திர பானங்கள்

சிரமமின்றி உடல் எடையை குறைக்க உதவும் சில எளிய மற்றும் சுவாரஸ்யமான மந்திர பானங்கள் உள்ளது. வாரத்தின் ஏழு நாட்களுக்கு இந்த ஏழு பானங்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, ஆரோக்கியமான எடை இழப்புக்கு உடலை தயார் செய்யும். மேலும் நீங்கள் ஒல்லியாக இருக்க விரும்பினால் கலோரிகளுடன் உங்களை ஏற்ற வேண்டியதில்லை. உடல் எடையை வேகமாக குறைக்க ஒவ்வொரு நாளும் நீங்கள் குடிக்க வேண்டிய ஆரோக்கியமான பானங்கள் என்னவென்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுடன் செக்ஸ் வைச்சுக்க உங்க துணைக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமாம்...

திங்கள்: மல்லி நீர்

திங்கள்: மல்லி நீர்

திங்கள் கிழமை சோம்பேறித்தனத்தை விரட்டுவதற்கான நேரமிது. இந்த பானத்தின் மூலம் நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் பொருத்தமாகவும் இருக்க போதுமான ஆற்றல் கிடைக்கும். பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் ஏ, கே மற்றும் சி உள்ளிட்ட தாதுக்கள் மற்றும் வைட்டமின்களின் நன்மைகள் நிறைந்துள்ளது. எனவே மல்லி பல சுகாதார பிரச்சினைகளை தீர்க்க உதவும். 2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை 3 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டவும். சூடாக குடிக்கவும்.

செவ்வாய்: வெந்தய நீர்

செவ்வாய்: வெந்தய நீர்

இந்த அற்புதமான பானம் மூலம் உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் நச்சுத்தன்மையை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் இது. நீங்கள் சில வெந்தயங்களை ஒரே இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும். விதைகளை வடிகட்டி விட்டு தண்ணீரை குடிக்கவும். வெந்தய நீர் தைராய்டு சிக்கல்களை நிர்வகிக்க உதவுகிறது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

புதன்: இலவங்கப்பட்டை நீர் + தேன்

புதன்: இலவங்கப்பட்டை நீர் + தேன்

நீங்கள் இனிப்பு பானங்களை விரும்பினால், இது உடல் எடையை குறைப்பதற்கும், நச்சுத்தன்மையை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. இது பொதுவான சளி, ஒவ்வாமை, கொழுப்பு, சிறுநீர்ப்பை தொற்று போன்றவற்றை கவனித்துக்கொள்ள உதவுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் சிறிது இலவங்கப்பட்டை தூள் சேர்த்து, தண்ணீர் ஒரு சாதாரண அறை வெப்பநிலையை அடைந்ததும் அதில் சிறிது தேனை சேர்க்கவும்.

வியாழன்: சீரக எலுமிச்சை நீர்

வியாழன்: சீரக எலுமிச்சை நீர்

சீரகம் அல்லது ஜீராவை இரவில் ஊறவைத்து, பின்னர் விதைகளுடன் தண்ணீரை கொதிக்க வைக்கவும். விதைகளை வடிகட்டி, தண்ணீர் ஒரு சாதாரண அறை வெப்பநிலையை அடைந்ததும், இந்த டிடாக்ஸ் தண்ணீரில் அரை டம்ளரில் எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கவும். சிறந்த முடிவுகளுக்கு நீங்கள் நாள் முழுவதும் இந்த தண்ணீரை குடிக்கலாம். இது குடல் இயக்கத்தை எளிதாக்க உதவுகிறது மற்றும் அந்த பிடிவாதமான கொழுப்பைக் குறைப்பதோடு இயற்கையாகவே வீக்கத்தை நீக்குகிறது.

புதுசா காதலிக்கிறவங்க இந்த விஷயங்களை தெரியாமகூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க காதல் வாழ்க்கை காலி...!

வெள்ளி: ஓம நீர்

வெள்ளி: ஓம நீர்

ஓம விதைகள் வயிற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க சிறந்தவை. அவை உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் புதுப்பிக்கின்றன. 4 கப் தண்ணீரை வேகவைத்து, ஓம விதைகளைச் சேர்த்து, குறைந்த தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதை சூடாக குடிக்கவும்.

சனி: வெட்டிவேர் நீர்

சனி: வெட்டிவேர் நீர்

வெட்டிவேர் அதன் அற்புதமான குளிர்ச்சி பண்பிற்காக புகழ்பெற்றது. இந்த டிடாக்ஸ் நீர் தயாரிக்க எளிதானது மற்றும் வேரை சரியாக கழுவிய பின் வேர்களை தண்ணீரில் கொதிக்க வைத்து தயாரிக்கலாம். கலவை ஒரு அறை வெப்பநிலையை அடைந்தவுடன் தண்ணீரை குடிக்கவும். இந்த டிடாக்ஸ் நீர் நரம்பு தளர்வுக்கு ஏற்றது, தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்கிறது, நல்ல சருமத்திற்கு சிறந்தது மற்றும் கல்லீரலுக்கும் நல்லது.

ஞாயிறு: வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்

ஞாயிறு: வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்

ஞாயிறு சோம்பேறித்தனத்திற்கான நாள் அல்ல. எனவே ஞாயிற்றுக்கிழமை அன்று எளிதான டிடாக்ஸ் தண்ணீரை குடியுங்கள். சனிக்கிழமை இரவு தூக்கத்திற்குப் பிறகு, உங்களுக்கு சில சுத்திகரிப்பு தேவை. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சையை பிழிந்து அதைக் குடிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 Days Weight Loss Detox Drinks

Read to know some simple yet interesting detox drinks to help you lose weight effortlessly.