For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் 7 நிமிஷம் மட்டும் இந்த யோகா செஞ்சாலே போதும்... எந்த நோயும் உங்கள நெருங்காதாம்...

|

யோகாசனம் பற்றி பொதுவாக எல்லோரும் என்ன நினைக்கிறார்கள்? ஏதோ மனசு கொஞ்சம் இளைப்பாறுதல், உடலுக்கு நெகிழ்வுதன்மை யோகாசனத்தால் கிடைக்கும் என்ற பொது நோக்கு உள்ளது. ஆனால், தற்போதைய ஆய்வுகள் யோகாசனம் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்று தெரிவிக்கின்றன. யோகாசனம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உணர்ச்சிகளை சமநிலைப்படுத்தி, கவனத்தை குவிக்கவும் உதவுகிறது. மொத்தத்தில் நிம்மதியை அளிக்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகாவைப் பற்றி

யோகாவைப் பற்றி

றை பேராசிரியர்களான சஞ்சீவ் சோப்ரா, கினா வில்ட் இருவரும் 2017ம் ஆண்டு 'இரண்டு மிகமுக்கிய நாள்கள்: உங்கள் நோக்கத்தை கண்டு கொள்வதும் எப்படி? மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வது எப்படி?' என்ற புத்தகத்தை எழுதினர். அதில், திருப்தி, சந்தோஷம், சமாதானம் ஆகியவற்றை அடையும் நேரடி வழி யோகாசனம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

MOST READ: மலம் கழிக்கிற இடத்துல எரிச்சலா இருக்கா? மலம் கழிக்கும்முன் இத செய்ங்க... சரியாகிடும்...

உடலமைப்பு யோகாசனமும்

உடலமைப்பு யோகாசனமும்

உடல் வளையக்கூடியதாக இருந்தால்தான் யோகாசனம் செய்ய முடியும் என்ற கருத்தை மறுத்துள்ள பேராசியர்கள் இருவரும், நாள்தோறும் ஏழு நிமிடம் யோகாசனம் செய்தால் மனதுக்கு நாள் முழுவதும் பெரிய அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

யோகாசனம் செய்வதற்கு வழிகாட்டுவதற்கு பல செயலிகள் உள்ளன. பல வீடியோ வகுப்புகள் இணையத்தில் காண கிடைக்கின்றன. இவற்றின் மூலம் என்னென்ன யோகாசன பயிற்சிகளை செய்யலாம் என்று கற்றுக்கொள்ளலாம்.

ஏழு நிமிடம் போதும்

ஏழு நிமிடம் போதும்

தினமும் ஏழு நிமிடம் யோகாசனம் செய்தால் தசைகள் வலிமையாகும்; அமரும்போது முதுகுத்தண்டு பாதுகாக்கப்படும்; உடலில் இரத்தம் மற்றும் நிணநீர் ஆகியவற்றின் சுழற்சி அதிகமாகும்; மன அழுத்தத்தின்போது சுரக்கும் ஹார்மோனான கொரிஸ்டால் குறையும்; இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்; ஆழ்ந்த உறக்கம் வரும்; உணவு நல்லமுறையில் செரிக்கும்; உடல் வலி குறையும்; உணர்ச்சிகள் சமநிலைப்படும்.

கைகளை கட்டிக் கொண்டு ஒருவர் முன் நிற்பது தன்னம்பிக்கையை குலைக்கும்; அதேசமயம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடப்பது நமக்கே தன்னம்பிக்கையை கூட்டும். அதேபோன்று வரும் நாள்களில் யோகாசனத்தின் பல்வேறு நிலைகள் உடலின் உயிர்வேதியியல் வழிமுறைகளை எப்படி மாற்றி உயிரிமனோசமூக நன்மைகளை அளிக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுகொள்வார்கள் என்றும் சஞ்சீவ் சோப்ரா மற்றும் கினா வில்ட் இருவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

MOST READ: மக்காசோளம் தவிர இந்த 5 பொருள்ல கூட பாப்கார்ன் செய்யலாம்... அதவிட சூப்பரா இருக்கும்...

மனநிம்மதியும் மகிழ்ச்சியும்

மனநிம்மதியும் மகிழ்ச்சியும்

ஒரே ஒரு யோகாசனம் மகிழ்ச்சியின் திறவுகோலாக அமைந்திடும் என்றெல்லாம் சொல்லவில்லை. மாறாக, தினந்தோறும் செய்வதன் மூலம் சில யோகாசன நிலைகள் மனதுக்கு இளைப்பாறுதல் கொடுக்கின்றன; வேறு சில மனதுக்கு புத்துணர்வையும் உடலுக்கு ஆற்றலையும் அளிக்கின்றன என்றும், மனஅமைதி அதிகம் பாதிக்கப்படாததால் மகிழ்ச்சி என்னும் மதிப்பில்லா பலன் கிடைக்கிறது என்றும் பெரியவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of doing yoga for just 7 minutes a day

They point to scientific evidence that shows that practicing yoga for as little as seven minutes per day has significant benefits. "Seven minutes! We can all fit seven minutes into our day to bring greater calm and joy in the rest of our days." There are apps and online videos that can guide you through a seven-minute daily practice.
Story first published: Monday, May 20, 2019, 12:21 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more