7 நாட்கள் இதைத் தொடர்ந்தால்...தொப்பையை கண்டிப்பாக குறைக்கலாம்!

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடை குறித்து கவலைப்படும் நபர்கள் யாவரும் மிகுந்த கவலைப்படும் ஓர் விஷயம் என்றால் தொப்பையாகத்தான் இருக்கும். தொப்பையினால் உடலில் எண்ணற்ற உபாதைகள் ஏற்படுகிறது. சர்க்கரை நோய்,மாரடைப்பு ஆகியவை அவற்றில் முதன்மையானது.

உங்களது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமெனில் அவற்றில் முதன்மையானதாக இருக்கக்கூடிய தொப்பையை குறைக்க வேண்டும். தொப்பையை குறைக்க வேண்டும் என்று சொல்லி குறிப்பிட்ட உணவை அறவே தவிர்ப்பது.

Simple Tips to Reduce Belly Fat Within 7 days

சில வகைகளை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்வதும் ஆபத்தானது. ஆகையால் சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் அதே சமயம் உங்களது தொப்பையும் குறைக்க வேண்டும்.

தொப்பையை குறைக்க உணவு முறையில் மட்டும் மாற்றங்களை கொண்டு வந்தால் போதாது உங்களது வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அப்படி என்ன முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாமதமான நொடிகள் :

தாமதமான நொடிகள் :

உங்களது நாளை எவ்வளவு சீக்கிரம் துவங்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் துவங்குங்கள். காலையில் விழித்த பிறகும், படுக்கையிலையே சோம்பலாக தூங்கிக் கொண்டிருப்பது தான் உங்களது தொப்பையை அதிகரிக்கும் ஓர் செயலாக இருக்கிறது.

பெர்ரீஸ் :

பெர்ரீஸ் :

சர்க்கரை மற்றும் இனிப்புகளுக்கு பதிலாக பெர்ரீ பழங்களை சாப்பிடலாம். இப்படி சர்க்கரையை தவிர்ப்பதாலும் பெர்ரீ பழங்களை எடுப்பதாலும் தொப்பை குறைவதோடு இடுப்புப் பகுதியும் குறைத்திட முடியும்.

எண்ணெய் உணவுகள் :

எண்ணெய் உணவுகள் :

நீங்கள் சாப்பிடும் உணவுகளில் ஹைட்ரோஜெனேடட்டட் ஆயில் பயன்படுத்தி சமைக்கப்பட்டிருந்தால் அவற்றை தயவு செய்து நீங்கள் எடுக்காதீர்கள். இதனை தொடர்ந்து எடுத்தால் உங்கள் உடலில் ட்ரான்ஸ் ஃபேட் அதிகரித்து மாரடைப்பு ஏற்படக்கூடும்.

பிரட் வகைகள் :

பிரட் வகைகள் :

தொப்பையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் தவிர்க்க வேண்டியது பிரட் வகைகளைத் தான். அதாவது எல்லா பேக்கரி ஐயிட்டங்களையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ப்ரீ டயாப்பட்டிக் பிரச்சனைகள் ஏற்பட காரணமாகிடும்.

இனிப்பூட்டிகளுக்கு நோ :

இனிப்பூட்டிகளுக்கு நோ :

சர்க்கரை நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று சொன்னதும், நாம் அன்றாடம் பயன்படுத்துகிற வெள்ளியச் சர்க்கரைக்கு பதிலாக வேறு சில சுவையூட்டிகளை பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

இனிப்பு என்றால் வெள்ளைச் சர்க்கரை மட்டுமல்ல எல்லாவிதமான இனிப்பூட்டிகளையும் தடை சொல்ல வேண்டும். இனிப்பூட்டிகள் தான் தொப்பைக்கு முக்கிய காரணியாக இருக்கின்றன.

அதோடு இவை நம்முடைய பசியுணர்வை தூண்டும் என்பதால் அடிக்கடி நிறைய உணவுகளை எடுத்துக் கொள்வீர்க்ள். இது உங்கள் தொப்பையை அதிகப்படுத்திடும்.

ஃபைபர் உணவுகள் :

ஃபைபர் உணவுகள் :

உணவு சாப்பிட்டாச்சு சரி.... தொடர்ந்து அது முறையாக செரிக்க வேண்டுமே. ஆம், நாம் சாப்பிடும் உணவு செரித்தால் மட்டுமே நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அத்தனையும் கிடைக்கும்.

அப்படி நீங்கள் சாப்பிட்ட உணவுகள் செரிக்க நீங்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டியது ஃபைபர்.

தண்ணீர் :

தண்ணீர் :

ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் உடல் வறட்சியில்லாமல் இருக்கும் அதோடு உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். அது,மட்டுமன்றி சீரான இடைவேளியில் தண்ணீர் குடிப்பதால் உங்கள் உடலில் வறட்சி ஏற்படாது. இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி கொழுப்பு படியாது.

நட்ஸ் :

நட்ஸ் :

உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் கை வைப்பது உணவில் தான். வகை தொகை இல்லாமல் தாங்கள் சாப்பிடும் உணவைக் குறைத்தால் மட்டும் போதும் எண்று தவறாக நினைத்து மொத்தமாக உணவு வகைகளை கட் செய்வார்கள். இது உங்கள் உடலுக்கு மேலும் தீங்கை ஏற்படுத்துமே ஒழிய தொப்பையை குறைக்காது.

நீங்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டிய நேரத்தில் எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடாமல் நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம். இதில் ஆரோக்கியமான கொழுப்பு வகைகளே இருக்கின்றன.

மீன் :

மீன் :

மற்ற அசைவ உணவுகளை விட மீன் நீங்கள் தாரளமாக சாப்பிடலாம். அதிலும் சாலமன் வகை மீனில் ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாததாகும்.

இந்த மீன் சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசியெடுக்காது.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு :

கொழுப்பை கரைக்க, அதுவும் குறிப்பாக வயிற்றைச் சூற்றியிருக்கும் கொழுப்பை கரைக்க நீங்கள் அவசியம் சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் இரண்டு ஸ்பூன் எலும்மிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.சுவையூட்டிகளாக தேன், இனிப்பு எதுவும் சேர்த்த்துக்கொள்ளக்கூடாது, சூடான நீரில் தான் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும்.

பூண்டு :

பூண்டு :

நல்ல கொழுப்பினை அதிகரித்து இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் பூண்டு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. தினந்தோறும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைப்பில் மாற்றம் தெரியும்.

பூண்டினை தேனில் ஊற வைத்துச் சாப்பிடலாம். மாறாக எக்காரணத்தைக் கொண்டும் பூண்டை பச்சையாக சாப்பிட்டுவிடாதீர்கள்.அதன் காரம் உங்கள் குடல் மற்றும் வயிற்றுப்பகுதியை புண்ணாக்கிவிடும்.

உப்பு :

உப்பு :

உப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இன்றய சமையலில் இருந்தாலும் அதை அளவோடுதான் சேர்க்க வேண்டும். அதிகமான உப்பு உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேற்றத்தைத் தடுப்பதால் உடலில் உள்ள கழிவுகள் சேர்ந்து உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. முடிந்த வரையிலும் இயற்கையாகக் கிடைக்கும் கல் உப்பினை உபயோகிப்பது மிகவும் நன்று.

சிறுதானியங்கள் :

சிறுதானியங்கள் :

சிறுதானியங்கள் நம்க்குக் கிடைத்தம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். தினமும் காலையிலோ அல்லது மதியமோ சிறுதானியங்களில் ஏதாவது ஒன்றை உண்டு வந்தால் அவற்றில் உள்ள நார்ச்சத்து கொழுப்பைக் குறைத்து தொப்பை வளர்வதைத் தடுக்கும். முக்கியமாகக் குதிரைவாலி மற்றும் கேழ்வரகு போன்றவை பசி ஏற்படுவதைக் கட்டுபடுத்தி மிக அதிகமான உணவு உட்செல்வதைத் தடுக்கிறது.

தூக்கம் :

தூக்கம் :

குறைந்தது 7 முதல் 8 மணிவரையான நல்ல‌ தூக்கம் தேவை. உடல் உழைப்பைத் தவிர மூளைக்குக் கொடுக்கும் வேலைகளும் உடலுக்குச் சோர்வைத் தரும்.

அதனால் ஒரு நாளில் வேலையே செய்யாமல் சோம்பலாக இருந்தாலும் நல்ல தூக்கம் தேவை. தூக்கமே இல்லாமல் இருப்பது உடல் எடை அதிகரிப்பதை அதிகரிக்கும்.

ஆனால் சரியான நேரத்தில் தூங்கி காலையில் விரைவில் எழுந்தால் நமது உடலில் Metabolism பாதிக்கப்படாமல் மென்மேலும் வளர்ந்து தொப்பை போடுவதைத் தடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple Tips to Reduce Belly Fat Within 7 days

Simple Tips to Reduce Belly Fat Within 7 days
Story first published: Tuesday, January 2, 2018, 9:30 [IST]