Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
பக்கவிளைவுகளின்றி உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க...
உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இன்று பெரும்பாலான இளம் தலைமுறையினர் அவஸ்தைப்படும் ஒன்று தான் உடல் பருமன். இதற்கு வாழும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களே முதன்மையான காரணங்களாகும். இன்னும் சில சமயங்களில் மரபணுக்கள் மற்றும் மருத்துவ பிரச்சனைகளும் உடல் பருமனுக்கு காரணங்களாக இருக்கின்றன.
எப்போது ஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும். இப்படி அதிகரித்த உடல் எடையைக் குறைப்பதற்கு பலர் பல கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் சிலர் சாப்பிடாமல் பட்டினி கிடந்து உடல் எடையைக் குறைக்க நினைப்பார்கள். இப்படியெல்லாம் செய்தால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, கடுமையான உடல் நல குறைவால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

ஆனால் கீழே எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, மிகவும் எளிமையாக உடல் எடையைக் குறைக்க உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்கலாம். சரி, வாருங்கள் அந்த வழிகள் என்னவென்று காண்போம்.

முட்டைக்கோஸ்
உங்களுக்கு இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? ஒரு நாள் கூட இனிப்பு சாப்பிடாமல் இருக்க முடியவில்லையா? அப்படியானால் உங்கள் உடலினுள் செல்லும் சர்க்கரையானது கொழுப்புக்களாக மாறி, உடலில் தேங்கி உடல் எடையை அதிகரிக்கிறது என்று அர்த்தம். இனிப்பு பலகாரங்களின் மீதுள்ள ஆவலைக் குறைக்க நினைத்தால், முட்டைக்கோஸை அதிகம் சாப்பிடுங்கள். இந்த காய்கறியில் உள்ள டார்டாரிக் அமிலம், உடலின் தொடை மற்றும் வயிற்றுப் பகுதியில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவியாக இருக்கும்.

கேரட்
கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் கரையக்கூடிய நார்ச்சத்தான கால்சியம் பெக்டேட் உள்ளது. இந்த நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவிப் புரியும். ஆகவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸைக் குடித்து வாருங்கள். இதனால் வயிறு நிரம்புவதோடு, உடல் எடை அதிகரிக்காமல் குறைய ஆரம்பிக்கும்.

க்ரான்பெர்ரி
க்ரான்பெர்ரி பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ-ராடிக்கல்களின் உருவாக்கத்தைத் தடுத்து, உடல் எடைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். எனவே உங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், தினமும் க்ரான்பெர்ரி ஜூஸைத் தவறாமல் குடித்து வாருங்கள்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் 90 சதவீத நீர்ச்சத்து உள்ளது மற்றும் இது உடலின் உட்புறம் மற்றும வெளிப்புறத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். இதில் உள்ள நீர்ச்சத்து, கொழுப்புச் செல்களை உடைத்தெறிய உதவும். ஆகவே எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தால், வெள்ளரிக்காயை தினமும் ஒரு பௌல் சாப்பிடுங்கள். இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்கச் செய்வதோடு, உடல் பருமன் அதிகரிக்காமலும் தடுக்கும்.

எலுமிச்சை மற்றும் தேன்
எலுமிச்சை மற்றும் தேன் கலவை உடலில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, உடலின் இதர செயல்பாட்டையும் சிறப்பாக வைத்துக் கொள்ளும். அதற்கு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், 2 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ், 1 சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து கலந்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் விரைவில் உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பீச்
பீச் பழத்தில் கொழுப்பு சுத்தமாக இல்லை. ஆனால் கலோரிகளோ 68 உள்ளது. ஆகவே மதிய வேளையில் முழு சாப்பாடு சாப்பிடுவதற்கு பதிலாக, ஒரு பெரிய பீச் பழத்தை சாப்பிடுங்கள். இது தேவையில்லாத கலோரிகள் உடலில் தேங்கி உடல் பருமனை அதிகரிப்பதைத் தடுத்து, பெருத்த உடலை சுருங்கச் செய்யும்.

தக்காளி
தக்காளி ஒரு சூப்பர் உணவு. இதில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இதில் பல்வேறு நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும் பீட்டா-கரோட்டீன் மற்றும் இதர கரோட்டினாய்டுகள் உள்ளது. முக்கியமாக தக்காளி புற்றுநோய் மற்றும் இதய நோயின் தாக்கத்தைத் தடுப்பதோடு, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் இருக்கச் செய்யும்.

யோகா
யோகா உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல நூற்றாண்டுகளாக மேற்கொண்டு வரும் ஒரு ஆரோக்கியமான பயிற்சியாகும். இத்தகைய யோகா ஒருவரது உடல் எடையைக் குறைக்கவும் உதவிப் புரியும். ஏனெனில் பல யோகாக்கள் மற்றும் அதன் நிலைகள், உடலின் குறிப்பிட்ட பகுதியை இலக்காக கொண்டு, அப்பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். ஆகவே தினமும் யோகா செய்து, உடல் உடலை சிக்கென்று வைத்துக் கொள்ளுங்கள்.

இலந்தைப் பழம்
இலந்தைப் பழத்தின் இலைகளைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் காலையில் குடித்து வந்தால், அது உடல் எடையைக் குறைக்கும். அதற்கு இலந்தைப் பழ இலைகளை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி 30 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

சிறிது உடற்பயிற்சி
உடல் எடையைக் குறைக்க வெறும் உணவுகள் மட்டும் போதாது, உடற்பயிற்சியும் அவசியம். அதுவும் மிகவும் சிம்பிளான உடற்பயிற்சிகளை தினமும் செய்து வந்தாலே, உடல் எடையைக் குறைக்கலாம். உதாரணமாக, நடைப்பயிற்சி, புஷ் அப், ஜாக்கிங் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

க்ரீன் டீ
உடல் எடையைக் குறைக்க உதவும் மற்றொரு ஆரோக்கியமான வழி க்ரீன் டீ குடிப்பது. ஆய்வுகளில் ஒரு நாளைக்கு 3-5 கப் க்ரீன் டீயைக் குடித்தால், பகல் வேளையில் 35 முதல் 43 சதவீதத்திற்கும் அதிகமாக கொழுப்பைக் கரைக்கலாம் என் தெரிய வந்துள்ளது. ஒருவேளை உங்களுக்கு க்ரீன் டீ தயாரித்துக் குடிக்க நேரம் இல்லாவிட்டால், க்ரீன் டீ டயட் மாத்திரையை எடுக்கலாம்.



Click it and Unblock the Notifications