Latest Updates
-
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது!
2 முறை காலை உணவை உட்கொண்டால் உடல் எடை குறையும் என்பது தெரியுமா?
காலை உணவு என்பது ஒரு நாளில் மிகவும் முக்கியமான உணவாகும். காலை வேளையில் உண்ணும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தால் தான் உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது உண்மையல்ல. ஊட்டச்சத்து இதழ் ஒன்றில் வெளிவந்த ஆய்வில், காலை வேளையில் அதிக அளவிலும், மதியம் குறைவாகவும், இரவு நேரத்தில் இன்னும் குறைவான அளவிலும் உணவை உட்கொண்டால் உடல் எடையைக் குறைக்கலாம் என தெரிய வந்துள்ளது. அதே சமயம் காலை உணவைத் தவிர்ப்பவர்களை விட, காலை உணவை தவறாமல் உட்கொண்டு வருபவர்களுக்கு இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளின் அபாயம் குறைவாக இருக்குமாம்.
இது ஏன் என்று நீங்கள் கேட்கலாம்? மருத்துவர்களுள் சிலர் ஒருவரது செரிமான மண்டலமானது காலை வேளையில் சிறப்பாக செயல்படுவதாக நம்புகின்றனர். நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின் படி, இரவு நேரத்தில் நமது உடலானது அதிகளவு கொழுப்புக்களைத் தேக்கும் என்றும், இதற்கு காரணமாக இரவு நேரத்தில் நமது உடலானது போதுமான அளவு இன்சுலினை சுரக்காமல் இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்திருப்பது தான் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனராம்.
ஆகவே கார்போட்ரேட் நிறைந்த உணவுகளை மதியம் அல்லது இரவு நேரத்தில் உண்பதற்கு பதிலாக, பகல் வேளையில் பல முறை சிறிய அளவிலான உணவுகளை உட்கொண்டு வாருங்கள். இதனால் நாள் முழுவதும் வயிறு நிரம்பியிருக்கும் உணர்வைப் பெறுவதோடு, உடலால் போதுமான அளவு கலோரிகளை எரிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த கட்டுரையில் உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புதமான திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால், காலையில் ஒருமுறை அதிக அளவிலான காலை உணவை உண்பதற்கு பதிலாக, இரண்டு சிறிய அளவிலான காலை உணவை எடுத்தால், விரைவில் உடல் எடையைக் குறைக்கவும் முடியும், பசியுணர்வும் கட்டுப்பட்டு, உடலின் ஆற்றலும் சிறப்பாக இருக்கும்.

காலை உணவு #1
முதல் முறை காலை உணவின் போது புரோட்டீன் நிறைந்த உணவுகளான தயிர், முழு தானியங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். அதுவும் பால் மற்றும் இதர பால் பொருட்களில் உள்ள புரோட்டீன் தசைகளில் புரோட்டீன் உற்பத்தியை அதிகரிக்கும். இதுவும் உடற்பயிற்சிக்குப் பின் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, கொழுப்புக்களைக் குறைக்கவும் உதவும்.
நீங்கள் பொதுவாக காலை உணவைத் தவிர்ப்பவராக இருந்தால், திடீரென்று காலை உணவை உண்பதற்கு சிரமமாகத் தான் இருக்கும். இந்த சிரமத்தைத் தவிர்க்க ஒரு டம்ளர் பால் அல்லது முழு கோதுமை பிரட் டோஸ்ட்டில் ஒரு துண்டு சீஸ் வைத்து சாப்பிடுங்கள். இதனால் உங்களது நாள் ஆரோக்கியமானதாக இருக்கும். ஒரு வேளை நீங்கள் ஆரோக்கியமான காலை உணவைத் தேர்ந்தெடுத்து உண்பவராயின், சிறிது வால் நட்ஸ் அல்லது ஆளி விதையை ஓட்ஸ், தயிர் மற்றும் ப்ளூபெர்ரியுடன் சேர்த்து ஒரு ஷேக் தயாரித்துக் குடிக்கலாம்.

காலை உணவு #2
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் அடிக்கடி சாப்பிட அச்சம் கொள்வார்கள். எங்கு நாம் கலோரிகளை அதிகளவில் எடுக்கிறோமோ என்ற ஒரு எண்ணத்திலேயே இருப்பார்கள். உண்மையில் காலை உணவின் போது ஒரே வேளையில் வயிறு நிறைய உண்பதற்கு பதிலாக, காலை உணவை இரண்டாக பிரித்து இரண்டு முறை உண்பது என்பது மிகவும் சிறப்பான வழி. இதனால் பசியுணர்வு கட்டுப்படுவதோடு, கண்ட உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்து தேவையில்லாமல் உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும்.
எனவே இரண்டாவது முறை காலை உணவை உண்ணும் போது, ஒரு துண்டு பிரட் டோஸ்ட்டின் மீது சீஸ் வைத்து உண்பதோடு, ஒரு சிறிய கப் தயிர் மற்றும் பழத்தை சாப்பிடுங்கள்.

மதிய உணவு
மதிய உணவின் போது காய்கறிகள், பீன்ஸ், பழங்கள், நட்ஸ் மற்றும் முழு தானியங்களை சாப்பிடலாம். அதுவும் சூப் மற்றும் சாலட் வடிவில் எடுப்பது மிகச்சிறந்த வழி. லூசியானா மாநில பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தினமும் ஒரு முறை சாலட்டை சாப்பிடுபவர்களுக்கு, ஒரு நாளைக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரு ஆரோக்கியமான டயட் என்பது நல்ல வண்ணமயமானதாக இருக்க வேண்டும். அதாவது பல வண்ண காய்கறிகள் நிறைந்திருக்க வேண்டும். உதாரணமாக ஆரஞ்சு நிற கேரட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முழுமையாக நிறைந்துள்ளது மற்றும் மஞ்சள் நிற குடைமிளகாயில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது.

இரவு உணவு
இரவு நேரத்தில் கீரைகள் மற்றும் காய்கறிகள், தோல் நீக்கப்பட்ட இறைச்சிகள், மீன், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் உண்பது நல்லது. சிம்பிளான மற்றும் சுவையான உணவு என்பது கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் நிறைந்திருக்க வேண்டும். இதற்கு இறைச்சிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கபாப் மிகச்சிறந்த உதாரணமாகும். முக்கியமாக எப்போதும் உண்ணும் உணவில் அளவில் கவனமாக இருக்க வேண்டும். பென் மாநில ஆய்வில், கலோரி குறைவான சாலட்டை ஒருவர் உணவு உண்பதற்கு முன் உட்கொண்டால், உண்ணும் உணவின் அளவு 12 சதவீதம் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்நாக்ஸ்
ஸ்நாக்ஸ் வேளையில் தயிர், பெர்ரிப் பழங்கள், வால்நட்ஸ், சிவப்பு குடைமிளகாயுடன் காட்டேஜ் சீஸ், பாலுடனான முழு தானிய செரில்கள், ஆப்பிள், சீஸ் போன்றவற்றை சாப்பிடலாம். டயட்டில் இருக்கும் போது உங்களுக்கு உணவு இடைவெளிகளுக்கு இடையே பசி எடுத்தால், ஆரோக்கியமான ஸ்நாக்ஸை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் பசியுணர்வைக் கட்டுப்படுத்தலாம்.
டயட்டில் இருந்தால் ஸ்நாக்ஸ் சாப்பிடக்கூடாது என்று பல தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் பசி எடுத்தால், ஸ்நாக்ஸாக ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உண்பதால் எவ்வித கேடும் ஏற்படாது. ஒருவர் பசியுடனேயே நிறைய நேரம் இருந்தால், அவர்கள் உணவு உண்ணும் போது கட்டுப்பாடு இல்லாமல் அதிகமான அளவில் உணவை உண்ண நேரிடும். முக்கியமாக பசி எடுக்கும் போது ஸ்நாக்ஸ் நேரத்தில் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஜங்க் மற்றும் நொறுக்குத்தீனிகளை வாங்கி மறந்தும் சாப்பிட்டு விட வேண்டாம்.



Click it and Unblock the Notifications











