For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாக்கிங் - ஜாக்கிங் உண்மையில் எது நல்லது? எவ்வளவு நேரம் மேற்கொள்ள வேண்டும்?

வாக்கிங் மற்றும் ஜாக்கிங் பற்றிய பல்வேறு நன்மைகளும் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் இங்கே விளக்கப்பட்டுள்ளது. படித்துப் பயன்பெறுங்கள்.

By Mahi Bala
|

எல்லா வயதினரும் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. அதன் மூலம் உடல் உறுதியாக இருப்பதோடு, பெரும்பான்மையான நோய்கள் வராமல் தடுக்கிறது. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என் மருத்துவர்கள் பரிந்துரைப்பது நம் எல்லோருக்குமே தெரிந்தது தான்.

which is the best? walking or jagging

அதே மருத்துவர்கள் வாக்கிங் செல்வதை விட யோகாசனங்கள் செய்வது மிக அதிகமான பலன்களைத் தரும் என்று சொல்லக் கேட்டிருப்போம். உடல் எடையைக் குறைப்பதற்கான வாக்கிங் செல்லும்போது, அதைவிட ஜாகிங் பெஸ்ட் என்று சிலர் சொல்வார்கள். இதனால் நமக்குள் ஏராளமான குழப்பங்கள் வந்து போகின்றன. எது நல்லது? எது கெட்டது? என்று. அந்த குழப்பங்களுக்கெல்லாம் இந்த கட்டுரை உங்களுக்கு தீர்வைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாக்கிங் - ஜாகிங்

வாக்கிங் - ஜாகிங்

வாக்கிங் நல்லது தான். இருந்தாலும் அதைவிட ஜாகிங்கின் மூலம் மிக அதிகப்படியான கலுாரியை மிகக் குறைந்த நேரத்தில் எரிக்க முடியும். இதனால் நேரம் மட்டும் அல்ல. நம்முடைய உடலில் உள்ள ஆற்றல்களும் கூட சேமிக்கப்படுகின்றன. அந்த வகையில் வாக்கிங்கை விட ஜாகிங் எதற்கெல்லாம் சிறந்தது என்று இங்கே பார்க்கலாம்.

கால்கள்

கால்கள்

நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கும் கால்களுக்கும் வலு சேர்க்கிறது. நல்ல உறக்கத்தைக் கொடுக்கிறது. இதனால் உடல் ஆற்றலும் ஆரோக்கியமும் அதிகரித்து ஆயுளும் நீடிக்கிறது. மனரீதியாகவும் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.

MOST READ: குரு பெயர்ச்சி முடிஞ்சிருச்சு... இன்னைக்கு எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது யோகம்?

எவ்வளவு வேகம்

எவ்வளவு வேகம்

உசேன் போல்ட் ஓடிய அளவுக்கு வேகமாக ஓடி சாதனை படைத்தால் தான் ஓட்டம் என்றில்லை. அப்படி ஓடினால் தான் பலன் என்று ஒருபோதும் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். மிதமான வேகத்தில் ஓடினாலே போதுமானது தான்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் தினமும் குறைந்தது அரை மணி நேரம் அளவுக்கு ஜாக்கிங் செய்து வந்தால், நிச்சயம் மன அழுத்தம் குறையும். மனநிலையில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.

 ஆயுள் நீடிப்பு

ஆயுள் நீடிப்பு

தினமும் வெறுமனே பத்து முதல் 20 நிமிடங்கள் வரை மட்டுமே ஜாக்கிங் செய்து வந்தாலே மாரடைப்பு மற்றும் மரணம் ஏற்படுவதற்கான விகிதம் முப்பது முதல் அறுபது சதவீதம் வரையிலும் குறையும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

உடல் எடை

உடல் எடை

தினமும் தொடர்ந்து ஜாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டீர்கள் என்றால், உடல் எடை தானாகக் குறையும். .பிட் அண்ட் பியூட்டியாக மாறிவிடுவீர்கள். வாக்கிங் செல்வதை விடவும் மூன்று மடங்கு வரையில் அதிக அளவில் உடல் எடை வேகமாகக் குறைய ஆரம்பித்துவிடும்.

மூட்டுவலி

மூட்டுவலி

தினமும் தொடர்ந்து ஜாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு, மற்ற சாதாரண உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் வாக்கிங் செல்பவர்களை விட 25 சதவீதம் குறைவாக அளவு தான் மூட்டுவலி பிரச்சினை ஏற்படுகிறது.

வளர்சிதை மாற்றங்கள்

வளர்சிதை மாற்றங்கள்

ஜாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருப்பவராக இருந்தால், உங்களுடைய நுரையீரல் நன்கு விரிவடைய ஆரம்பிக்கும். மூச்சு தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்படாது. ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். உடல் திறனில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

MOST READ: வழுக்கையில் மீண்டும் முடிவளர சுண்டெலியை அரைத்து தேய்க்கும் விநோதம்... வேற என்னலாம் செய்றாங்க?

இதய பாதிப்புகள்

இதய பாதிப்புகள்

நீண்ட தூரம் ஜாக்கிங் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமெல்லாம் கிடையாது. தினமும் குறைந்தபட்சம் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜாக்கிங் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டாலே, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் பாதிப்புகளும் 50 சதவீதம் வரை குறையுமாம்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

வாரத்தின் எல்லா நாட்களும் நம்மால் ஜாக்கிங் செல்ல முடியாது தான். ஆனால் குறைந்தது ஐந்து நாட்களாவது கட்டாயமாக செல்லுங்கள். அப்படி வாரத்தில் ஐந்து நாட்கள் ஒரு நாளைக்கு அரைமணி நேரம் வீதம் ஜாக்கிங் சென்றால் நீரிழிவு என்ற பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு.

எலும்புகள்

எலும்புகள்

தினமும் ஜாக்கிங் செல்வதனால், உங்களுடைய எலும்புகள் வலுப்பெறுகின்றன. இதனால் முதுமையில் ஏற்படுகின்ற மூட்டுப் பிரச்சினைகளைக் கூட நம்மால் தவிர்க்க முடியும்.

ஆழ்ந்த உறக்கம்

ஆழ்ந்த உறக்கம்

தினமும் குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஜாக்கிங் சென்று வந்தால் தூக்கமின்மை பிரச்சினை குறையும். அதைவிட, ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்தைப் பெற முடியும்.

MOST READ: உங்கள் கையில் இந்த விதி ரேகை எப்படி இருக்கிறது? உடைந்திருந்தால் என்ன அர்த்தம்?

ஞாபக சக்தி

ஞாபக சக்தி

ஜாக்கிங் செல்வது உங்களுடைய மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். அதனால் நினைவாற்றல் அதிகரிக்கும். ஞாபக மறதி குறைந்து, ஞாபகத் திறன் அதிகரிக்கத் தொடங்குவதை நீங்களே நன்கு உணர்வீர்கள். அதன்பின் வைத்த பொருளை எங்கு வைத்தோம் என்று தேடிக்கொண்டிருக்கும் வேலை உங்களுக்கு இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

which is the best? walking or jagging

here we are giving some important points about walking or jagging and that benefits also. so read and follow this.
Story first published: Friday, October 5, 2018, 16:59 [IST]
Desktop Bottom Promotion