For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரஞ்சு பழ தோலை மட்டுமே வெச்சு பானை வயிறையும் எப்படி கரைக்கலாம்னு பாருங்க...

ஆரஞ்சின் தோலை மட்டுமே கொண்டே உடலின் எடையை எப்படி குறைக்க இயலும் என்பதை காண்போம்.

|

எடையைக் குறைக்க வேண்டுமா இதோ ஒரு மாபெரும் மந்திர யுக்தி இருக்கிறது. பழங்கள் தேவலோக தேவாமிர்தத்தின் புலோகச் சிதறல். கனிகளைக் காலம் முழுவதும் உண்பது, தேவலோக அமுதத்தை அருந்துவற்கு ஒப்பானதாகும். எந்த சுவையான கனியானாலும் அதை காக்க கடுமையான அல்லது மென்மையான தோல்கள் அக்கனியைக் சுற்றி இருக்கும். இத்தகைய தோல்கள் பழங்களின் மென்மையான உட்புறத்தைக் காத்து நிற்கும்.

கனிகளில் அதீத சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதே நேரத்தில் சில கனிகளில் படர்ந்திருக்கும் தோல்களில் கனியை விட அதிக அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்திருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ்சுப் பழங்கள்

ஆரஞ்சுப் பழங்கள்

உலகின் பல பகுதிகளில் பலவிதமான கனிகள் கிடைக்கின்றன. சில பழங்கள் பரவலாக பல இடங்களில் கிடைக்கும். சில கனிகள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன.

அவ்வாறு உலகில் பல நாடுகளில், பல பகுதிகளில் பரவலாக கிடைக்கும் பழங்களில் ஒன்று ஆரஞ்சு பழம். இதில் பலவகைகள் இருக்கின்றன. ஆஸ்திரேலிய ஆரஞ்சுகள் ஒருவகை சீனத்து ஆரஞ்சுகள் வேறுவகை. இந்திய ஆரஞ்சுகளோ பல வகை. ஒவ்வொரு வகைகளுக்கும் சுவையில் வேறுபாடு இருக்கும். ஆனாலும் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் பழமாக விளங்குகிறது.

இத்தகைய அற்புத பழத்தில் வைட்டமின்-சி சத்து நிரம்பியுள்ளது. அதைத் தவிர இயற்கை சர்க்கரையும் நிரம்பியுள்ளது. ஆரஞ்சின் தோலில் பழத்தில் உள்ளாதை விட அதிகளவில் பல சத்துக்கள் இருக்கின்றன.

ஆரஞ்சின் தோலை மட்டுமே கொண்டே உடலின் எடையை எப்படி குறைக்க இயலும் என்பதை காண்போம்.

எடை குறைய

எடை குறைய

ஆரஞ்சு தோல்களில் அபரிமிதமான நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. இந்த நார்ச்சத்துக்கள் உடல் எடையை குறைப்பதற்கான மிக சரியான வரப்பிரசாதமாக விளங்குகிறது. இதனை உட்கொண்டால் வயிற்றில் வெகு நேரம் இருந்து பசிக்காமல் செய்கிறது. இதனால் உடல் எடை குறைவது உறுதி.

உடல் வீக்கங்கள்/ஓவ்வாமை

உடல் வீக்கங்கள்/ஓவ்வாமை

ஆரஞ்சு தோல்களில் உள்ள சில வேதிப்பொருள், நமது உடலில் ஒவ்வாமை உண்டாவதை தடுக்கிறது. உடலில் ஒவ்வாமை உண்டாக்கும் ஹிஸ்டமைன் என்ற வேதிப்பொருளின் சுரப்பை கட்டுப்படுத்தி ஒவ்வாமையைத் தடுக்கிறது.

உடல் கொழுப்பு

உடல் கொழுப்பு

ஆரஞ்சு தோல்களில் அபரிமிதமான வைட்டமின் C யும் மற்ற சில வேதிப்பொருள்களும், நமது உடலில் உள்ள கொழுப்பை எரித்து கரைக்க பெருமளவில் உதவுகின்றன. இன்னும் பெயரிடப் படாத, பகுத்தறிந்து கண்டுபிடிக்கப் படாத சில வேதிப்பொருள் உடல் உறுப்புக்களில் உள்ள அதீத கொழுப்பை குறைத்து உடல் எடையை சரி செய்ய உதவுவதாக ஆராய்ச்சியில் நிருபணமாகியிருக்கிறது.

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு

ரத்த சர்க்கரை அளவை மிகவும் சீராக வைத்திருக்க ஆரஞ்சுப் பழம் இருக்கும். ஆரஞ்சு தோல்களில் சில வேதிப் பொருள்களும், ஒரு வகை என்ஜைமான "பெக்டின்" இரத்ததில் இருக்கும் சர்க்கரை அளவை திடுமென்று உயராமலும், திடுமென்று குறையாமலும் சமன் செய்து காக்கின்றது. இவ்வாறு சர்க்கரை அளவை சமமாக வைத்திருப்பதால், மயக்கம் வராமலும், வேறு உபதைகள் அண்டாமலும் நமது உடல் காக்கப்படுகின்றது. மேலே கண்ட மந்திர பலன்களை நாம் பெற, ஆரஞ்சு தோல்களில் இருக்கும் சத்துக்களை நாம் உட்கொள்ள வேண்டும். ஆரஞ்சு தோல்களின் சத்துக்களை இரண்டு வகைகளில் நாம் பெறலாம்.

ஆரஞ்சு தோல் தேநீர்

ஆரஞ்சு தோல் தேநீர்

செய்முறை

இந்த முறையானது ஆரஞ்சு தோலை காய வைத்து பயன்படுத்தும் முறையாகும்.

  • மூன்று ஆரஞ்சு பழங்களை எடுத்துக்கொள்ளவும்.
  • பழங்கள் ஒவ்வொன்றையும் இரண்டிரண்டு பாதிகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • ஜுசரின் உதவி கொண்டு பழங்களை நன்றாக பிழிந்து சாறை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். சாறு நமக்குத் தேவையில்லை.
  • பிழிந்த பழங்கள் ஒவ்வொன்றையும் மேலும் இரண்டு துண்டுகளாக குறுக்காக வெட்டிக் கொள்ளவும்.
  • அதிலிருக்கும் சுளைகளின் சக்கைகளை முழுவதும் களைந்து எடுத்து விடவும்.
  • இந்த தோல்களை நான்கு முதல் ஐந்து நாட்கள் நிழலில் காற்றில் உலர வைக்கவும். உடையும் பதத்திற்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • தோல்கள் நன்கு காய்ந்த உடன் அதனை மிக்சி அல்லது பிளண்டர் ஏதேனும் ஒன்றில் இட்டு மிக மிக நைசான பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த பொடியை நன்றாக சலித்து எடுத்து காற்று புகாத கண்டெய்னரில் இட்டு பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும்.
  • பயன்படுத்தும் முறை

    பயன்படுத்தும் முறை

    மேல் கண்ட முறையில் நாம் தயாரித்த பொடியை கொதிக்கும் நீரில் இட்டு பருக வேண்டும்.

    250 மில்லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

    கொதிக்கும் தண்ணீரில் ஆரஞ்சு பொடியை ஒரு தேக்கரண்டி இட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

    பின்னர் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் ஆற வைத்து இந்த பாணத்தை அருந்தலாம்.

    ஆரஞ்சு தோல் பானம்

    ஆரஞ்சு தோல் பானம்

    செய்முறை-2

    இந்த முறையானது ஆரஞ்சு தோலை காய வைக்காமல் அப்படியே பயன்படுத்தும் முறையாகும்.

    • இரண்டு ஆரஞ்சுகளின் தோல்களை முன்பு குறிப்பிட்ட முறையிலோ அல்லது உரிந்தோ எடுத்துக் கொள்ள வேண்டும்.
    • நானூறு மில்லி லிட்டர் தண்ணீரில் இதனை முக்கி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
    • பத்து நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க வைத்து. அதனை ஐந்து நிமிடங்கள் ஆற விடவேண்டும்.
    • ஆறிய பாணத்தை வடிகட்டி அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருக வேண்டும்.
    • ஆரஞ்சு பழங்களை தேர்ந்தெடுக்கும் முறை

      ஆரஞ்சு பழங்களை தேர்ந்தெடுக்கும் முறை

      ஆரஞ்சு பழங்களை தேர்ந்தெடுக்கும் பொழுது இயற்கை முறையில் பெறப்பட்ட ஆர்க்கானிக் வகை பழங்களை உபயோகிக்கவும். சாதாரண ஆரஞ்சுகளில் பூச்சி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்கும். எனவே அவற்றை உபயோகித்தால் ஒன்றுக்கு பல முறை சுத்தப்படுத்திய பின்னரே உபயோகிக்க வேண்டும். குறிப்பாக உப்பு நீரிலோ அல்லது சமையல் சோட கலந்த நீரிலோ சுத்தப்படுத்தினால் எளிதில் சுத்தமாகும்.

      ஆரஞ்சு பழ தோலை மேலே கண்ட இரு வகைகளில் ஏதோ ஒன்றை பயன்படுத்தி உட்கொள்ளவேண்டும். இந்த பானத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை பருக வேண்டும்.

      ஆரஞ்சு தோல்களை இவ்வாறு தினமும் இரண்டு முறைகள் பயன்படுத்தும்போது, உடல் எடை குறைந்து மிக அழகான உடல் வனப்பைப் பெறுவது தின்னம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Orange Peel For Weight Loss: Here's Why You Can Use Orange Rind To Burn Fat

Benefits of the peels of the fruit. Did you know that orange rind may help you lose weight?
Story first published: Sunday, July 29, 2018, 12:33 [IST]
Desktop Bottom Promotion