எலும்புகள் வலிமையாக இருக்க காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!

பொதுவாகவே, எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு காலை உணவு தான் சிறந்தது என்பது வல்லுநர்களின் கூற்று.

நமது உடல் எப்போழுதும் ஆரோக்கியமான இருக்க வேண்டுமென்றால், அதற்கு ஊட்டச்சத்துக்கள் முக்கியம். அதிலும் மிகவும் முக்கியமானது என்றால், கால்சியம் தான். கால்சியமானது நமது உடலில் எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலு சேர்த்திட உதவுகிறது.

5 Diet Tips To Have A Calcium Rich Breakfast

சில ஆய்வுகளின் முடிவுகளின் படி, கால்சியமானது கொழுப்பு தொகுப்பு மற்றும் எடை மேலாண்மை ஆகியவற்றில் ஒரு பங்கு வகிக்கிறது. குழந்தைகளுக்கும், பருவ வயதினருக்கும் கால்சியம் என்பது உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய சத்தாகும். அப்போது தான் அவர்களது எலும்புகள் உறுதியாக இருப்பதோடு, வயதாகும் காலத்தில் எலும்பு இழப்பு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

இளமை பருவத்தில் எலும்புகளின் வளர்ச்சி வேகமாக இருக்கும். இதன் காரணமாக உண்ணும் உணவில் அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களும் உள்ளடங்கி இருக்க வேண்டும். நடுத்தர வயது பெண்கள், வயதானர்கள் மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள், கால்சியம் எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்வதோடு, தீவிரமாக கண்காணிக்க வேண்டியதும் அவசியம்.

பொதுவாகவே, எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு காலை உணவு தான் சிறந்தது என்பது வல்லுநர்களின் கூற்று. எனவே, இப்போது எலும்பு வளர்ச்சிக்கு உதவக்கூடிய அட்டகாசமான காலை உணவுகளை பற்றி தற்போது பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

ஒரு பெரிய டம்ளர் நிறைய பால் குடிப்பது நாளின் தொடக்கத்தை சரியானதாக்கும். உணவின் இடத்தை பெற முடியும் என்றால் பாலால் மட்டும் தான் முடியும். ஏனென்றால், அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படி. பாலில் கால்சியத்தை தவிர, மெக்னீசியம், புரதம், பொட்டாசியம், அயோடின், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி உள்ளன. ஒரு வேளை நீங்கள் பால் குடிக்காதவராக இருந்தால், கால்சியம் நிறைந்த சோயா பால் குடிக்கலாம்.

தயிர்

தயிர்

பாலிற்கு அடுத்தபடியாக, கால்சியம் நிறைந்தது என்றால் தயிரை கூறலாம். அதற்கு அடுத்ததாக, கால்சியம் நிறைந்த தானியங்கள், ஓட்ஸ் அல்லது பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

கால்சியம் நிறைந்த பழங்கள்

கால்சியம் நிறைந்த பழங்கள்

பழங்களில் கால்சியம் அதிகம் உள்ளது என கூறினால் சிலர் ஆச்சரியப்படுவர். ஆமாம், சில பழங்களில் கால்சியம் அதிகமாகவே உள்ளது. அத்திப்பழத்தில் கால்சியம் மிகுதியாகவே உள்ளது. அதாவது, 100 கிராம் அளவிலான அத்திப்பழத்தில் 35 கிராம் அளவிற்கு கால்சியம் உள்ளது என்றால் பாருங்களேன். கால்சியம் நிறைந்த பிற பழங்கள் என்றால், ஆரஞ்சு, ஆப்ரிகோட், கிவி, பெர்ரி, பப்பாளி ஆகியவற்றை கூறலாம்.

சீஸ்

சீஸ்

சீஸ் பற்றி மிகவும் பயப்படவோ எச்சரிக்கையாகவோ இருக்க தேவையில்லை. ஏனென்றால், சீஸ், ஒரு பால் உற்பத்தி பொருள் என்பதால் அதிலும் கால்சியம் நிறைந்துள்ளது. எனினும் அளவோடு எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். பெரும்பாலான சீஸ்கள் கால்சியம் நிறைந்ததாக தான் உள்ளன. அதிலும், பார்மேசன் சீஸ் தான் அதிக அளவு கால்சியத்தை கொண்டது. ப்ரி போன்ற மென்மையான சீஸ், குறைந்த அளவிலான கால்சியத்தையே கொண்டிருக்கும். உங்கள் காலை உணவில் ஒரு குறிப்பிட்ட அளவு சீஸ் சேர்க்கலாம்.

கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகள்

கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகள்

உங்கள் காலை உணவில் உங்களால் முடிந்த அளவு பச்சை காய்கறிகள் அல்லது கீரைகளை சேர்க்க முயற்சி செய்யவும். நீங்கள் செய்யும் ஆம்லெட்டுகள், பேன் கேக், கஞ்சிகள் என எதில் வேண்டுமானாலும் சேர்க்க முயலுங்கள். ப்ராக்கோலி, கேல் கீரை, கடுகு கீரைகள் மற்றும் கொலார்டு கீரைகள் போன்ற பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிக அளவில் உள்ளது.

முடிவுரை

முடிவுரை

மேலே கொடுக்கப்பட்டுள்ள உதவிக் குறிப்புகளைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். எதுவாக இருந்தாலும், எப்போதும் தகுந்த அளவு எடுத்துக் கொள்வதை உறுதிப்படுத்தவும். எதையும் அதிகமாகப் பயன்படுத்துவது, நன்மைக்கு பதிலாக தீமையையே விளைவிக்கக்கூடும். முக்கியமாக உங்கள் அன்றாட உணவு பழக்கத்தில் ஏதேனும் பெரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன்பு ஒரு நிபுணரை அணுக வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion