Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
தொப்பை குறையணும்-ன்னா முட்டையை இப்படி சாப்பிடுங்க...
முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன் மற்றம் ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிரம்பியுள்ளது. ஆனால், முட்டையை சாப்பிட்டால் உடல் எடை மற்றும் தொப்பை குறையும் என்பது தெரியுமா?
முட்டை மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும் இந்த முட்டை உலகின் பல பகுதிகளிலும் சிறந்த காலை உணவாகவும் கருதப்படுகிறது. முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன் மற்றம் ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிரம்பியுள்ளது. ஆனால், முட்டையை சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை மற்றும் தொப்பை குறையும் என்பது தெரியுமா?

ஆம், முட்டையில் கலோரிகள் குறைவு என்பதால், இது உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். அதுவும் மிதமான அளவிலான ஒரு முட்டையில் 60-65 கலோரிகள் உள்ளன. முட்டை உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து, கொழுப்புக்களைக் கரைக்கும் பணியை வேகப்படுத்தும்.
குறிப்பு: முட்டையினால் சிறப்பான பலனைப் பெற வேண்டுமானால், அதை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியம். எனவே சரியான நேரத்தில் சரியான முறையில் முட்டையை சாப்பிட்டு, அதன் முழு சத்துக்களையும் பெறுங்கள்.

காலை உணவாக முட்டை
முட்டையை காலை உணவாக உண்பது மிகவும் ஆரோக்கியமானது. பெரும்பாலான மக்கள் முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லெட், முட்டை சாண்ட்விச், முட்டை சாலட், முட்டை புர்ஜி என சமைத்து சாப்பிடுவார்கள். முட்டையை சமைக்கும் போது பலர் சமையல் எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கொள்வார்கள். இப்படி இந்த எண்ணெய் அல்லது வெண்ணெயை சேர்க்கும் போது, அதில் கலோரிகள் அதிகரித்து, ஊட்டச்சத்துக்களின் அளவு குறைந்துவிடும்.

வேறு எப்படி சாப்பிடலாம்?
முட்டையை காலை உணவாக உட்கொள்ள நினைத்தால், அந்த முட்டையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சமைத்து உண்ணுங்கள். இதனால் சரியான அளவில் நல்ல கொழுப்புக்கள் உடலுக்கு கிடைத்து, உடல் எடையும் குறையும். காலை உணவின் போது ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், உடலின் மெட்டபாலிசமானது 5% அதிகரித்து, தொப்பை விரைவில் குறைவதற்கு பெரிதும் உதவி புரியும்.

மதியம் மற்றும் இரவு உணவாக முட்டை
முட்டையைக் கொண்டு மதியம் மற்றும் இரவு வேளையில் கூட சுவையான சமையலை சமைத்து சாப்பிடலாம். அதுவும் மதிய வேளையின் போது, உடைத்துவிட்ட முட்டைக் குழம்பை நவதானிய மாவால் தயாரிக்கப்பட்ட ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லாவிட்டால், உங்களுக்கு பிடித்த சில காய்கறிகளை முட்டை புர்ஜியுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இவை இரண்டுமே மிகவும் ஆரோக்கியமான மற்றும் எளிதில் தயாரிக்கக்கூடிய ரெசிபிக்களாகும்.

எத்தனை நாட்கள் சாப்பிடலாம்?
இப்படி முட்டை சமையலை வாரத்திற்கு 3-4 நாட்கள் சாப்பிடலாம். இதர நாட்கள் கடலை மாவால் தயாரிக்கப்படும் கலோரி குறைவான சமையலை சாப்பிடலாம். ஏனெனில் கடலை மாவு உடல் எடையைக் குறைக்க உதவும் மிகச் சிறப்பான பொருளாக கருதப்படுகிறது.

ஸ்நாக்ஸ் வேளையில் என்ன சாப்பிடலாம்?
காலை உணவிற்கு பின் மதிய உணவிற்கு முன் பலருக்கும் பசி எடுக்கும். இம்மாதிரியான நேரத்தில் என்ன சாப்பிடுவது என்று தெரியாமல் பலர் இருப்போம். இந்நிலையில் ஒரு பௌல் ஓட்ஸை சாப்பிடலாம். இது உடல் எடையைக் குறைக்க உதவும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஓட்ஸை சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். அதுமட்டுமின்றி, இது செரிமான அமிலத்தின் உற்பத்தியை அதிகரித்து, செரிமானம் சிறப்பாக நடைபெறச் செய்யும்.

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?
ஊட்டச்சத்து நிபுணர்களின் படி, ஒரு நாளைக்கு 3 முட்டை வரை சாப்பிடலாம். குளிர்காலத்தில் வேண்டுமானால் 4-5 முட்டை வரை சாப்பிடலாம். ஆனால் இக்காலத்தில் அதிகப்படியான கலோரிகளை எரிப்பதற்கு உடற்பயிற்சிகளை அவசியம் செய்ய வேண்டும். இதர நாட்கள் சமையலின் போது தேங்காய் எண்ணெய் சேர்த்து உணவை சமைத்து சாப்பிடலாம். முக்கியமாக வெறும் முட்டையை மட்டும் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்துவிடாது. ஆகவே முட்டை சாப்பிடும் நாட்களிலும், பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களையும் சாப்பிட வேண்டும்.



Click it and Unblock the Notifications
