Latest Updates
-
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
பத்தே நாளில் எடையைக் குறைக்க அருமையான பத்து ஐடியாக்கள்... ட்ரை பண்ணுங்க... நிச்சயம் ரிசல்ட்
பத்தே நாட்களில் எடையைக் குறைக்க சூப்பரான பத்து வழிமுறைகள் பற்றி இங்கே உங்களுக்காக விளக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.
சில நேரங்களில் நமது உடல் பருமனே ஒரு பொது நிகழ்ச்சிக்கு செல்வதற்கு இடையூறாக இருக்கும். அந்த மாதிரியான சமயங்களில் அடுத்தவர் நம் எடையை குறித்து என்ன நினைப்கார்களோ என்ற எண்ணம் ஏற்படும். இதனாலேயே நாம் பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வர வாய்ப்புள்ளது. சில பேர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக எண்ணதான் மெனக்கெட்டாலும் அது என்னவோ எட்டாக் கனவாகவே இருக்கும். அந்த மாதிரியான நபர்களுக்கு சீக்கிரமே உடல் எடையை குறைக்க நாங்கள் சல டிப்ஸ்களை கூறுகிறோம். இந்த டிப்ஸ்களை நீங்கள் ஃப்லோ பண்ணினால் 10 நாட்களிலேயே உடல் எடையை குறைத்து விடலாம்.

நார்ச்சத்து உணவுகள்
உடல் எடையை வெகுவாக குறைப்பதில் நார்ச்சத்து உணவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நார்ச்சத்துகள் வயிறு நிரம்பிய எண்ணத்தை கொடுப்பதால் அடிக்கடி உணவு உண்பது தவிர்க்கப்படுகிறது. இது உங்களுக்கு அதிகமான கலோரிகளையும் கொடுக்காததால் உடல் எடையை வெகுவாக குறைக்கலாம்.
நார்ச்சத்து அடங்கிய உணவுகள்
பிரக்கோலி
ப்ரஷ்ஷல் ஸ்பிரெளட்ஸ்
முட்டை கோசு
பயிறு வகைகள்
கருப்பு பீன்ஸ் போன்றவை.

நல்ல கொழுப்புள்ள உணவுகள்
கொழுப்பு உடம்புக்கு கேடு தான்ற. ஆனால் நலல கொழுப்புகள் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது. வறுத்த உணவுகள், ஜங்க் உணவுகள் போன்றவற்றில் சேச்சுரேட்டேடு கொழுப்புகள் உள்ளன. இது உடல் எடையை அதிகரித்து விடும். ஆனால் இந்த அன்சேச்சுரேட்டேடு நல்ல கொழுப்பு கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதுவும் இதய நோய்கள் போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. எனவே உங்கள் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ராலை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த உணவுகளில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகளவில் காணப்படுகின்றன
அவகேடா
சர்க்கரை வள்ளிக் கிழங்கு
நட்ஸ்
ஆலிவ் ஆயில்
டார்க் சாக்லேட்

கார்போஹைட்ரேட் அளவை குறையுங்கள்
இந்த 10 நாட்களுக்கு டயட் இருக்கும் போது கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பது நல்லது. 230 கிராமுக்கு குறைவாக கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்து வாருங்கள். இந்த கார்போஹைட்ரேட் உணவுகள் எல்லா உணவுகளிலும் காணப்படுகிறது. எனவே இதை முற்றிலுமாக நீங்கள் தவிர்ப்பது கடினம். எனவே கூடிய வரை குறைந்தளவு எடுத்துக் கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட்டில் அதிகளவு கலோரிகள் உள்ளன. எனவே இதை அதிகளவு எடுத்துக் கொள்ளும் போது பயன்படுத்தாத கலோரிகள் கொழுப்பாக மாறி விடுகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முதலில் கார்போஹைட்ரேட் உணவை குறைக்க வேண்டும்.

புரதங்கள்
புரோட்டீன் உடம்பை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது. இது கடினமாக இருந்தாலும் எளிதில் சீரணிக்க உதவுகிறது. நிறைய அளவு புரோட்டீன் எடுத்துக் கொள்ளும் போது தசைகள் வலிமையடைகிறது. அதே மாதிரி உடம்பில் தங்கியுள்ள கொழுப்புகள் தசைகள் வலுப்பெற உதவியாக அமைந்து விடும். இதனால் உடல் எடையும் கூடாது.

ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்
சில ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்களும் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. எனவே நீங்கள் அடிக்கடி நொறுக்கு தீனி சாப்பிடுவதை நிறுத்துங்கள். எனவே உங்கள் ஆபிஸ் இடைவெளிகளில் கூட ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது. அதற்கு பதில் பாதாம், முந்திரி போன்று ஆரோக்கியமான உணவுகளை சேருங்கள்.
வேக வைத்த முட்டை
ஆப்பிள்
பழ சாலட்
ப்ரஷ் ஜூஸ்
டார்க் சாக்லேட்
வாழைப்பழம்

பிரித்து பிரித்து சாப்பிடுங்கள்
ஓரேடியாக அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் சிறிது சிறிதாக பிரித்து சாப்பிடலாம். இது உங்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் உடல் எடையை குறைக்க இதுவும் ஒரு சிறந்த வழி. முதலில் கொஞ்சம் சாலட் பிறகு பசி இருந்தால் கொஞ்சம் நேரம் கழித்து சாதம் போன்றவற்றை கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதன் தேவையற்ற பசியை போக்குவதோடு போதுமான கலோரிகளை எடுத்துக் கொண்டு உடம்பை கச்சிதமாக வைத்துக் கொள்ளலாம்.

வீட்டு சாப்பாடு
வீட்டு சாப்பாடும் உங்களுக்கு உடல் எடையை குறைக்க சிறந்த தீர்வளிக்கிறது. ஏனெனில் வீட்டு சாப்பாட்டில் உங்கள் விருப்பத்திற்கிணங்க எண்ணெய்யை கூட குறைத்து கொள்ளலாம். ஆயிலை குறைத்துக் கொண்டு காய்கறிகளை சமைக்கலாம். வேக வைத்த காய்கறிகளை தயாரித்து சாப்பிடலாம். இப்படி உங்கள் விருப்பத்திற்கிணங்க கலோரிகளை குறைத்துக் கொண்டு சாப்பிடலாம்.

அதிக தண்ணீர் அருந்துங்கள்
அதிகமாக தண்ணீர் குடிப்பதும் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. ஒவ்வொரு உணவிற்கு முன்பும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொள்ளுங்கள். இதை 10 நாட்கள் ப்லோ பண்ணுங்க. இப்படி செய்யும் போது பாதி வயிறு தண்ணீரால் நிரம்பப்பட்டு குறைந்தளவு உணவை எடுத்துக் கொள்வோம். இது தாகத்தை தணிப்பதோடு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை குறைக்கிறது. மேலும் சரும ஈரப்பதத்தை தக்க வைத்து 10 நாள் டயட்டின் இறுதியில் பொலிவான சருமத்தை கொடுக்கிறது.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த 10 நாட்கள் டயட் திட்டத்தில் உடற்பயிற்சியும் சேர்ந்து செய்து வந்தால் கலோரிகள் எரிந்து சீக்கிரமே உடல் எடை குறைந்து விடும். இப்படி உடல் எடையை குறைக்கும் போது ஆரோக்கியமாக வாழ முடியும்.

கொஞ்சம் ஸ்நாக்ஸ் போதும்
வேலைக்கு போகும் போது கொஞ்சமாக ஸ்நாக்ஸ் எடுத்துச் செல்வது போதுமானது. பயணத்தின் போது, கடைகளுக்கு போகும் போது சாக்லேட் எல்லாம் சாப்பிடும் ஆசை இருக்கும். இது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஆகும். எனவே ஆப்பிளை எடுத்துச் செல்லும் நீங்கள் அலுவலகத்தில் சிப்ஸ் சாப்பிடுவதை தவிருங்கள்.

டிப்ஸ்கள்
இந்த 10 நாள் டயட்டில் உடனடியாக உடல் எடையை காணாதீர்கள். 10 நாளும் முடிந்த பிறகு இறுதியாக உடல் எடையை காணுங்கள்.
சும்மா சும்மா நொறுக்கு தீனிகள் சாப்பிடாமல் ஜூஸ், தண்ணீர் போன்றவற்றை அருந்துங்கள்.
சிறிய தட்டில் வைத்து சாப்பிடுங்கள். இது பார்ப்பதற்கு தட்டில் அதிகமான சாப்பாடு இருப்பதாக மூளை நினைத்து கொள்ளுங்கள். எனவே குறைந்தளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்த எண்ணத்தை தோற்றுவிக்கும்.
நன்றாக தூங்குங்கள். இது உங்கள் மன அழுத்தத்தை குறைத்து உடலை அமைதியாக வைக்கும். எனவே நன்றாக உறங்குங்கள். உடல் எடை கூடாது.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே மேற்கண்ட அனைத்தையும் நீங்கள் பின்பற்ற முடியும். எனவே நீங்கள் உங்களுக்கு விருப்பமான பழைய ஆடை, அல்லது பழைய போட்டோவை எடுத்து கூட உங்கள் இலக்காக வைத்துக் கொள்ளலாம். பழைய மாதிரி ஒல்லியாக வலம் வர வேண்டும் என்ற எண்ணம் உங்களை உடல் எடையை குறைக்க உதவும். உங்கள் மன வெற்றியே உங்கள் ஆரோக்கியத்திற்கான திறவுகோல்.



Click it and Unblock the Notifications











