For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிட்டான டாப் 10 ஆப்பிரிக்க அமெரிக்க பிரபலங்கள்!

இங்கு மிகவும் ஃபிட்டான டாப் 10 ஆப்பிரிக்க அமெரிக்க ஆண் பிரபலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

|

Recommended Video

டாப் 10 ஃபிட்டான ஆப்ரிக்க அமெரிக்கன்ஸ்- வீடியோ

ஆண்கள் ஒவ்வொருவருக்குமே நல்ல ஃபிட்டான கட்டுடலுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக இன்று பல ஆண்கள் அன்றாடம் ஜிம் சென்று தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்கிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆணுக்கும் ஃபிட்டான உடலைப் பெற எண்ணம் வரும் போது, அவர்களுக்கு ரோல்மாடலாக ஒருவர் இருப்பர். சிலர் எவ்வளவு வயதானாலும், இன்னும் கச்சிதமான உடலமைப்புடன், இளமையான தோற்றத்தில் காட்சியளிப்பார்கள்.

இதற்கு முக்கிய காரணம் அவர்களது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் தான். முக்கியமாக அவர்களது உடற்பயிற்சி, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது மற்றும் சுறுசுறுப்புடன் தன்னை வைத்துக் கொள்வது போன்றவைகளே, ஒருவரை ஃபிட்டாக வைத்துக் கொள்கிறது. பிரபலங்கள் ஒவ்வொருவருமே தங்களது ரசிகர்களுக்கு, ஒரு நல்ல ரோல்மாடலாக தான் இருக்க நினைப்பர்.

இக்கட்டுரையில் எவ்வளவு வயதானாலும், தங்களை இன்று வரை ஃபிட்டாக வெளிக்காட்டும் சில ஆப்பிரிக்க அமெரிக்க ஆண் பிரபலங்கள் குறித்தும், அவர்கள் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள என்ன செய்து வருகிறார்கள் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா

பராக் ஒபாமாவின் இந்த இளமையான மற்றும் தொப்பையில்லாத தோற்றத்திற்கு காரணம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை தான்.

* கர்ல்ஸ்

* ஷோல்டர் பிரஸ்ஸஸ்

* 10 lbs எடையுள்ள டம்பெல் கொண்டு லஞ்சஸ்

* எலிப்டிகல் மெஷின்

* தினமும் 45 நிமிட உடற்பயிற்சி என வாரத்திற்கு 6 நாள் தவறாமல் மேற்கொள்வது

* த்ரெட்மில் ஓட்டம்

* ரெசிஸ்டென்ஸ் பயிற்சி

* கார்டியோ பயிற்சிகள்

சீன் மைக்கேல் லியோனார்ட் ஆண்டர்சன்

சீன் மைக்கேல் லியோனார்ட் ஆண்டர்சன்

அமெரிக்க பாப் பாடகர் தான் சீன் மைக்கேல் லியோனார்ட் ஆண்டர்சன். இவரை பிக் சீன் என்றும் அழைப்பர். இவர் பல்வேறு பிரபலமான பாப் பாடல்களைப் பாடியுள்ளார். 29 வயதான இவர் கட்டுமஸ்தான உடலைப் பெற அன்றாடம் என்ன செய்கிறார் தெரியுமா?

* இவருக்கு மிகவும் விருப்பமான உடற்பயிற்சி என்றால், அது குத்துச்சண்டை. இதை இவரது உடற்பயிற்சியாளருடன் சேர்ந்து செய்வாராம்.

* இவர் வெறும் ஆர்கானிக் உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவார்.

* இவர் சிறு வயதில் இருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ ஆரம்பித்துவிட்டாராம். இதற்கு காரணம் இவரது அம்மா இவருக்கு ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவத்தைப் பற்றி நிறைய சொல்லிக் கொடுத்துள்ளாராம்.

டென்சல் வாஷிங்டன்

டென்சல் வாஷிங்டன்

டென்சல் வாஷிங்டன் மிகவும் பிரபலமான அமெரிக்க நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். இவருக்கு தற்போது 63 வயதாகிறது. இவரது ஃபிட்னஸின் ரகசியம் என்ன தெரியுமா?

* குத்துச்சண்டை

* தனக்கென ஒரு உடற்பயிற்சியாளரைத் தேர்ந்தெடுத்து உடற்பயிற்சியை செய்வது

* பெரும்பாலும் பளுத் தூக்கும் பயிற்சியையே செய்வாராம்.

* இவர் எந்த ஒரு உணவையும் தவிர்க்கமாட்டாராம். ஆனால் சாப்பிடும் உணவுகளை அளவாக கட்டுப்பாட்டுடன் தான் சாப்பிடுவாராம்.

ஜேமி பாக்ஸ்

ஜேமி பாக்ஸ்

ஷேமி பாக்ஸ் ஒரு அமெரிக்க நடிகர், பாடகர், தயாரிப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகராவார். இவருக்கு தற்போது 50 வயதாகிறது. இவர் இன்றும் கச்சிதமான உடலமைப்புடன் தான் இருக்கிறார். இதற்கு இவரது பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சிகள் தான் காரணம்.

* இவர் தனக்கென ஒரு உடற்பயிற்சியாளரைக் கொண்டு உடற்பயிற்சியை அன்றாடம் செய்வாராம்.

* 45 நிமிடம் பளுத் தூக்கும் பயிற்சியை செய்வாராம்.

* இவர் கூடைப்பந்து விளையாட்டு விளையாடுவாராம்.

ஜேசன் டெருலோ

ஜேசன் டெருலோ

ஜேசன் ஒரு அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியர் மற்றும் நடன கலைஞர் ஆவார். இவருக்கு தற்போது 28 வயதாகிறது. இவர் நல்ல கட்டுமஸ்தான உடலுடன் இருப்பதற்கு, இவர் மேற்கொண்டு வரும் பயிற்சிகளும், உணவுகளும் தான் காரணம்.

* குழந்தையாக இருக்கும் போது இவர் மிகவும் உடல் பருமனுடன் இருந்தாராம். ஆனால் ஆர்கானிக் உணவுகள் மற்றும் லீன் புரோட்டீன்களான முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட், சிக்கன் சாசேஜ் மற்றும் கோதுமை பிரட் டோஸ்ட் போன்றவற்றை காலை உணவாக சாப்பிட ஆரம்பித்தாராம்.

* இவரது முக்கியமான கார்டியோ பயிற்சி என்றால் அது நடனம் தான்.

* இவரது உடற்பயிற்சியாளர் கெவின் ஹென்டர்சன், தினமும் 2 மணிநேரம் பயிற்சி அளிப்பாராம்.

* இவரது விருப்பமான உடற்பயிற்சிகள் என்றால், அப்சைடு டவுன் புஷ்-அப், ரவுண்ட்ஹவுஸ் புஷ்-அப், அப் ரோல்அவுட்ஸ், ஷோல்டர் பிரஸ் மற்றும் பைசெப் கர்ல்ஸ்.

* ஏதேனும் சுற்றுப்பயணத்தின் போது நிலையான பயிற்சிகளை மேற்கொள்வாராம்.

 ஜே Z

ஜே Z

இவர் ஒரு அமெரிக்க ராப் பாடகர் மற்றும் தொழிலதிபர். இவரது ஆல்பம் எப்போதுமே சூப்பராக இருக்கும். இவருக்கு தற்போது 48 வயதாகிறது. இவரும் ஃபிட்டான ஆப்பிரிக்க அமெரிக்க பிரபலங்களுள் ஒருவராவார்.

* இவர் உடற்பயிற்சியாளரான மார்கோ போர்கஸ் உடன் உடற்பயிற்சி செய்வாராம்.

* அதுவும் முழு உடல் உடற்பயிற்சியை மேற்கொள்வாராம்.

* எப்போதுமே வித்தியாசமாகத் தான் உடற்பயிற்சியை செய்வாராம்.

* ஒவ்வொரு பயிற்சியையும் 3 செட் என ஒவ்வொரு செட்டிற்கும் இடையே 1 நிமிடத்திற்கு மேல் இடைவெளி விடமாட்டாராம்.

* இவர் கார்டியோ, இன்டர்வெல் ட்ரெயினிங், ஆப்ஸ் மற்றும் ஆரோக்கியமான டயட்டில் தான் அதிக கவனத்தை செலுத்துவாராம்.

ஜான் லெஜண்ட்

ஜான் லெஜண்ட்

ஜான் லெஜண்ட் ஒரு அமெரிக்க பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். தற்போது 39 வயதைக் கொண்ட ஜான் இன்னும் இளமையான தோற்றத்துடன், அழகான உடலமைப்புடன் காட்சியளிப்பதற்கு காரணம் அவரது பழக்கவழக்கங்கள் தான்.

* ரன்னிங்

* குத்துச்சண்டை

* பளுத் தூக்கும் பயிற்சி

* ஜம்ப் ரோப்ஸ்

இந்த பயிற்சிகளைத் தான் அன்றாடம் தவறாமல் மேற்கொண்டு வருவாராம். மேலும் இவர் பிரட் மற்றும் சர்க்கரை உணவுகளில் இருந்து விலகி இருப்பாராம். கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளையே உண்பாராம். இவர் பழங்கள், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிடுவாராம். ஆனால் மாட்டிறைச்சியை அதிகம் சாப்பிடமாட்டாராம்.

கெவின் ஹார்ட்

கெவின் ஹார்ட்

இவர் ஒரு அமெரிக்க நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகரும் ஆவார். தற்போது இவருக்கு வயது 38. இவரும் தனது உடலை எப்போதும் நன்கு ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கு சில பழக்கங்களை மேற்கொள்வார்.

* வாரத்திற்கு 5-6 நாட்கள் தவறாமல் உடற்பயிற்சியை செய்வார்.

* கோர் பயிற்சிகள் மற்றும் பளுத் தூக்கும் பயிற்சியை செய்வார்.

* இயற்கையாகவே ஃபிட்டாக காட்சியளிக்க முயற்சிகளை மேற்கொள்வார்.

* இவருக்கு சிக்கன் ரொம்ப பிடிக்குமாம்.

* இவர் என்ன சாப்பிட்டாலும், அதை தனது கடுமையான பயிற்சிகளின் மூலம் கரைத்துவிடுவாராம்.

டைரெஸ் கிப்சன்

டைரெஸ் கிப்சன்

டைரெஸ் கிப்சன் ஒரு அமெரிக்க பாடகர், பாடலாசிரியர், ராப் பாடகர், நடிகர், மாடல், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளைத் தன்னுள் கொண்டவர். ஆப்பிரிக்க அமெரிக்க பிரபலங்களுள் ஒருவரான இவர், தனது உடலமைப்பை சிக்கென்று பராமரித்து வருவதில் உறுதியாக இருப்பார்.

* இவர் தினமும் 5 மைல் நடை அல்லது வாக்கிங் பயிற்சியை செய்வாராம்.

* இவர் எந்த ஒரு பயிற்சியை செய்வதாக இருந்தாலும், அந்த பயிற்சியை முடிக்காமல் வேறு எதையும் செய்யமாட்டார். எந்த ஒரு பயிற்சியையும் உறுதியாக செய்வாராம்.

வில் ஸ்மித்

வில் ஸ்மித்

அமெரிக்க நடிகரான வில் ஸ்மித் பலருக்கும் விருப்பமான ஒரு நடிகரும் கூட. இவர் நடிப்பது மட்டுமின்றி, நல்ல பாடலாசிரியர், தயாரிப்பாளரும் கூட. தற்போது 49 வயதுடைய வில் ஸ்மித், இன்றும் கச்சிதமான உடலமைப்பைத் தான் பராமரித்து வருகிறார். இதற்கு அவரது பழக்கவழக்கங்களே காரணம்.

* வாரத்திற்கு 6 நாட்கள் 5 மைல் ரன்னிங் பயிற்சியை மேற்கொள்வார்.

* வாரத்திற்கு 5 நாட்கள் பளுத் தூக்கும் பயிற்சியை செய்வார்.

* வாரத்திற்கு 2 நாட்கள் குத்துச்சண்டை பயிற்சியை மேற்கொள்வார்.

* தினமும் 6-8 முறை புரோட்டீன் உணவுகளை உண்பார்.

* கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் எடுக்காமல், முடிந்த அளவு தவிர்ப்பார்.

* ஆனால் வாரத்திற்கு ஒரு நாள் உடற்பயிற்சிக்கு விடுப்பு அளித்து, தனக்குப் பிடித்த உணவை சாப்பிடுவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Fittest African American Male Celebrities

Here we listed top 10 fittest african american male celebrities. Take a look...
Story first published: Friday, March 16, 2018, 13:50 [IST]
Desktop Bottom Promotion