உடற்பயிற்சி செய்தாலும் உடல் வலிமை அடையாமல் இருக்க இந்த தவறுகள்தான் காரணம்

உடற்பயிற்சி செய்யும் பலரும் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் விரைவில் உடல் வடிவை பெறலாம் என்ற தவறான எண்ணத்தில் சத்தான உணவுகளை அதிகம் சாப்பிடுகின்றனர். சிலர் சாப்பிடாமல் இருந்தால் விரைவில் சிக்ஸ

அனைத்து ஆண்களுக்குமே கட்டுமஸ்தான உடல் வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் அனைவராலும் அதனை பெற இயலாது என்பதே எதார்த்தம். ஏனெனில் கட்டுமஸ்தான உடலை பெற சீரான பயிற்சியும், விட முயற்சியும் தேவை. அதைவிட முக்கியமான ஒரு தேவை ஆரோக்கியமான உணவுமுறை.

common mistakes during body building

உடற்பயிற்சி செய்யும் பலரும் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் விரைவில் உடல் வடிவை பெறலாம் என்ற தவறான எண்ணத்தில் சத்தான உணவுகளை அதிகம் சாப்பிடுகின்றனர். சிலர் சாப்பிடாமல் இருந்தால் விரைவில் சிக்ஸ் பேக் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் சாப்பிடாமல் இருக்கின்றனர். இந்த இரண்டுமே தவறான நம்பிக்கைகள். நன்றாக உடற்பயிற்சி செய்தும் உங்கள் வலிமை அடையாமல் இருக்க இவைதான் காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொடக்க பிரச்சினைகள்

தொடக்க பிரச்சினைகள்

நான் நாளையிலிருந்து தொடங்குகிறேன் என்று உங்கள் உடற்பயிற்சி திட்டத்தை தொடர்ந்து தள்ளி போட்டு கொண்டே செல்பவரா நீங்கள்? உங்களால் எப்பொழுதுமே நீங்கள் நினைத்த உடலமைப்பை பெற முடியாது. ஏனெனில் உடற்பயிற்சியை பொறுத்தவரையில் திட்டமிடுவது முக்கியமல்ல, அதனை செயல்படுத்துவதே முக்கியம். திட்டமிட்டபடி உடற்பயிற்சி தொடங்குபவர்களே நினைத்த உடலமைப்பை பெற முடியும். சோம்பேறித்தனம்தான் உடற்பயிற்சியின் முதல் எதிரி.

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள்

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள்

உடற்பயிற்சி செய்பவர்கள் அனைவரும் ஆரோக்கியம் என நினைத்து குறைந்தளவு சர்க்கரை இருக்கிறது, குறைந்தளவு சோடியம் இருக்கிறது என்று அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறார்கள். இவை உங்களுக்கு எந்த விதத்திலும் பயன்பட போவதில்லை. இது போன்ற தயாரிப்புகள் அவற்றின் உண்மையான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் எதையுமே கொண்டிருக்காது. இவை உங்களுக்கு ஆரோக்கிய கேட்டைத்தான் உண்டாக்கும்.

தயாராக இல்லாமல் இருத்தல்

தயாராக இல்லாமல் இருத்தல்

தொழில்ரீதியான பாடி பில்டர்ஸ், விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் உறுதியான உடலமைப்புடன் இருக்க காரணம் அவர்கள் எப்பொழுதும் தயாராக இருப்பதுதான். நீங்கள் அப்படி தயாராக இருக்குறீர்களா? அலுவலகத்தில் இருக்கும்போதோ, நண்பர்களுடன் வெளியே செல்லும்போதோ உங்களுக்கு ஏற்ற சரியான உணவை நீங்கள் தேடுவதில்லை. அது தவறான ஒன்றாகும். இந்த சூழ்நிலையில் உங்களால் நினைத்த உடலமைப்பை பெறுவது என்பது இயலாத ஒன்று.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தவிர்ப்பது போல நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய மற்றொரு உணவு பதப்படுத்தப்பட்ட இறைச்சியாகும். இறைச்சி சாப்பிட்டால் மட்டும்தான் கட்டுமஸ்தான உடலை பெற முடியும் என்பது ம்,முற்றிலும் தவறான ஒரு கருத்தாகும். இறைச்சியை பதப்படுத்த அதில் சோடியம் சேர்க்கப்படும். உங்கள் உடலில் அதிகளவு சோடியம் சேர்வது உடற்பயிற்சிக்கு மட்டுமல்ல உங்கள் ஆரோக்கியத்திற்கும் ஏற்றதல்ல.

அதிகளவு சர்க்கரை

அதிகளவு சர்க்கரை

கார்போஹைட்ரேட் மட்டுமல்ல உங்கள் உடலில் அதிகளவு சர்க்கரை சேர்வதும் உங்கள் உடற்பயிற்சிகளுக்கு ஏற்றதல்ல. அதிகளவு சர்க்கரை உங்கள் தசைகளை பலவீனமடைய செய்வதுடன் உங்கள் இன்சுலின் சுரப்பியையும் பாதித்து உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஆபத்து விளைவிக்கிறது.

தவறான நேரத்தில் சாப்பிடுதல்

தவறான நேரத்தில் சாப்பிடுதல்

அதிகளவு புரோட்டின்கள் கிடைக்கக்கூடிய காலை நேர உணவை தவிர்த்து பசியால் மதிய உணவை முன்கூட்டியே சாப்பிட்டு இரவு உணவை ஒழுங்கற்ற நேரத்தில் சாப்பிடுவது எந்த முறையிலும் உங்களுக்கு பயனளிக்காது. இவ்வாறு சாப்பிட்டு நீங்கள் எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் அது "விழலுக்கு இறைத்த நீர்தான்". சீரான உடற்பயிற்சி போதுமான புரோட்டின் பவுடர் மட்டும் உங்களுக்கு நீங்கள் விரும்பும் உடலை தந்துவிடாது. சீரான உணவுமுறையும் அவசியம்.

மற்ற உணவுகளை சாப்பிடாமல் இருத்தல்

மற்ற உணவுகளை சாப்பிடாமல் இருத்தல்

உணவுமுறை குறித்து நீங்கள் திட்டமிடும்போது புரோட்டின், கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை பற்றி மட்டுமே சிந்திப்பீர்கள். இது மிகவும் தவறான ஒன்று. அனைத்து வகையான ஆரோக்கிய உணவுகளும் உங்களுக்கு அவசியம். உடல் வலுவிற்கு புரோட்டின் எந்த அளவு முக்கியமோ அதே அளவு சீரான கொழுப்பும் முக்கியம். எனவே மற்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளையும் குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, September 24, 2018, 19:00 [IST]
Desktop Bottom Promotion