Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
உங்களால் தட்டையான வயிறை பெற முடியாமல் போவதற்கு காரணம் இவைதான்... டயட்டோ அல்லது உடற்பயிற்சியோ அல்ல...
இன்று நடுத்தர வயதில் இருப்பவர்கள் கூட தொப்பையுடன்தான் காட்சி அளிக்கிறார்கள்.இதற்கு காரணம் அவர்களின் மாறிவிட்ட வாழ்க்கை முறை, டயட் கடைபிடிக்காதது, உடற்பயிற்சி செய்யாதது மட்டுமல்ல.
தட்டையான வயிறும், அழகான உடலமைப்பும் வேண்டுமென்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. ஆண், பெண் இருவருமே கச்சிதமான உடலமைப்பை வைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது அனைவராலும் முடிவதில்லை. இன்று நடுத்தர வயதில் இருப்பவர்கள் கூட தொப்பையுடன்தான் காட்சி அளிக்கிறார்கள்.

இதற்கு காரணம் அவர்களின் மாறிவிட்ட வாழ்க்கை முறை, டயட் கடைபிடிக்காதது, உடற்பயிற்சி செய்யாதது மட்டுமல்ல, உங்களின் மற்ற சில பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய குறைபாடுகளும்தான். இந்த பதிவில் நீங்கள் தட்டையான வயிறை பெறாமல் தடுக்கும் காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

உங்கள் மரபணுக்கள் வயிற்றில் கொழுப்பை சேர்த்து வைக்கிறது
உங்களின் மரபணுக்கள் உங்கள் வயிறை பெரிதாக காட்டுவதில்லை, கொழுப்புகளை பரப்புவதிலும், சேமித்து வைப்பதிலும் இது முக்கியப்பங்கு வகிக்கிறது. உள்ளுறுப்பு சார் கொழுப்புகள் என்பவை உங்களின் அடிவயிறு மற்றும் குடலை சுற்றி இருக்கிறது. உங்களை தட்டையான வயிறு பெறுவதில் இருந்து பெரும்பாலும் தடுப்பது இதுதான். இதில் மரபணுக்களுக்கும் பங்கு உள்ளது.

உணவு ஒவ்வாமை
உங்களுக்கு சில உணவுகள் மீது அலர்ஜி ஏற்படுவதற்கும், பிடிக்காமல் போவதற்கும் உங்கள் மரபணுக்களுக்கும் தொடர்பு உள்ளது. இந்த உணவு ஒவ்வாமையும் உங்கள் வயிற்றில் அதிக தசை மற்றும் வீக்கத்திற்கு காரணமாக அமைகிறது. வீக்கம் மற்றும் அடிவயிறு விரிவாக்கம் போன்ற தூண்டுதல்கள் வயிற்றின் அளவு பெரிதாவதற்கு காரணமாக இருக்கிறது.

குடல் நுண்ணுயிர்களின் சமநிலையின்மை
உங்கள் வயிற்றில் இருக்கும் நுண்ணயிரிகள் சமநிலையில் இல்லாதபோது அவை வீக்கம் மற்றும் வாயுக்கோளாறு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். உங்கள் வயிற்றில் இருக்கும் பாக்டீரியாவை பொறுத்துதான் உங்கள் வயிற்றில் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் செரிமானம் அடைகிறது. சில பாக்டீரியாக்கள் நார்சத்தை விரைவில் செரிமானம் அடையவைக்கும், இது எடை அதிகரிப்பிற்கு வலி வகுக்கும்.

ஹார்மோன் பிரச்சினைகள்
உடலில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள் உடல் எடை அதிகரிப்பின் முக்கிய இடம் வகிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை பெண்களின் எடை அதிகரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது. ஹார்மோன் பிரச்சினைகளை உண்டாக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று மனஅழுத்தம் ஆகும். குறிப்பாக பெண்களிடையே மனஅழுத்தம் அவர்களின் அண்ட விடுப்பை நிறுத்துகிறது. இதனால் புரோஜெஸ்டெரோர்ன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. கலோரிகளை எரிக்க இந்த ஹார்மோன் மிகவும் முக்கியமானதாகும்.

ஹைப்போதைராய்டு
தைராய்டு பிரச்சினை உங்களின் வளர்சிதை மாற்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டையும் நிர்ணயிப்பது தைராய்டாகத்தான் இருக்கும். இது சரியாக செயல்படாத போது உடலின் அனைத்து செயல்பாடுகளிலும் முடக்கம் ஏற்படும். இதனால் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று எடை அதிகரிப்பு ஆகும். உடலுக்கு தேவையான எரிபொருள் குறைவாக கிடைப்பதால் நீங்கள் விரைவில் சோர்வடைய வாய்ப்பிருக்கிறது. மிக்செடிமா என்பது அபூர்வமான அதேசமயம் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் ஆபத்தான நோயாகும். இதனால் தைராய்டு சுரப்பியில் அதிக நீர் சேர்க்கப்படும் மேலும் உடலில் அதிக கொழுப்பையும் சேர்க்கும்.

இன்சுலின்
இன்சுலின் ஒரு அனபாலிக் மருந்து ஆகும். இதனால் தசைகளின் பலவீனம் மற்றும் அதிக கொழுப்பு உற்பத்தி போன்ற பிரச்சினை ஏற்படும். இன்சுலின் மருந்தை எடுத்து கொள்வது உங்கள் உடலில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. இது சர்க்கரை மற்றும் குளுக்கோஸை உங்கள் உடல் உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது. நமது உடல் உபயோகப்படுத்தப்படாத குளுக்கோஸை கொழுப்பாக மாற்றிவிடுகிறது. இதனால் எடை குறைப்பு என்பது உங்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடுகிறது.



Click it and Unblock the Notifications