For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட காலம் வாழ உதவும் DASH டயட் பற்றி தெரியாத தகவல்கள்

DASH டயட் என்பது உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டின் அளவை குறைத்து அதற்கு மாற்றாக பழங்கள், காய்கறிகள், புரோட்டின் உணவுகள், நட்ஸ், முழு தானியங்கள் மற்றும் இதயத்திற்கு ஆரோக்கியமான அமிலங்களை எடுத்துக்கொள்வது

|

ஒல்லியான உடலமைப்பை பெற உலகம் முழுவதும் பல முறைகள் பின்பற்றி வருகின்றன. இதில் பெரும்பாலான முறைகள் தவறான முறைகளாகவே உள்ளது. ஆனால் சில முறைகள் சிறப்பான பயனை அளிக்கக்கூடியது. அதில் ஒன்றுதான் DASH டயட். இந்த டயட் பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

Health benefits of DASH diet

DASH(Dietary Approaches to Stop Hypertension) என்பது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு பயனுள்ள டயட் முறையாகும். இதன்படி நீங்கள் இந்த உணவுமுறையை பின்பற்றும்போது உங்களுடைய இரத்த அழுத்தமும், எடையும் விரைவில் கட்டுப்படுத்தப்படும். இந்த பதிவில் DASH டயட்டின் பயன்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
DASH டயட்

DASH டயட்

DASH டயட் என்பது உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டின் அளவை குறைத்து அதற்கு மாற்றாக பழங்கள், காய்கறிகள், புரோட்டின் உணவுகள், நட்ஸ், முழு தானியங்கள் மற்றும் இதயத்திற்கு ஆரோக்கியமான அமிலங்களை எடுத்துக்கொள்வது போன்ற பொருட்களை எடுத்துக்கொள்வதாகும். இந்த உணவு முறையில் சோடியம், நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போன்ற பல சத்துக்களை உள்ளடக்கியது. எடை குறைப்பு மட்டுமின்றி இந்த DASH டயட் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

இந்த DASH டயட்டின் மிகமுக்கியமான பயன் என்னவெனில் இரத்த அழுத்தத்தை குறைப்பதாகும், இது இந்த டயட்டின் பெயரிலேயே உள்ளது. இந்த டயட்டை பின்பற்றும்போது நீங்கள் சாப்பிடும் உப்பின் அளவு குறையும். இந்த டயட் உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைக்கிறது, மேலும் ஆர்த்ரோகுளோரோசிஸ் என்னும் குறைபாடு ஏற்படுவதையும் குறைக்கிறது. இதனால் உங்கள் இதயம் பாதுகாக்கப்படும்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

இந்த டயட்டின் முக்கிய எண்ணம் எடை குறைப்பு இல்லை என்றாலும் இதன் மூலம் நீங்கள் அதனையும் பெறலாம். ஏனெனில் இதன் மூலம் இது உணவில் உள்ள கார்போஹைட்ரேட் அளவை குறைப்பதன் மூலம் உடலுக்கு குறைவான கலோரிகளை வழங்குகிறது, இதனால் சர்க்கரை நோய் குறைக்கப்படுகிறது. காய்கறிகள், பழங்கள், புரோட்டின் உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களின் உடல் பருமனை குறைக்கும்.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

உங்கள் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிப்பது உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இரத்த நாளங்கள் மற்றும் இதய அமைப்பின் தமனிகள் மீது அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம், உயர் இரத்த அழுத்தம் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு உங்கள் வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். இந்த டயட் முறையில் உள்ள அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் சமநிலையான கொழுப்பு உள்ள உணவுகள் உங்கள் இதய ஆரோக்கியம் மற்றும் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

MOST READ:கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகை வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்?

ஆஸ்டியோபோரோசிஸை தடுக்கிறது

ஆஸ்டியோபோரோசிஸை தடுக்கிறது

DASH டயட்டின் கலவையில் இருக்கும் அதிகளவு கால்சியம், புரோட்டின், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் ஆஸ்டியோபோரோசிஸை தடுக்க அவசியமானது. எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் பால், லீன் புரோட்டின், தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கியமான ஊட்டச்சத்துக்களாகும். உங்கள் எலும்புகளை வலுப்படுத்த விரும்பினால் அதற்கு DASH டயட் சிறந்த தேர்வாகும்.

சிறுநீரக ஆரோக்கியம்

சிறுநீரக ஆரோக்கியம்

இந்த DASH டயட் சிறுநீரக கற்களுடன் நேரடி தொடர்புடையது. இது மிகவும் வலியையும், உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதிப்பதாகவும் இருக்கும். இந்த டயட் சிறுநீரக கற்களை உருவாக்கும் அதிகப்படியான தாதுக்களை குறைக்கக்கூடும். அதிகளவு சோடியம் எடுத்துக்கொள்வது கூட உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கும், இதனால் உடலில் நீர்சத்து குறைவதால் சிறுநீரகம் அதிகம் வேலை செய்ய நேரிடும். எனவே உங்கள் DASH டயட் உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கும்.

புற்றுநோயை தடுக்கும்

புற்றுநோயை தடுக்கும்

DASH டயட்டினால் கிடைக்கும் பல பயன்களில் முக்கியமான ஒன்று சில புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாகும். பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை எடுத்துக்கொள்ளும்போது அதில் அதிகளவு உள்ள நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன் செல்கள் சிதைவடைவதையும் தடுக்கிறது. இதனால் புற்றுநோய் செல்கள் உடலில் பரவுவது தடுக்கப்படுகிறது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

DASH டயட் உங்கள் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் உணவுகளை குறைப்பதன் விளைவு உங்கள் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவதாகும். DASH டயட்டை பின்பற்றும்போது அது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்கும். உங்கள் உடல் எடை அதிகரிப்பு, இதய ஆரோக்கியம் என அனைத்து பிரச்சினைகளுக்கும் சர்க்கரை நோயே முக்கிய காரணமாகும். DASH இந்த பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

MOST READ:இந்த 5 ராசிகளில் பிறந்த ஏதேனும் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits of DASH diet

Some of the most important health benefits of the DASH diet include its ability to lower blood pressure, aid in weight loss efforts, boost heart health, prevent certain cancers.
Story first published: Saturday, November 10, 2018, 16:50 [IST]
Desktop Bottom Promotion