சீக்கிரமா வெயிட் குறையணுமா? இந்த அட்டவணைல இருக்கிற மாதிரி சாப்பிடுங்க...

எடை முறைப்பு முயற்சியில் நீங்கள் சரியான திசையில் பயணிக்க ஏற்ற ஒரு உணவு அட்டவணையை உங்களுக்காக இங்கே பகிர்ந்து கொள்கிறோம். அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.

எடை குறைப்பு என்பது மந்திர வேலை அல்ல. நினைத்தவுடன் எடை குறைப்பை அடைய முயலுவது இயலாத காரியம். சீரான எடை குறைப்பு பயிற்சி மட்டுமே சீரான பலனைத் தரும். விரைவாக எடை குறைப்பை மேற்கொள்ள எடுத்துக் கொள்ளும் உணவு அட்டவணை உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். ஆகவே யதார்த்த வழிகாட்டுதல் மற்றும் எதிர்ப்பார்ப்புகள் ஒரு உணவு அட்டவணையில் இருக்க வேண்டும். உணவை அனுபவித்து உண்ணும் வழிகள் பின்பற்றப்பட வேண்டும்.

Weight Loss Meal Plans To Get You Going In The Right Direction

வாழ்க்கை முறையில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் உணவு அட்டவனையை சரியான முறையில் அணுக முடியும். இதனால் உங்கள் உணவை மேலும் அனுபவித்து உண்ண முடியும். உண்மையில் உடல் எடை குறைப்பிற்கு உதவும் சில உணவுத் திட்டங்களை நாங்கள் உங்களுக்காக கொடுத்திருக்கிறோம். இதனை தொன்டங்கி எடை குறைப்பை மேற்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேகமாக குறைய

வேகமாக குறைய

பொதுவாக மனிதன் "போதும்" என்று சொல்லும் பழக்கத்தை சாப்பிடுவதில் மட்டுமே கொண்டிருக்கிறான் என்று கூறுவார்கள். அதவது அளவுக்கு மீறி ஒரே நேரத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் உணவு எடுத்துக் கொள்ள முடியாது. ஆகவே சாப்பிடும்போது திருத்தி என்பது மிகவும் அவசியம். ஆனால் இன்றைய நிலையில் பலரும் அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டு பின்பு அதன் எதிர்வினைகளை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

நாம் விலங்குகள் அல்ல, நினைத்தவுடன் நினைத்ததை எல்லாம் சாப்பிடுவதற்கு, மனிதர்களாகிய நாம், உண்ணும் உணவில் சில கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு உணவு அட்டவணை தேவை. காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு ஆகிய மூன்று வேளையும் என்ன சாப்பிடுவதால் திருப்தி கிடைக்கும் என்பதும், உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பதும் தெரிந்து உணவு உட்கொள்ள வேண்டும்.

காலை உணவு

காலை உணவு

பொதுவாக நாம் பழங்களை அதிகம் உட்கொள்வதில்லை. உண்மையில் காலை உணவில் உங்களுக்கு பிடித்த ஒரு பழத்தை எடுத்துக் கொள்ளலாம். அதுவும் உங்கள் முதல் உணவாக பழத்தை உட்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த பழத்துடன் குறைந்த கொழுப்பு அல்லது க்ரீக் யோகர்ட் சேர்த்து கலந்து அதில் க்ரானோலா சேர்த்து உட்கொள்ளலாம் இந்த உணவு மிகுந்த ஆரோக்கியம் நிறைந்த உணவாக உள்ளது.

ஆரோக்கியமான அதே சமயம் சுவை மிகுந்த தானியங்களைக் கொண்டு க்ரானோலா தயார் செய்து கொள்ளலாம். இந்த உணவில் உங்களுக்குத் தேவையான தானியம், நார்ச்சத்து போன்றவை கிடைக்கின்றன, மேலும் பலவித ஊட்டச்சத்துகள் நிறைந்தது யோகர்ட், மற்றும் யோகர்ட்டில் பல ஆரோக்கிய அன்டி ஆக்சிடென்ட் உள்ளது. ஒரு சரியான காலை உணவை எடுத்துக் கொள்வதால் தினசரி உங்கள் உடலுக்கு விவரிக்க முடியாத பல வித நன்மைகள் கிடைக்கின்றன.

மதிய உணவு

மதிய உணவு

மதிய உணவு பற்றி குறிப்பிடும்போது, சமைத்த உணவை தேர்வு செய்யலாம். ஆனால் நாங்கள் இப்போது குறிப்பிடும் உணவை சமைக்க வேண்டிய தேவை இல்லை. இன்று பலருக்கு உணவு சமைக்க நேரம் இருப்பதில்லை. ஆகவே சமைக்காமல் எளிதில் மதிய உணவை தேர்வு செய்யும் வழி இதோ உங்களுக்காக..

மதிய உணவிற்கு சான்ட்விச் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் எடை குறைப்பு திட்டத்தில் இருப்பதால் சான்ட்விச் மூலம் எல்லா நன்மைகளைப் பெரும் அளவிற்கு தகுந்த சான்ட்விச் தயாரித்து உட்கொள்வது அவசியம். சரியான, ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிகுந்த, சுவையான அதே நேரத்தில் விலை மலிவான பிரட் தேர்ந்தெடுப்பது அவசியம். இதனோடு ஆரோக்கியமான தானியங்கள், சுவையான இறைச்சி போன்றவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.

உங்களுக்கு சீஸ் விருப்பம் என்றால் அதனையும் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு சான்ட்விச்சில் காய்கறிகள், லெட்டுஸ், தக்காளி போன்றவற்றை சேர்க்கலாம். சாஸ் சேர்த்துக் கொள்ளலாம். கடுகு பிடிக்கும் என்றால் சேர்த்துக் கொள்ளலாம். சாஸ் தேர்வு செய்தால் ஆரோக்கியமான் சாஸை தேர்ந்தெடுக்கவும். மயோனிஸ் வேண்டும் என்று விரும்புகிறவர்கள், குறைந்த கொழுப்பு மயோனிஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

எந்த உணவை தேர்ந்தெடுத்தாலும் அதனை அனுபவித்து உண்ண வேண்டும்.

இரவு உணவு

இரவு உணவு

இரவு உணவிற்கு, இறைச்சி, இரண்டு காய்கறிகள், பிரட், பழம் சேர்க்கப்பட்ட இனிப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் சாப்பிடும் இனிப்பு, மிகுந்த சுவை கொண்டதாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தயிர் மற்றும் பழம் சேர்த்து தயாரிக்கவும். உங்கள் படைப்பாற்றலுடன் மனதிற்கு ஏற்ற விதத்தில் உங்கள் இரவு உணவை இன்னும் சுவையாக தயாரித்துக் கொள்ளுங்கள். தேவைபட்டால் மாமிச இறைச்சியை சேர்த்துக் கொள்ளலாம். வேக வைத்த உருளைக் கிழங்கையும் இரவு உணவில் தேவைபட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.

எடை குறைப்பிற்கான அட்டவணை மிகவும் ஜாலியாக அதே சமயம் சுவை மிகுந்ததாக இருக்க வேண்டும். சிவப்பு இறைச்சி, சமைத்த சிக்கன், பன்றி இறைச்சி, மீன் போன்றவற்றை அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம். இன்னும் பல வித உணவுகளை முயற்சிக்கலாம். ஆனால் மேலே கூறிய அட்டவணை கவனமாக எடை குறைப்பிற்காக மட்டும் வடிவமைக்கப்பட்டது.

ஆகவே இதனை முயற்சித்து சீரான எடை குறைப்பை மேற்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion