Latest Updates
-
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம்
தல தோனி செய்யும் இந்த விஷயங்கள்தான் அவரை இந்த வயசிலும் சுறுசுறுப்பாக வைக்க செய்கிறது...
தோனியின் விளையாட்டு திறன், ஸ்டைல், அணுகுமுறை, இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, மறுபுறம் அவரின் கட்டுமஸ்தான உடல் அமைப்பு அவரின் ரசிகர்கள் கூட்டத்திற்கு இன்னொரு காரணமாக இருக்கிறது.
பலருக்கும் கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடித்தமான ஒன்றே. அதன்மீது உள்ள ஆர்வத்தில் கிரிக்கெட் பார்ப்பவர்களை விட சில முக்கிய விளையாட்டு வீரர்களின் மேல் உள்ள அளவற்ற பிரியமே அவர்களுக்காக கிரிக்கெட்டை பார்க்க வைக்கிறது. இத்தகைய சிறப்புக்குரிய ஒருவர்தான் மகேந்திர சிங் தோனியும்.

அவரின் விளையாட்டு திறன் பலரை கவர்ந்து விட்ட காரணத்தாலையே பலர் அவரின் விளையாட்டை பார்க்க வரிசை கட்டி இன்றளவும் நின்று கொண்டிருக்கின்றனர். அவரின் விளையாட்டு திறன், ஸ்டைல், அணுகுமுறை, இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, மறுபுறம் அவரின் கட்டுமஸ்தான உடல் அமைப்பு அவரின் ரசிகர்கள் கூட்டத்திற்கு இன்னொரு காரணமாக இருக்கிறது. அப்படி என்னதான் தோனி தன் உடலை கச்சிதமாக வைக்க பயன்படுத்துகிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமா..? இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்றும் இளமையே :-
ஒரு விளையாட்டு வீரரின் வெற்றி அவரின் பயிற்சியை காட்டிலும் அவரின் உணவு முறையையே அதிகம் சார்ந்துள்ளது. ஏனெனில் நல்ல உணவு முறைதான் ஆரோக்கியமான உடலை தந்து சீரான பயிற்சிக்கு வழி வகுக்கும். தோனி அவர்களும் அருமையான உணவு பழக்கத்தை பின்பற்றுவதாலேயே பல வெற்றிகளை தன் வசப்படுத்த உறுதுணையாக இருக்கிறது. இவரின் உணவு முறை மிகவும் வித்தியாசமானதே. அதனால்தான் எப்போதும் இளமையாகவே இவர் இருக்கிறார். மேலும் இந்திய உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுவாராம்.

காலை - மதியம் :-
காலை - தினமும் காலையில் பழ ஜூஸ் குடிப்பது இவரின் வழக்கமாம். மேலும் பாதாம்,பிஸ்தா போன்றவற்றையும் காலை வேளை பயிற்சியின்போது சாப்பிடுவாராம். முக்கியமாக தினமும் 1 கிளாஸ் பாலை காலையில் குடிக்கும் பழக்கம் கொண்டவர்.
மதியம் - மதிய வேளையில் இவருக்கு மிக பிடித்தமான உணவு "பட்டர் சிக்கன்". இது உடலின் ஊட்டத்தை அதிகரிக்கும். அத்துடன் விளையாட்டு வீரர்களுக்கு அதிகம் தேவைப்படும் புரதம் இதில் மிகுதியாக உள்ளது. மேலும், சப்பாத்தியுடன் பருப்பு குழம்பு அல்லது வெஜ் சாலட்ஸ் சாப்பிடுவதும் இவரின் வழக்கமாம்.

சாயுங்காலம் - இரவு :-
சாயுங்காலம் - யோகர்ட்டை சாயுங்கால வேளையில் எடுத்து கொள்வார். அத்துடன் சிக்கன் சாண்ட்விஜ் போன்றவற்றை ஸ்னாக் போல சாப்பிடுவார். எப்போதுமே இந்த வேளையில் சிறிய அளவே உணவை எடுத்து கொள்வாராம்.
இரவு உணவு - 2 அல்லது 3 சப்பாத்திகளையே இரவில் சாப்பிடுவார். மேலும் வெஜ் சாலட்ஸ் மற்றும் பழங்களை இரவில் அதிகம் விரும்பி உண்பாராம்.

பாலே எனது ரகசியம்..!
தினமும் பால் அதிகமாக உணவில் எடுத்து கொள்ளும் பழக்கம் உள்ளவர். ஒரு முறை கிரிக்கெட் சந்திப்பின் போது அவரின் முடி நீண்டு வளர்ந்திருந்தது. அப்போது அதனை பார்த்து வியந்த அனைவரும் 4 லிட்டர் பாலை தினமும் தோனி குடிப்பார் என வதந்தி பரப்பினார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அவர் தினமும் 1 லிட்டர் பால் மட்டும்தான் குடிப்பர் என்பதே. இவர் உணவு பழக்கத்தில் அதிகம் பால் மற்றும் யோகர்டை சேர்த்து கொள்ள காரணம் இதில் எண்ணற்ற கால்சியம் இருப்பதாலையே. கால்சியம் எலும்புகளுக்கு அதிக பலத்தை தந்து நல்ல எலும்பு பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும். இதுவே அவரின் துடிப்பான விளையாட்டுக்கு காரணம்.

தினமும் விளையாட்டு பயிற்சி :-
கிரிக்கெட் அவரின் பிரதான விளையாட்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதை தவிர்த்து வேறு சில விளையாட்டிலும் அவர் அதிக ஆர்வம் கொண்டவர். கால்பந்து மற்றும் பூப்பந்து விளையாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். ஏனெனில் இந்த விளையாட்டுகள் ஒருவரின் பார்வை கூர்மையையையும், புத்தி கூர்மையையும் அதிகரிக்கும். மேலும் உடல் தசைகளை வலு பெற உதவும். எனவே இந்த 2 விளையாட்டையும் தினப்பயிற்சியின் போது அவர் விளையாடுவார்.

கொழுப்பு உள்ள உணவுகள் :-
இன்று நம்மில் பலரும் உடல் பருமனால் பாதிக்கப்பட முக்கிய காரணம் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை உண்பதாலையே. ஆனால் தோனி அவர்கள் எப்போதும் கொழுப்புகள் உள்ள உணவுகளை தவிர்ப்பாராம். உடலில் கொழுப்பின் அளவை சீரான முறையில் வைக்க கொழுப்பற்ற உணவு முறை பயன்படுகிறது. மேலும் உடலின் கொழுக்களை கரைக்க நிறைய பயிற்சிகளை மேற்கொள்வார்.

புரத பானங்கள் :-
விளையாட்டின் போதும் எந்தவித குளிர்பானங்களையும் குடிக்க விரும்பமாட்டார். ஏனெனில் அது உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தும். அதிக புரதம் உள்ள இயற்கை பானங்களையே குடிப்பாராம். புரசத்து விளையாட்டு வீர்ரகளுக்கு அடிப்படையாக தேவைப்படக்கூடிய முக்கியமான ஒன்று.

தோனி தவிர்க்கும் பழக்க வழக்கங்கள் :-
- கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அதிகம் தவிர்த்து விடுவார். ஏனெனில் இது ஒருவரின் உடல் நலத்தை கெடுத்து விடும்.
- எந்தவித குளிர்பானங்களையும் குடிக்க மாட்டார். எப்போதும் பழ ஜுஸையும், புரத பானங்களையும் அருந்துவார்.
- உணவுகளை காலம்கடந்து சாப்பிடுவதை விரும்பமாட்டாராம்.
- அதிகாலை பயிற்சியை தினமும் பின்பற்றுவார். இதனை எப்போதும் அவர் தவிர்க்க மாட்டாராம்.
இந்த அருமையான உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகள்தான் அவரின் வெற்றியின் தனிப்பெரும் ரசியம் என்றே அவர் பல பேட்டிகளில் கூறி இருக்கின்றார். மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.



Click it and Unblock the Notifications











